இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு - இது ஏன் சொல்றாங்க தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
இளைச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு - இது ஏன் சொல்றாங்க தெரியுமா?


Sesame Seed For Weight Gain And Horse Gram For Weight Loss: பழங்காலத்தில் எடுத்துக் கொள்ளும் உணவுமுறையும், மேற்கொண்ட வாழ்க்கை முறையில் நம் முன்னோர்கள் நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ வழிவகுத்தது. ஆனால், இப்போது பசிக்காக சாப்பிடுவதிய விட ருசிக்காக சாப்பிடும் பழக்கத்தையே பின்பற்றி வருகின்றனர். இதனால் ஜங்க் ஃபுட், பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெய் பலகாரங்கள் என உடல் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் உணவுகளையே எடுத்துக் கொள்கின்றனர். இதில் கஷ்டம் என்னவென்றால், உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என தெரிந்தும் உண்பதே.

இந்த வகை உணவுகளால் உடல் மாற்றத்தில் முக்கியமாக ஏற்படுவது உடல் எடை அதிகரிப்பே ஆகும். எனினும், இன்னும் சிலர் பல்வேறு காரணங்களால் உடல் எடை மெலிதாகி எடை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நம் முன்னோர்கள் இதற்கு பழமொழிகளின் வாயிலாகவே நமக்கு தீர்வு தந்துள்ளனர். நம் வீட்டிலேயே இருக்கும் உணவுப் பொருள்களைக் கொண்டு உடல் எடையை ஏற்றவோ, உடல் எடையைக் குறைக்கவோ இயலும். அந்த வகையில் உடல் எடையை ஏற்ற உதவும் எள் குறித்தும், உடல் எடையைக் குறைக்க உதவும் கொள்ளு குறித்தும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Overeating Disadvantage: உண்பதற்காக வாழாதே.. உயிர் வாழ்வதற்காக உண்.. விளக்கம் இங்கே..

இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு

நம் முன்னோர்கள் வரையறுத்த “இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு” பழமொழியின் அர்த்தம் இப்போது புரிகிறதா? ஆம். இளைத்தவனுக்கு எள்ளு என்பது உடல் எடை குறைவாக இருப்பவனை சுட்டிக் காட்டுகிறது. கொழுத்தவனுக்கு கொள்ளு என்பது உடல் எடை அதிகமாக இருப்பவனை சுட்டிக் காட்டுகிறது. அதாவது, குறைவான உடல் எடையைக் கொண்டவர்கள் தங்களது உடல் எடையை அதிகரிக்க எள் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல, அதிக உடல் எடையைக் கொண்டு, எடை குறைப்பு பயணத்தை மேற்கொள்பவர்கள் கொள்ளு எடுத்துக் கொள்ளலாம்.

உடல் எடையை அதிகரிக்க எள் எவ்வாறு உதவுகிறது?

எள் என்பது Sesamum Indicum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. எள் வகைகள் மூவகை வர்ணங்களைக் கொண்டதாகும். அவை வெள்ளை, கருப்பு மற்றும் செவ்வெள். இதில் மற்ற இரு வகைகளுடன் ஒப்பிடுகையில் கருப்பு நிற எள்ளில் தான் மருத்துவ குணங்கள் அதிகம் காணப்படுகிறது. எனவே தான் கருப்பு எள்ளிலிருந்து எண்ணெய் தயாரிக்கப்பட்டு உணவில் பயன்படுத்தப்படுகிறது. எள்ளில் உஷ்ணத்தன்மை மற்றும் எண்ணெய்த் தன்மை நிறைந்துள்ளதால் இவை உடல் எடை அதிகரிப்பிற்கு உதவுகிறது.

எள்ளில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகையைத் தவிர்க்க உதவுகிறது. எள்ளை எண்ணெயாக உணவில் சேர்த்துக் கொள்ளும் போது உடல் எடை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக, வயதுக்கு வந்த பெண்கள் உடல் எடை கூட எள்ளில் தயாரிக்கப்பட்ட உணவுகளைக் கொடுப்பர். மேலும் எள் உட்கொள்வது உடலுறுப்புகளை வலுவடையச் செய்யவும், மூளைக்கு நல்ல தெளிவைத் தரவும் உதவுகிறது. இது நல்ல பசியைத் தூண்டுவதால் அதிகளவு உணவு உட்கொள்ள வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Too Much Milk Effects: பழக பழக பாலும் புளிக்கும் - இது எதுக்கு சொல்றாங்க தெரியுமா?

உடல் எடை குறைய கொள்ளு எவ்வாறு உதவுகிறது?

கொள்ளு ஆங்கிலத்தில் Horse Gram என அழைக்கப்படுகிறது. இது குதிரைகளுக்கு உணவாக வழங்கப்படுவதால் இவ்வாறு கூறப்படுகிறது. இது Macrotyloma Uniflorum என்ற தாவரவியல் பெயரால் அழைக்கப்படுகிறது. உடலில் உள்ள கொழுப்பை குறையக்கூடிய இயற்கை உணவாக கொள்ளு அமைகிறது. கொள்ளுவில் உள்ள வறட்சி குணம் உடலை இளைக்க உதவுகிறது. மேலும் கொள்ளுவில் உஷ்ணத்தன்மை அதிகமாக இருப்பதால் சிறிய இரத்தக்குழாயில் கொழுப்பு அடைப்பு ஏற்பட்டாலும் அதை அகற்றக்கூடிய சக்தி கொள்ளு உதவுகிறது.

இது உடலில் உள்ள கொழுப்புச் சத்து கரைகிறது. இந்த கரையும் கொழுப்புகள் மலத்தின் வழியாகவோ அல்லது சிறுநீரகம் மூலமாகவோ வெளியேறுகிறது. மேலும் இது எளிதில் செரிமானம் அடையச் செய்கிறது. மேலும் கொள்ளுக் கஞ்சி அருந்துவது மூச்சுத்திணறல், இருமல், நாள்பட்ட ஜலதோஷம், விக்கல், வயிற்று உப்புசம், கல்லடைப்பு போன்ற நோய்களிலிருந்து விடுபட உதவுகிறது. எனினும், கொள்ளு உடலின் வெப்பத்தை அதிகப்படுத்துவதால், கொள்ளின் உபயோகத்தை அதிக அளவில் உள்ளுக்கு சாப்பிடுவதை விட வெளிப்புறமாக பயன்படுத்துவது சிறந்த பலனைத் தரும்.

குறிப்பு

இவ்வாறு எள் மற்றும் கொள்ளு இரண்டுமே உடல் எடை கூட மற்றும் உடல் எடை குறைய முறையே பயன்படுத்தப்படுகின்றன. எனினும், உணவில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யும் முன்னதாக நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதன் மூலம் தீவிர நோய்களிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு! குறிப்பா இந்த உணவுகளை சாப்பிடவே சாப்பிட்ராதீங்க

Image Source: Freepik

Read Next

Horse Gram Vada: சுவையான மொறு மொறு கொள்ளு வடை ரெசிபி! இத வெச்சே வெயிட் குறைக்கலாம்

Disclaimer