Fruit For Constipation: பேரிக்காயை இப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை எளிதில் குணமாகும்!

தினமும் ஒரு பேரிக்காய் சாப்பிட்டு வந்தால் வயிறு சம்மந்தமான பிரச்சினைகள் நீங்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?
  • SHARE
  • FOLLOW
Fruit For Constipation: பேரிக்காயை இப்படி சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சினை எளிதில் குணமாகும்!


How to Eat Pears to Get Relief from Constipation: பேரிக்காயில் அதிக அளவு சத்து மற்றும் புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. மேலும் இதில், வைட்டமின் சி, வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் உள்ளது. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் பூர்த்தி செய்ய, உங்கள் உணவில் பேரிக்காயை சேர்ப்பது மிகவும் நல்லது. அதுமட்டும் அல்ல, பேரிக்காய் சாப்பிடுவதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

 

இது வயிறு தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யவும் உதவுகிறது. பேரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கலில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், பேரிக்காய் சாப்பிடுவதால் அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும். மலச்சிக்கல் பிரச்சினையில் இருந்து விடுபட பேரிக்காயை எப்படி சாப்பிடுவது என பார்க்கலாம்.

 

இந்த பதிவும் உதவலாம் : Black Diamond Apple: கருப்பு ஆப்பிள் பற்றி கேள்விப்பட்டதுண்டா? அதன் நன்மைகள் இங்கே!

 

மலச்சிக்கலை போக்க பேரிக்காயை எப்படி சாப்பிடுவது?

 

How To Check Wax On Fruit| नाशपाती का फल| Wax Fruit Ke Bare Me

 

வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்

 

மலச்சிக்கலை போக்க பேரிக்காய் தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் காலையில் வெறும் வயிற்றில் பேரிக்காயை சாப்பிட்டு வந்தால் வயிறு தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். இதனால், அஜீரணம், வாயுத்தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

 

பேரிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடும்போது, அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சப்படும். இந்நிலையில், போதுமான அளவு நார்ச்சத்து கிடைக்கும், இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

 

பேரிக்காய் ஜூஸ்

 

மலச்சிக்கல் ஏற்பட்டால் பேரிக்காய் சாறு குடிக்கலாம். இதற்கு நீங்கள் ஒரு பெரிய அளவு பேரிக்காயை எடுத்து, அதன் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். இப்போது அவற்றை மிக்சியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

 

பின்னர், ஒரு வடிகட்டியில் உதவியால் சாற்றை வடிகட்டி குடிக்கவும். பேரிக்காய் சாற்றை தினமும் குடித்து வந்தால், உங்கள் வயிறு மற்றும் குடல் நன்கு சுத்தம் செய்யப்படும். பேரிக்காய் சாறு உடலை டீடாக்ஸ் செய்ய உதவுகிறது.

 

இந்த பதிவும் உதவலாம் : Drinking Water Mistakes: தண்ணீர் குடிக்கும்போது மறந்தும் இந்த தவறுகளை செய்யாதீங்க!

 

ஃப்ரூட் சாலட்டில் பேரிக்காயை சேர்த்து சாப்பிடலாம்

 

பேரிக்காயை ஃப்ரூட் சாலட்டில் கலந்தும் சாப்பிடலாம். சாலட் செய்ய பப்பாளி, கொய்யா, ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

அதில் பேரிக்காய் துண்டுகளையும் கலந்து தினமும் சாப்பிடவும். உணவு உண்ணும் முன் ஃப்ரூட் சாலட் சாப்பிடுவது நல்லது. இதனால், போதுமான அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கும்.

 

மலச்சிக்கலைப் போக்க இந்த மற்ற உதவிக்குறிப்புகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம்:

 

Constipation Problem: खाने में की गई ये गलतियां बढ़ाती है कब्ज की समस्या |  eating habits that cause constipation | HerZindagi

 

  • தண்ணீர், இயற்கையாக இனிப்பான பழங்கள் மற்றும் காய்கறி சாறுகள் அல்லது தெளிவான சூப்களை குடிக்கவும்.
  • சில்லுகள், துரித உணவுகள், இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளைத் தவிர்க்கவும்.
  • வீக்கத்தைத் தவிர்க்க உங்கள் உணவில் படிப்படியாக நார்ச்சத்து சேர்க்கவும்.
  • நார்ச்சத்து உங்கள் செரிமானப் பாதை வழியாக செல்ல உதவும் வகையில் ஏராளமான திரவங்களை குடிக்கவும்.

 

Pic Courtesy: Freepik

Read Next

Vitamin B12 Foods: வைட்டமின் பி12 நிறைந்த சைவ உணவுகள் இங்கே..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version