Apple Juice on Empty Stomach: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறுவார்கள். ஆப்பிளில் உள்ள சத்துக்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து உடலை நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடலின் மெட்டபாலிசம் நன்றாக இருக்கும். இதனால் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
ஆனால் எதையும் சரியான நேரத்தில், சரியான முறையில் உட்கொள்வது தான் உடலுக்கு நன்மையை தரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த வகையில், காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடித்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இது குறித்து விரிவாக காண்போம்.

வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் (apple juice benefits on empty stomach)
ஆப்பிளில் உடலுக்குத் தேவையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இது தவிர, ஆப்பிளில் அத்தியாவசிய தாதுக்கள், பொட்டாசியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால், உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதோடு, பல நன்மைகளும் கிடைக்கும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகள் பின்வருமாறு,
ஆஸ்துமா நிவாரணம்
காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதில் உள்ள பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், நுரையீரல் நோய்களில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். மேலும் ஆப்பிள் ஜூஸில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆஸ்துமா பிரச்சனையை தீர்ப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆஸ்துமாவைத் தடுக்கவும், அதிலிருந்து விடுபடவும், தினமும் காலையில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது நல்லது.
இதையும் படிங்க: Dragon Fruit: சர்க்கரை நோயாளிகள் டிராகன் பழம் சாப்பிடலாமா? -உண்மை என்ன?
செரிமானத்தை ஊக்குவிக்கும்
வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது, உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, செரிமானத்தை சீராக்கும். இதனால் மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்னைகள் ஏற்படாது.
எடை இழப்புக்கு உதவும்
வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள போதுமான அளவு நார்ச்சத்து உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். இதனால் நீங்கள் அடிக்கடி சாப்பிடமாட்டீர்கள். இதனால் உங்கள் எடை கட்டுக்குள் இருக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்னை தீரும்
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்பட்டால், காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் சத்துக்கள் ஆப்பிள் ஜூஸில் காணப்படுகின்றன.
கண்களுக்கு நன்மை பயக்கும்
ஆப்பிள் ஜூஸ் குடிப்பதால் கண்பார்வை மேம்படும். ஆப்பிளில் போதுமான அளவு வைட்டமின் ஏ உள்ளது. எனவே, அதன் சாற்றை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உங்களுக்கு சிறந்த பலன்கள் கிடைக்கும். இது உங்கள் கண்பார்வை அதிகரிக்கிறது மற்றும் கண் தொடர்பான நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் ஜூஸ் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஆப்பிள் ஜூஸில் உள்ள சத்துக்கள் உடலை நோய்களில் இருந்து பாதுகாத்து, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
Image Source: Freepik