Dragon fruit for diabetes: நீரழிவு நோயாளிகள் டிராகன் பழம் சாப்பிடலாமா என்பதற்கான ஆய்வு மற்றும் நிபுணர்களின் விளக்கங்களை அறிந்து கொள்ளுங்கள்…
டிராகன் பழத்தின் நன்மைகள்:
நீரழிவு நோய் அவர்கள் சாப்பிடக்கூடிய ஒவ்வொரு பழங்களைக் கூட பார்த்து.. பார்த்து சாப்பிட வேண்டி உள்ளது. வாழைப்பழம்,கொய்யா, தர்பூசணி போன்ற பழங்களை சாப்பிடுவதில் எப்போதும் தயக்கம் உண்டு. இந்த வரிசையில் அடுத்ததாக அமெரிக்காவை பூர்வீகமாக கொண்ட கற்றாழை இனத்தைச் சேர்ந்த டிராகன் பழம் உள்ளது. தாய்லாந்து போன்ற ஆசிய நாடுகளிலும் இது மிகவும் பிரபலமானது, அங்கு இது பிடாயா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

டிராகன் பழம் பொதுவாக அதிக ஊட்டமளிக்கும் வெப்பமண்டல பழமாகும். இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக ப்ரீயாபெட்டிக் நோயாளிகளுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
டிராகன் பழம் சிவப்பு, வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்கிறது. மேலும், இந்த பழத்தின் அனைத்து நிறங்களும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.
டிராகன் பழம் ஆன்டிஆக்ஸிடன்ட்களின் நம்பமுடியாத மூலமாகும். ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக செயல்படுகின்றன. இந்த ஃப்ரீ ரேடிக்கல்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?
புளிப்புச் சுவையுடைய இந்தப் பழம் சர்க்கரை நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, ஏனெனில் இது மிகவும் சத்தானது, சில ஆய்வுகள் இதை ஒரு நீரிழிவுக்கான சாத்தியமான சிகிச்சை என்றும் கூறுகின்றனர்.
டிராகன் பழமானது கணைய பீட்டா செல்களை மீளுருவாக்கம் செய்து உடல் பருமன் அபாயத்தைக் குறைப்பதன் மூலம் நீரிழிவு எதிர்ப்பு விளைவை உருவாக்குகிறது என ஆய்வு முடிவுகள் காட்டுகின்றன.
இதையும் படிங்க: அடடா!!.. மாதுளை இலைக்கு இவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கா?
இந்த பழம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று அறியப்படுகிறது. குறிப்பாக டைப்-2 நீரிழிவு நோயாளிகளைக் காட்டிலும், நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலைகளில் இதன் தாக்கம் கணிசமான அளவு சிறப்பாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
டிராகன் பழம் கணைய பீட்டா செல்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம் நீரிழிவு நோய்க்கான எதிர்ப்பு விளைவைக் கொண்டுள்ளது. மேலும் இந்த பழங்களை உட்கொள்வது இரத்த குளுக்கோஸ் அளவைக் குறைப்பதில் நன்மை பயக்குகிறது. இந்த பழத்தில் உள்ள மெக்னீசியம் இன்சுலின் எதிர்ப்பிலிருந்து உடலை பாதுகாப்பதோடு, இன்சுலினை மேம்படுத்தவும் உதவுகிறது.
இந்த பழம் குறைந்த கிளைசிமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் நீரழிவு நோயாளிகள் இதனை நிச்சயம் சாப்பிடலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதன் GI குறியீடு அதிகமாகவும் இல்லாமல், குறைவாகவும் இல்லாமல் மிதமாக இருப்பதால் நீரழிவு நோயாளிகள் மிதமான அளவில் டிராகன் பழத்தை சாப்பிடுவது நல்லது.
டிராகன் பழம் உட்கொள்வதால் மட்டுமே நீரழிவு நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த முடியாது, ஆரோக்கியமான வாழக்கை முறை அவசியம் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். அவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறை இல்லாதவர்கள் டிராகன் பழம் சாப்பிடுவதால் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்த முடியாது.
Image Source: freepik