Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Expert

Black Tea: பால் டீ மட்டுமில்ல அளவுக்கு அதிகமாக பிளாக் டீ குடிப்பதும் ஆபத்துதான்!

Too Much Black Tea Side Effects: இந்தியர்கள் அனைவருக்கும் பிடித்த பானங்களில் ஒன்று டீ. காலையில் துவங்கி இரவு வரை குறைந்ததும் 3-4 முறையாவது டீ அல்லது காஃபி குடிப்போம். அதே நேரத்தில், குளிர்காலத்தில், மக்கள் சூடாக உணர ஒரு நாளைக்கு 5-6 கப் டீ குடிப்போம். அளவுக்கு அதிகமாக டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல என நம்மில் பலருக்கு தெரியும்.

குறிப்பாக, வயிற்றுப் பிரச்சனையின் போது அதிகமாக தேநீர் அருந்தினால், அது வாயு, அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வயிற்றில் வீக்கம் போன்ற அறிகுறிகளை மிகவும் தீவிரமாக்கும். இது தவிர, டீயில் காஃபின் உள்ளது, இது இரவில் தூக்கமின்மையை ஏற்படுத்தும். இவை அனைத்தும் பால் டீ குடிப்பதால் ஏற்படுபவை. நம்மில் பலர் பிளாக் டீ குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என அடிக்கடி குடிப்போம். ஏனென்றால், அதில் காஃபின் இல்லை.

இந்த பதிவும் உதவலாம் : Black Tea Benefits: பிளாக் டீ உடலுக்கு நல்லதா? கெட்டதா?

இது தவிர, அதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் பாலிபினால்கள் மற்றும் பல செயலில் உள்ள சேர்மங்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். எனவே, பல முறை மக்கள் ஒரு நாளைக்கு பல கப் பிளாக் டீ குடிக்கிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று நம்புகிறார்கள்.

ஆனால், உங்களுக்குத் தெரியுமா, பிளாக் டீயை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அது ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கை விளைவிக்கும். ஆயுர்வேத மருத்துவரும் தைராய்டு நிபுணருமான டாக்டர் அல்கா விஜயன் (BAMS Ayurveda) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிளாக் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி விவரித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அவைற்றை பற்றி இந்த தொகுப்பில் தெளிவாக பார்க்கலாம்.

அதிகமாக பிளாக் டீ குடிப்பது ஆபத்தா?

டாக்டர் அல்கா விஜயன் கருத்துப்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு பல கப் பிளாக் டீயை தொடர்ந்து உட்கொண்டால், அது அவரது உடலில் உள்ள வாத தோஷத்தின் சமநிலையை சீர்குலைத்து அதிகப்படியான நிலைக்கு வழிவகுக்கும், இதன் காரணமாக உடலில் பல நோய்கள் ஏற்படலாம். அதாவது,

  • மலச்சிக்கல்
  • உயர் இரத்த அழுத்தம்
  • பலவீனம்
  • கீல்வாதம்
  • ஓய்வின்மை
  • குடல் அல்லது செரிமான பிரச்சனை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Black Tea Benefits: ஒரு கப் பிளாக் டீ குடிப்பதன் நன்மைகள் என்ன?

மேலும் அவர் கூறுகையில், பிளாக் டீ துவர்ப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. மிகவும் கசப்பான சுவை உள்ள எதை உட்கொண்டாலும், அது உடலில் வாத தோஷத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள வாத தோஷத்தின் ஏற்றத்தாழ்வு, கீழ் முதுகில் காணப்படும் சீரழிவு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இதனால் உடலில் வலி போன்ற வலி ஏற்படுகிறது. மக்கள் பொதுவாக காலையில் எழுந்தவுடன் இந்த வகையான வலியை உணர்கிறார்கள்.

அளவுக்கு அதிகமாக எதை உட்கொண்டாலும் அவை நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, என்ன உணவாக இருந்தாலும் அளவாக சாப்பிடுங்கள்.

Pic Courtesy: Freepik

Read Next

இனி இந்த கலர் பாக்கெட் பால் கிடையாது. எந்த கலர் பாக்கெட் பால் உடலுக்கு நல்லது தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content