$
Health Benefits Of Black Tea: கேமல்லியா சினென்சிஸ் தாவரத்தில் இருந்து எடுக்கப்படும் தேயிலையில் தான் பிளாக் டீ செய்யப்படுகிறது. இது உலகளவில் தண்ணீருக்கு நிகராக அதிகபதியாக குடிக்கப்படும் பானமாக கருதப்படுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடண்டகள் அதிகம் உள்ளன. மேலும் இதில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இது குறித்து இங்கே காண்போம் வாருங்கள்.
எலும்புகளை வலுவாக்கும்

பிளாக் டீயில் உள்ள ப்ளவனாய்டுகள், எலும்புகளை வலிமையாக்கும். இதில் உள்ள பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் எலும்புகளை வலுவாக்கின்றன.
உடல் எடை குறையும்
பிளாக் டீ குடிப்பதால் குடல் இயக்கம் சீராகும். இதனால் செரிமான செயல்முறை விரைவாக செயல்படும். இதிலுள்ள ப்ளவனாய்டுகள், எடையை குறைக்க உதவுகிறது. மேலும் கல்லீரலில் கொழுப்பு தேங்காமல் பார்த்துக்கொள்கிறது. நீங்கள் தினமும் உடற்பயிற்சி செய்த பிறகு ஒரு கப் பிளாக் டீ குடியுங்கள். இது உடற்பயிற்சி திறனை அதிகரித்து எடையை குறைக்க உதவும்.
இதையும் படிங்க: Apple Peel Tea: தினமும் காலை ஆப்பிள் பீல் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!
புற்றுநோயை குறைக்கிறது

பிளாக் டீ குடிப்பது உடலில் உள்ள அசாதாரண செல்களை அழிக்க உதவுகிறது. இது புற்றுநோய்க்கு எதிரான ப்ரீரேடிக்கலை தடுக்கிறது. இதனால் புற்றுநோய் செல்கள் உருவாவதை தடுக்கிறது. குறிப்பாக தோல், கருப்பை, மார்பகம் மற்றும் வயிறு புற்றுநோய்களைத் தடுப்பதில் பிளாக் டீ முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு நோயை குறைக்கும்
பிளாக் டீ குடிப்பது, டைப் 2 நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது. இதில் ப்ளவனாய்டுகள் மற்றும் பாலிபினால்கள் அதிகளவில் காணப்படுகின்றன. இது கிளைசெமிக் குறியீட்டை குறைக்கிறது.
வாய் ஆரோக்கியம்

பிளேக் உருவாக்கம், ஈறுகளில் இரத்த போக்கு, வாய் துர்நாற்றம் போன்ற பல வாய்வழி பிரச்சினைகளை தீர்க்கிறது. இதில் உள்ள கேடசின், ஃபிளாவனாய்டு மற்றும் டானின் போன்ற பாலிபினால்கள் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாய்வழி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் பற் சிதைவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அளிக்கிறது.
இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது
இதய நோயளிகளில் கரோனரி தமனி செயலிழப்பை மீட்டெடுக்கும் தன்மை பிளாக் டீ-யில் உள்ளது. இதில் காலிக் அமிலம், ஃபிளாவனோல்ஸ் மெற்றும் தீஃப்ளேவின்ஸ் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துகள் இருதய பிரச்சினைகளைத் தடுக்கும். இதயத்திற்கு செல்லும் இரத்த தமனிகளையும் மற்றும் நாளங்களையும் சரி செய்கின்றன.
மன அழுத்தத்தை தடுக்கிறது
மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோலின் உற்பத்தியை குறைக்க பிளாக் டீ உதவுகிறது. இதில் உள்ள அமினோ அமிலம் மன அழுத்தத்தை குறைக்கிறது.
Image Source: Freepik