Apple Peel Tea: பலரின் காலை தொடங்குவது டீ அல்லது காபி உடன் தான். டீ, காபி இல்லை என்றால் அவர்களுக்கு அந்த பொழுதே சிறக்காது. பால் தேநீர் அதிகாலை உட்கொள்வதால் ஒருசிலருக்கு தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனால் பலரும் பால் டீக்கு பதிலாக மூலிகை டீயை தேடிச் செல்கின்றனர். இது உடலுக்கு அளப்பரிய பலன்களை தருகிறது. அப்படியான ஆப்பிள் பீல் டீ குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
தினசரி காலை ஆப்பிள் பீல் டீ
ஆப்பிள் பீல் டீ என்பது, பலரும் ஆப்பிளை தேடித்தேடி வாங்கி சாப்பிடுவார்கள். காரணம் ஆப்பிளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. எந்தவொரு பிரச்சனைக்கும் மருத்துவர் பரிந்துரை செய்யும் பழம் ஆப்பிள்தான். ஏராளமானோர் ஆப்பிளை சாப்பிட்டு தோலை எரிந்து விடுகிறார்கள்.
ஆப்பிள் தோல்களை தூக்கி எறிவதற்கு பதிலாக, நீங்கள் தேநீர் செய்யலாம். தினமும் காலையில் ஆப்பிள் பீல் டீ குடிப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதோடு, பல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
மினரல்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் ஆப்பிள் தோலில் உள்ளது. ஆப்பிள் பீல் டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் அதை எப்படி செய்வது என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
ஆப்பிள் பீல் டீ குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

ஆப்பிள் பீல் டீ குடிப்பது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது மட்டுமின்றி, வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. வயிற்றில் தொற்று மற்றும் அஜீரணம் ஏற்பட்டால் தோலில் இருந்து தேநீர் குடிப்பதும் நன்மை பயக்கும்.
ஆரோக்யா ஹெல்த் சென்டரின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி டி திரிபாதி இதுகுறித்து கூறுகையில், "ஆப்பிளின் தோல்களில் அதிக சத்துக்கள் உள்ளன. பயனற்றதாக கருதி மக்கள் அவற்றை தூக்கி எறிந்து விடுகிறார்கள், ஆனால் நீங்கள் அவற்றை பல வழிகளில் பயன்படுத்தலாம்".
ஆப்பிள் தோல் டீ உடலுக்கு நல்லதா?
- எடை குறைப்பதற்கு நன்மை பயக்கும்
இன்றைய காலகட்டத்தில் சமநிலையற்ற உணவுப்பழக்கம் மற்றும் மோசமான வாழ்க்கை முறை காரணமாக உடல் பருமன் பிரச்சனை வேகமாக அதிகரித்து வருகிறது. உடல் பருமனால் ஏணைய நோய்களுக்கு ஆளாகிறோம்.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உடல் பருமனை போக்கவும், தினமும் காலையில் ஆப்பிள் பீல் டீ குடிப்பது நன்மை பயக்கும். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் காணப்படுகின்றன. ஆப்பிள் பீல் டீயை தொடர்ந்து குடிப்பதால் உடலில் கொழுப்பு எரியும்.
- நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு
உடலின் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, நீங்கள் விரைவாகவே ஒருசில நோய்களுக்கு ஆளாகிவிடுகிறீர்கள். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தினமும் ஆப்பிள் தோல் டீ குடிக்கலாம். ஒரு நபருக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது மிக முக்கியம் ஆகும்.
- மூட்டு வலி நீங்கும்
ஆப்பிளில் உள்ள பண்புகள் மூட்டு வலியைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிள் பீல் டீயை தொடர்ந்து குடிப்பதால் மூட்டு வலி போன்றவைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
- சருமத்திற்கு நன்மை பயக்கும்
ஆப்பிள் தோல் தேநீர் குடிப்பது சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும், பிரச்சனைகளைத் தவிர்க்கவும் பெருமளவு உதவும். ஆப்பிள் பீல் டீயை தொடர்ந்து குடிப்பதால் சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். ஆப்பிளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்க உதவுகிறது.
- வயிறு ஆரோக்கியம்
வயிறு மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்க ஆப்பிள் பீல் டீ குடிப்பது நன்மை பயக்கும். இதனை தொடர்ந்து உட்கொள்வதால் அஜீரணம், வயிறு வாயு மற்றும் வீக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
ஆப்பிள் தோல் டீ தயாரிப்பது எப்படி?

ஆப்பிள் பீல் டீயை வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம். இதற்கு முதலில் ஆப்பிள் தோல்களை ஒரு கிண்ணத்தில் எடுத்து கழுவி நன்றாக சுத்தம் செய்யவும். இப்போது அவற்றை ஒரு கிளாஸ் தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும்.
அதில் இரண்டு இலவங்கப்பட்டை துண்டுகளை சேர்க்கவும். இந்த தேநீரை நன்கு கொதிக்கவைத்து, வெந்ததும் வடிகட்டவும். தேநீரை வடிகட்டி ஒரு கோப்பையில் எடுத்து சிறிது ஆறியதும் அதில் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து பருகவும்.
இந்த டீயை தொடர்ந்து குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளை சந்தித்தால் இதை அருந்தும் முன் மருத்துவரை அணுகுவது நல்லது.
Image Source: FreePik