அருமையான ராகி களி… சக்கத்தான நாட்டுக்கோழி குழம்பு… இப்படி செய்யுங்க…

  • SHARE
  • FOLLOW
அருமையான ராகி களி… சக்கத்தான நாட்டுக்கோழி குழம்பு… இப்படி செய்யுங்க…


ஒரு காலத்தில், கிராமங்களில் ராகி களி அதிகமாக உட்கொள்ளப்பட்டது. பின்னர் பல வகையான உணவுகள் வந்த பிறகு, ராகி கலி மறைந்துபோனது. ஆனால், இப்போது இளைஞர்கள் மத்தியில், ஆரோக்கியத்தில் ஈடுபாடு அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக ராகி களி அதிகம் தேடப்பட்டு வருகிறது.

ஆரோக்கியமான உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் தங்கள் உணவின் ஒரு பகுதியாக ராகி களியை எடுத்துக் கொள்ள வேண்டும். சூடான ராகி களியை நாட்டுக்கோழி குழம்புடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

ராகியின் நன்மைகள் (Ragi Benefits)

ராகியில் கால்சியம், இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் அயோடின் ஆகியவை நிறைந்துள்ளன. இந்த தானியத்தில் கொழுப்பு சதவீதம் குறைவாக உள்ளது. இது மிக எளிதாக ஜீரணமாகும். பசையம் குறைபாடு உள்ளவர்கள் இதை உட்கொள்ளலாம்.

ராகியில் உள்ள கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. உடல் சூடு உள்ளவர்களுக்கும் இது நன்றாக வேலை செய்யும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் ராகியை முயற்சி செய்யலாம். இதற்கு ராகி களி சிறந்த தேர்வாக இருக்கும். இதனை செய்வது எப்படி என்பதை இங்கே காண்போம்.

அற்புதமான ராகி களி ரெசிபி (Ragi Kali Recipe)

தேவையான பொருட்கள்

ராகி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
நெய் - 4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்னெய் - சிறிதளவு

செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் மற்றும் 4 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • மற்றொரு பாத்திரத்தில் 2 கப் ராகியை, 2 கப் தண்ணீர் சேர்த்து, கட்டுகள் இல்லாமல் கலக்கிக்கொள்ளவும்.
  • கலக்கி வைத்துள்ள ராகியை, நெய் சேர்த்து கொதிக்க விட்ட தண்ணீரில் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • குறைந்த தீயில் மெதுவாக கிளறிக்கொண்டே இருக்கவும். சுமார் 5 முதல் 10 நிமிடங்கள் கிளறவும்.
  • ராகி கெட்டியாக மாரும். இந்த நேரத்தில் அடுப்பை அணைக்கவும்.
  • பின் கையில் தண்ணீர் தடவிக்கொண்டு, சூடாக இருக்கும் போதே, ராகி மாவை உருண்டை பிடித்துக்கொள்ளவும்.
  • இதில் நல்லெண்ணெய் சேர்த்துக்கொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
  • அவ்வளவு தான் பிரமாதமான ராகி களி தயார். இதனை நாட்டுக்கோழி குழம்புடன் சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.

ருசியான நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது? (Nattu Kozhi Kulambu Recipe)

தேவையான பொருட்கள்

பட்டை - 2 குச்சி
கிராம்பு - 2
கசகசா- 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 2 டீஸ்பூன்
நாட்டுக்கோழி - 1/2 கிலோ
மஞ்சள் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1 டீஸ்பூன்
எலுமிச்சை ஜூஸ் - 1 டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிளை - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
கொத்தமல்லி இலை - 1 கை பிடி

செய்முறை

  • கோழியை நன்கு கழுவி மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து 5 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  • இதனுடன் மிளகாய் தூள், மல்லித் தூள், எலுமிச்சை சாறு, கரம் மசாலா தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 20 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
  • ஒரு சிறிய கடாயில் மல்லி விதைகள், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து வாசம் வரும் வரை வதக்கி, தனியாக எடுத்துக்கொள்ளவும்.
  • அதே கடாயில் கசகசா மற்றும் தேங்காய் சேர்த்து, கசகசா வெடித்து வரும் வரை வதக்கவும்.
  • பின்னர் வதக்கிய அனைத்தையும் ஒன்று சேர்த்து அரைக்கவும்.
  • தற்போது பிரஷர் குக்கரில் 5 ஸ்பூன் எண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் சூடானதும், வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கிய பின், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட், கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
  • பின்னர் ஊற வைத்த கோழியை இதனுடன் சேர்த்து, நன்கு கலந்து விடவும்.
  • தற்போது, மெதுவான தீயில் மூடிபோட்டு, 5 முதல் 7 நிமிடங்கள் வேக விடவும்.
  • பின்னர் மூடியை திறந்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விடவும்.
  • குக்கரை மூடி 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
  • பின்னர் அடுப்பை அணைத்து, மூடியை திறந்து, கொத்தமல்லி சேர்த்து நன்கு கலந்து விடவும்.
  • அவ்வளவு தான், வீடே மனக்கும் நாட்டுக்கோழி குழம்பு ரெடி.
  • இதனை ராகி களியுடன் சேர்த்து சாப்பிடவும்.

Image Source: Freepik

Read Next

ஏன் வால்நட்டை ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்