Expert

Weight Loss Tips: வெறும் ஒரு வாரம் இந்த பானத்தை குடித்தால் போதும்; தொப்பை வெண்ணெய் போல கரைந்து விடும்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Tips: வெறும் ஒரு வாரம் இந்த பானத்தை குடித்தால் போதும்; தொப்பை வெண்ணெய் போல கரைந்து விடும்!

கோடையில் சூரிய ஒளி மற்றும் வெப்ப அலை காரணமாக உடலில் இருந்து அதிகமாக வியர்வை வெளியேறுகிறது. எனவே, குளிர்காலத்தை விட கோடையில் உடல் எடையை குறைப்பது சற்று எளிது. இந்த சீசனில் காலை அல்லது மாலையில் எந்த பிரச்சனையும் இல்லாமல் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யலாம். நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி நமது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Fenugreek Leaves: தொங்கும் தொப்பையை குறைக்க இந்த ஒரு கீரை போதும்!!

ஒரு வேலை நீங்களும் என்னை போல சோம்பேறியாக இருந்தால், உங்கள் தொப்பையை வெண்ணெய் போல கரைக்க உதவும் சில உதவிக்குறிப்புகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். உங்களுக்கு தொப்பையை குறைக்கும் எண்ணம் இருந்தால், இந்த சிறப்பு பானத்தை முயற்சி செய்யலாம். இந்த பானம் குறிப்பாக நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

இதன் குளிர்ச்சியான விளைவு, தொப்பை கொழுப்பை வேகமாக கரைக்கிறது. டயட்டீஷியன் மன்ப்ரீத் கல்ரா, தனது இண்ஸ்டா பக்கத்தில் இது குறித்த ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார். நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையை கொண்டு இந்த பானத்தை எப்படி தயாரிப்பது மற்றும் இதன் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Obesity Management: டீ, காபி குடிச்சா உடல் பருமன் குறையுமா.? அது எப்படி.?

நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டை டீ எப்படி தயாரிப்பது?

தேவையான பொருட்கள்:

நாவல் பழம் - 2.
இலவங்கப்பட்டை - ஒரு சிட்டிகை.
ஜாதிக்காய் - ஒரு சிட்டிகை.
துளசி விதைகள் - 1 ஸ்பூன் ஊறவைத்தது.
தண்ணீர் - 30 மிலி.

செய்முறை:

  • முதலில் நாவல் பழத்தில் இருந்து விதைகளை அகற்றி அவற்றை நன்கு கழுவவும்.
  • ஒரு கப் எடுத்து, துளசி விதைகள் தவிர அனைத்து பொருட்களையும் கலக்கவும்.
  • பின், ஒரு ஷாட் கிளாஸின் விளிம்பை எலுமிச்சை தடவி, அதை கல் உப்பில் முக்கி எடுக்கவும்.
  • இந்தக் கிளாஸில் தயார் செய்த ஜாமுன் சாறு மற்றும் ஊறவைத்த துளசி விதைகளைச் சேர்த்துப் பரிமாறவும்.

இந்த நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டை பானத்தை காலை 11 மணியளவில் மத்திய உணவாக எடுத்துக் கொண்டால், அது உடல் எடையை குறைக்க உதவும்.

எடை குறைப்புக்கு இந்த பானம் எவ்வாறு உதவும்?

ஜாமூனில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால், ஜாமூன் மற்றும் இலவங்கப்பட்டை பானங்கள் வயிற்றை நீண்ட நேரம் நிரம்பியதாக உணரவைக்கும். இதன் காரணமாக நீங்கள் கூடுதலாக சாப்பிடுவதை தவிர்க்கலாம். கூடுதலாக சாப்பிடாத போது, ​​எடை தானாகவே குறையும்.

நாவல் பழம் மற்றும் இலவங்கப்பட்டையின் சத்துக்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். வளர்சிதை மாற்றம் சரியாக இருக்கும்போது, ​​உடல் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. இது எடை மற்றும் உடல் பருமன் இரண்டையும் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம் : Lose Fat Naturally: கட கடன்னு உடல் எடையை குறைக்க எலுமிச்சையை இப்படி சாப்பிடுங்க!

இலவங்கப்பட்டை மற்றும் நாவல் பழம் கூட செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்த பானத்தை உட்கொள்வது வயிற்று வலி மற்றும் மலச்சிக்கல் அறிகுறிகள் போன்ற பிற செரிமான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. இது வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது.

கோடையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதன் காரணமாக காய்ச்சல், இருமல், தலைவலி மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்த பானத்தை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் காரணமாக, நோய்களின் ஆபத்து குறைகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

Weight Loss: உடல் எடையை சட்டுனு குறைக்க தண்ணீரை இப்படி குடியுங்க!!

Disclaimer