Chicken Fried Rice Without Oil: ஃப்ரைடு ரைஸ் பிடிக்காதவங்க இருக்க முடியுமா? இன்று வளர்ந்து வரும் உணவு கலாச்சாரத்தில் எல்லா நாட்டு உணவுகளும் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. இதனை சுவைக்க மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதிலும் சீன உணவுகள் மீது அதிக நாட்டம் உள்ளது. இதில் ஃப்ரைடு ரைஸ் முக்கிய பங்கு வகிக்கிறது.
திரும்பும் இடம் எல்லாம் ஃப்ரைடு ரைஸ் கடை உள்ளது. அதிக எண்ணெய் சேர்த்து செய்யப்படும் இந்த உணவு, அவ்வளவு ருசியாக இருக்கும். ஆனால் இது ஆரோக்கியத்திற்கு கேடு. இதனை ஆரோக்கியமான முறையில் செய்து, மகிழ்ச்சியாக ருசிக்க ஒரு வழி உள்ளது. எண்ணெய் இல்லாமல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று இங்கே காண்போம்.
முக்கிய கட்டுரைகள்

எண்ணெய் இல்லாமல் சிக்கன் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்
தண்ணீர் - தேவையான அளவு
அரிசி - 1 கப்
சிக்கன் - 250 கிராம்
முட்டை - 1
மஷ்ரூம் - 1 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 4
பூண்டு- 5 பல்
இஞ்சி - 1 துண்டு
வெங்காயம் - 1
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காய தாள் - 1 கைப்பிடி
செய்முறை
- முதலில் பாத்திரத்தில் 1/ 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். இதில் துண்டு துண்டாக நறுக்கிய சிக்கனை போட்டு வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும், அதனை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- வேறு ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து, அதில் அரிசி மற்றும் உப்பு சேர்த்து வேக வைக்கவும். சாதம் 80 சதவீதம் வெந்த உடன் அதை வடிகட்டி, ஒரு தட்டில் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- தற்போது கடாயில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி கிளரவும்.

- இதனுடன் ஒரு கப் மஷ்ரூம், பொடி பொடியாக நறுக்கிய கேரட், பீன்ஸ், பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- இதில் 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ் சேர்த்து கிளரவும்.
- பின்னர் இதில் சாதம் மற்றும் சிக்கனை சேர்த்து கிளவும். இறுதியாக இதில் வெங்காய தாள் சேர்த்து கிளரி, அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவு தான் எண்ணெய் இல்லாதா ஹெல்தி சிக்கன் ஃப்ரைடு ரைஸ் ரெடி. ஆரோக்கியத்துடன் கூடிய ருசியை சுவைத்து மகிழவும்.