Dal Dhokli: பாரம்பரிய குஜராத்தி தால் தோக்லி… இப்படி செஞ்சி பாருங்க…

  • SHARE
  • FOLLOW
Dal Dhokli: பாரம்பரிய குஜராத்தி தால் தோக்லி… இப்படி செஞ்சி பாருங்க…


How To Make Dal Dhokli: குஜ்ராத, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா போன்ற வட இந்திய பகுதிகளில், தால் தோக்லி என்ற டிஷ், பிரபலமாக இருக்கிறது. பார்ப்பதற்கு சிம்பிளாக தெரிந்தாலும், ருசி அப்படி இருக்கும்.

இதில் எண்ணெய் சேர்க்கப்படாது. நெய் கொண்டு தான் செய்யப்படும். அதுவும் குறைந்த அளவு தான். அதனால் இது ருசி மட்டும் அல்ல, ஆரோக்கியமான உணவு என்றே சொல்லலாம். இத்தகைய தால் தோக்லி உணவை எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

தால் தோக்லி ரெசிபி (Dal Dhokli Recipe)

தேவையான பொருட்கள்

துவரம் பருப்பு - 1/2 கப்

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

பூண்டு - 5 பல்

கோதுமை மாவு- 1 கப்

ஓமம் - 1/4 டீஸ்பூன்

நெய் - 3 டீஸ்பூன்

கடுகு - 1/2 டீஸ்பூன்

பெருங்காயம் - சிறிதளவு

தண்ணீர் - 2 கப்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 2

மல்லி இலை - ஒரு கைப்பிடி

இதையும் படிங்க: Chicken 65 Recipe: நடிகர் விஜய் சேதுபதியின் ஸ்பெஷல் ரெசிபியான சிக்கன் 56 செய்வது எப்படி?

செய்முறை

  • குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, அரை கப் துவரம் பருப்பை சேர்க்கவும். இதனுடன் மஞ்சள் தூள், பூண்டு சேர்த்து மூடவும். 5 விசில் வரும் வரை விடவும்.
  • தற்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, ஓமம், உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சப்பாதி மாவு பதத்திற்கு பிசையவும்.
  • பின்னர் இந்த மாவை சப்பாத்தி போல் தேய்த்து எடுத்துக்கொள்ளவும். இதனை சின்ன சின்ன துண்டுகலாக நறுக்கவும். இதனை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ளவும்.
  • கடாயில் நெய் சேர்த்து கடுகு, பெருங்காயம் சேர்த்து வதக்கவும். கடுகு வெடித்ததும், வெந்த பருப்பை சேர்த்துக்கொள்ளவும்.
  • இதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பருப்பை கலந்துவிட்வும். இதனுடன் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  • இவை நன்கு கொதித்து வந்ததும், நறுக்கி வைத்த மாவு துண்டுகளை இதில் சேர்க்கவும். 15 நிமிடம் வேக வைக்கவும்.
  • அவ்வளவு தான் தால் தோக்லி ரெடி. இதனை வேறு பாத்திரத்தில் மாற்றி, இதன் மேல் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் மல்லி இலை சேர்த்து சாப்பிடவும்.

Read Next

Ennai Kathirikai Kulambu: நடிகர் விஜய் சேதுபதிக்கு பிடித்த எண்ணெய் கத்தரிக்காய் கார குழம்பு எப்படி செய்யணும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்