$
Varalakshmi Vratham Special: வரலக்ஷ்மி விரதம் செல்வம் மற்றும் செழிப்பின் கடவுளான லக்ஷ்மி தேவியை வழிபட அர்ப்பணிக்கப்பட்ட மிகவும் புனிதமான நாளில் ஒன்றாகும். லக்ஷ்மியை வழிபட பக்தர்கள் விரதம் கடைபிடிக்கின்றனர். இந்த நாள் வரலட்சுமி நோம்பு என்றும் கொண்டாடப்படுகிறது. இன்று வரலக்ஷ்மி விரதம் முன்னிட்டு லக்ஷ்மி தேவிக்கு நெய்வேத்தியம் செய்ய நெய் அப்பம் எப்படி செய்வது என்று இங்கே காண்போம்.

நெய் அப்பம் ரெசிபி (Nei Appam Recipe)
தேவையான பொருட்கள்
- 1/2 கப் கோதுமை மாவு
- 1/2 கப் ரவை
- 1/2 கப் அரிசி மாவு
- 1 கப் துருவிய வெல்லம்
- 1/2 கப் தேங்காய் துருவல்
- 1 தேக்கரண்டி பேக்கிங் சோடா
- 1/4 தேக்கரண்டி உப்பு
- பொரிப்பதற்கு ஏற்றவாறு நெய்
- தேவையான அளவு தண்ணீர்
இதையும் படிங்க: Nandu Soup Recipe: சளி இருமல் தொல்லை இனி இல்லை.. அதான் நண்டு சூப் இருக்கே..
வழிமுறைகள்
- ஒரு பாத்திரத்தில் நெய் தவிர அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்த்து ஒரு மென்மையான மாவு செய்யவும். இந்த கலவையை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- இப்போது பணியாரம் கடாயை சூடாக்கவும். நான்ஸ்டிக் பணியாரம் சட்டி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
- அதில் நெய் சேர்த்து சூடாக்கவும். சட்டியில் ஸ்பூன் மாவை இறக்கி பொன்னிறமாக வறுக்கவும். மிருதுவாக இருக்கும் வரை மறுபக்கத்தையும் திருப்பி போடவும்.
- பொன்னிறமாக மாறியதும், அதை ஒரு டிஷூ பேப்பருக்கு மாற்றவும்.
- அவ்வளவு தான் அருமையான நெய் அப்பம் ரெடி.
- இதனை சூடாக பரிமாறவும்.

குறிப்பு
நெய் அப்பம் சுவைப்பதற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், இதில் அதிக கொழுப்பு நிறைந்துள்ளது. ஆகையால் அளவோடு எடுத்துக்கொள்ளவும்.
Image Source: Freepik