பச்சை மிளகாய் Vs சிவப்பு மிளகாய்., எந்த மிளகாய் ஆரோக்கியத்திற்கு நல்லது?

உப்பு இல்லாமல் உணவின் சுவை முழுமையடையாது என்பதை போல் மிளகாய் இல்லாத உணவும் அப்படிதான். இதில் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றில் எது சிறந்தது, எது ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது குறித்து பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
பச்சை மிளகாய் Vs சிவப்பு மிளகாய்., எந்த மிளகாய் ஆரோக்கியத்திற்கு நல்லது?


Green Chilli or Red Chilli: காய்கறிகள், பருப்பு வகைகள் அல்லது தின்பண்டங்கள் எதுவாக இருந்தாலும் மசாலா இல்லாமல் அவற்றின் சுவை முழுமையடையாது. ஒரு உணவு முழுமையடைய உப்பு எவ்வளவு முக்கியமோ அதே அளவு மிளகாயும் முக்கியம். காரமான உணவை விரும்புபவர்கள் அல்லது மிளகாயை தனித்தனியாக சாப்பிடுபவர்கள் பலர் உள்ளனர்.

மிளகாயில் பொதுவாக இரண்டு வகை உண்டு. அதில் ஒன்று பச்சை மிளகாய், மற்றொன்று சிவப்பு மிளகாய் ஆகும். இரண்டும் மிளகாய் வகையை சார்ந்தது தான். மிளகாய் என்றாலே தீங்கு விளைவிக்கும் என்றுதான் பலர் நம்புகிறார்கள். இந்த சந்தேகம் உங்களுக்கும் இருக்கலாம். இதற்கான விடையை அறிந்துக் கொள்ள வேண்டியது மிக கட்டாயம்.

Kidney Stones: கிட்னில கல் இருக்கா.? அப்போ இத சாப்பிடாதீங்க..

மிளகாய் நம் உணவில் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளது. பொதுவாக நம் வீடுகளில் பச்சை மிளகாய், சிவப்பு மிளகாய் என இரண்டு வகையான மிளகாய்களை சாப்பிடுவார்கள். பொதுவாகவே இயற்கையாக விளையக் கூடிய உணவுப் பொருட்கள் சத்துக்கள் நிறைந்திருக்கும். அதேபோல்தான் மிளகாயும்.

பலருக்கும் பல சந்தேகம் இருக்கும், பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாய் இதில் எது சிறந்தது என்று. இதுதொடர்பாக பல வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதற்கான பதிலை பார்க்கலாம்.

பச்சை மிளகாய் vs சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாயை விட உணவில் சேர்க்கப்படும் பச்சை மிளகாய் ஆரோக்கியமானது. பச்சை மிளகாயில் அதிக நீர்ச்சத்து மற்றும் ஜீரோ கலோரி உள்ளது. இது உங்களுக்கு சிறந்த தேர்வாகும், இது பல ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் எண்டோர்பின்கள் நிறைந்துள்ளது

அதேபோல் குறிப்பாக இது எடையைக் குறைக்க உதவுகிறது. அதேசமயம் மிளகாயின் அதிகப்படியான அளவு உட்புற வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் அல்சர் மற்றும் செரிமான கோளாறுகள் ஏற்படலாம்.

பச்சை மிளகாய் நன்மைகள்

பச்சை மிளகாயில் நார்ச்சத்து உள்ளது, இது மலச்சிக்கலைப் போக்க உதவுகிறது மற்றும் குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.

which-chilli-is-good-for-health

எடை இழப்புக்கு உதவும் பச்சை மிளகாய்

பச்சை மிளகாயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் மற்றும் கலோரிகள் இல்லை. இது தவிர, இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துவது இயற்கையான எடை இழப்புக்கு உதவுகிறது.

சருமத்திற்கும் நன்மை பயக்கும்

பச்சை மிளகாயில் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதன் காரணமாக உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

பச்சை மிளகாயில் பீட்டா கரோட்டின் உள்ளது, இது இதய அமைப்பை பராமரிக்க உதவுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பச்சை மிளகாய் இதயம் தொடர்பான நோய்கள் வராமல் இருப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

பச்சை மிளகாய் Vs சிவப்பு மிளகாய்., ஆரோக்கியத்திற்கு எது நல்லது?

மிளகாயும் காரம் நிறைந்ததாகும். இப்படி பார்க்கையில்ஸ, பச்சை மிளகாய் மற்றும் சிவப்பு மிளகாயை விட கருப்பு மிளகுதான் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும்.

சிவப்பு மற்றும் பச்சை மிளகாய் என்று வரும்போது, பச்சை மிளகாய் உங்களுக்கு அதிக நன்மை பயக்கும். ஏனென்றால், ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்திருப்பதோடு, உங்கள் வளர்சிதை மாற்றத்தையும் அதிகரிக்க உதவுகிறது. இது உங்கள் எடையைக் கட்டுப்படுத்த உதவும். ஆனால் எடை இழப்புக்கு நீங்கள் பச்சை மிளகாயை சார்ந்து இருக்க வேண்டும் என்பதல்ல, இதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அவசியம்.

pic courtesy: freepik

Read Next

கடலை பர்பி சாப்பிட்டிருபீங்கா பிரட் பர்பி சாப்பிட்டிருக்கீங்களா? இதோ ரெசிபி!

Disclaimer

குறிச்சொற்கள்