Green Chilli Benefits: முகப்பரு முதல் உடல் எடை வரை - பச்சை மிளகாயின் நன்மைகள் இங்கே..

  • SHARE
  • FOLLOW
Green Chilli Benefits: முகப்பரு முதல் உடல் எடை வரை - பச்சை மிளகாயின் நன்மைகள் இங்கே..


நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களுடன் மாலையில்  வெளியில் செல்லும்போது பஜ்ஜி, சமோசா போன்றவற்றை நாம் சாப்பிடுவோம். அவை அனைத்திலும் பச்சை மிளகாய் மூலப்பொருளாக இருக்கிறது. பச்சை மிளகாய் நம் உணவுகளுக்கு காரத்தை சேர்க்கிறது. இதனை போதுமான அளவில் உட்கொண்டால், பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நமக்கு கிடைக்கிறது. நமது அன்றாட உணவில் மிளகாயை சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகளை பற்றி இங்கே காண்போம். 

வைட்டமின்கள் நிறைந்துள்ளது

நம் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் பச்சை மிளகாயில் ஏராளமாக உள்ளன. குறிப்பாக இதில் வைட்டமின் சி உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ சருமத்தை பராமரிக்கவும், பார்வையை மேம்படுத்தவும் உதவுகிறது.

இதையும் படிங்க:

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

பச்சை மிளகாயில் கேப்சைசின் உள்ளது. இது நமது வளர்சிதை மாற்றத்தை தற்காலிகமாக அதிகரிக்கிறது. இது அதிக கலோரிகளை எரிக்கவும் உதவுகிறது. மேலும் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

வலியில் இருந்து நிவாரணம்

பச்சை மிளகாய் வலியை போக்கும் வலி நிவாரணியாக திகழ்கிறது. இது தசை வலி மற்றும் மூட்டுவலி சிகிச்சையில் பயன்படுத்தப்படும் சில கிரீம்களில் பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியமான செரிமான அமைப்பு

பச்சை மிளகாய் செரிமான சாறுகளை தூண்டுகிறது. இவை சீரான செரிமானத்திற்கு உதவும். டிஸ்ஸ்பெசியா மற்றும் வாயுத்தொல்லை உள்ளவர்கள் பச்சை மிளகாயை சாப்பிட்டு வந்தால், இதில் இருந்து நிவாரணம் பெறலாம்.

ஆக்ஸிஜனேற்ற பண்புகள் 

பச்சை மிளகாயில் பீட்டா கரோட்டின் மற்றும் கேப்சைசின் போன்ற ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன. மேலும், இது நாள்பட்ட நோய்களின் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது. பச்சை மிளகாயில் பாக்டீரியா எதிர்ப்பு தன்மையும் உள்ளது. அவை பருக்கள் மற்றும் தழும்புகளைத் தடுத்து, சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

Image Source: Freepik

Read Next

knee pain: முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் பெற சூப்பர் ஃபுட்!

Disclaimer

குறிச்சொற்கள்