Kerala Special Kalathappam Recipe in Tamil: மழைக்காலத்தில் சூடான தேநீருடன் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட நம்மில் பலருக்கு பிடிக்கும். மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியுடன் வரும் குழந்தைக்கு நாம் எப்போதும் புதிய புதிய ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கவே விரும்புவோம். ஆனால், செய்த உணவையே மீண்டும் மீண்டும் செய்தால் நமக்கும், சாப்பிடுபவர்களுக்கும் சலித்து போய்விடும்.
அந்தவகையில், கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் செய்வது எப்படி என நாங்கள் உங்களுக்கு கூறுகிறோம். இது இனிப்பான ஒரு தின்பண்டம். வாருங்கள் கேரளா ஸ்பெஷல் கலத்தப்பம் எப்படி செய்வது என பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்:
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கப் (5 மணிநேரம் ஊற வைத்தது)
வேக வைத்த சாதம் - 1/4 கப்
துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகம் - 1 தேக்கரண்டி
வெல்லம் - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
தேங்காய் துண்டுகள்
உப்பு
ஏலக்காய் தூள்
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய்
கலத்தப்பம் செய்முறை:
- கலத்தப்பம் செய்ய முதலில், ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பச்சரிசியை தண்ணீரை வடிகட்டி சேர்க்கவும்.
- இதையடுத்து அதில் வேக வைத்த சாதத்தை சேர்க்கவும். பின், துருவிய தேங்காய், சீரகம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு மை போல அரைக்கவும். அரைத்த மாவை ஒரு கிண்ணத்திற்கு மாற்றவும்.
- இப்போது, அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, அதில் வெள்ளம் மற்றும் ½ கப் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- பின், கடாயை அடுப்பில் வைத்து, சிறிது நெய் சேர்த்து நறுக்கிய தேங்காய் துண்டுகளை அதில் சேர்த்து நன்கு வருக்கவும். தேங்காய் பொன்னிறமாக வேறுபடும் வரை வறுக்கவும்.
- வெள்ளம் பாகு நன்கு ஆறியதும் அதை வடிகட்டி அரைத்து வைத்த மாவில் சேர்க்கவும். இப்போது வெள்ளம் பாகு மாவுடன் நன்கு சேரும் வரை நன்கு கலக்கவும். மாவு கட்டியாக இருக்கக்கூடாது. சிறிது தண்ணீராகத்தான் இருக்க வேண்டும்.
- இதில், உப்பு, சமையல் சோடா மற்றும் ஏலக்காய் சேர்த்து நகு கலக்கவும். இதையடுத்து வறுத்த தேங்காயை அதில் சேர்த்து நன்கு கலக்கவும்.
- ஒரு இரும்பு கடாய் அல்லது ஊத்தாப்பம் சட்டியை அடுப்பில் வைத்து சூடேற்றவும். சட்டி சூடானதும், அதில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றவும்.
- பின், அப்பம் செய்ய தயார் செய்து வைத்த மாவை ஒரு குளிக்கரண்டியில் எடுத்து அதில் ஊற்றி மூடி வைக்கவும்.
- ஆப்பம் செய்யும் போது தீயில் மிதமாக வைக்கவும். சுமார் 5 நிமிடம் கழித்து அப்பத்தை திருப்பி போடவும். பின் இரண்டு நிமிடம் கழித்து எடுத்தால் சுட சுட சுவையான கலத்தப்பம் ரெடி!
கலத்தப்பம் ஆரோக்கிய நன்மைகள்
சத்து நிறைந்தது
அப்பத்தில் அரிசி உள்ளது. இது கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் நல்ல மூலமாகும். இதில் தேங்காய் பால் உள்ளது. இது ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் உணவு நார்ச்சத்து மற்றும் கொலஸ்ட்ரால் இல்லாதது.
புளித்த மாவு
ஆப்பம் மாவில் உள்ள நொதித்தல் செயல்முறையானது புரோபயாடிக்குகளை உற்பத்தி செய்கிறது. இது செரிமானம் மற்றும் குடல் தாவரங்களை சமநிலைப்படுத்த உதவுகிறது.
மசாலா
அப்பத்தில் பெரும்பாலும் மருத்துவ குணங்கள் கொண்ட கறிவேப்பிலை, மஞ்சள், ரை போன்ற மசாலாப் பொருட்கள் உள்ளன.
வைட்டமின் பி12
அப்பத்தில் வைட்டமின் பி12 நிறைந்துள்ளது.
சமையல் முறை
ஆப்பம் பொதுவாக தேங்காய் எண்ணெயில் சமைக்கப்படுகிறது. இது உங்கள் தோல், முடி மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆப்பம் செய்ய பயன்படுத்தப்படும் நீராவி சமையல் முறையும் உங்கள் எண்ணெய் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த உதவும்.
Pic Courtesy: Freepik