Weight Loss Tips: இந்த 5 உணவுகள் போதும்.. உங்கள் எடை மெழுகு போல் கரைந்தோடும்!

  • SHARE
  • FOLLOW
Weight Loss Tips: இந்த 5 உணவுகள் போதும்.. உங்கள் எடை மெழுகு போல் கரைந்தோடும்!

எடை இழப்புக்கு புரோட்டீனின் நன்மைகள் எவ்வளவு முக்கியம் என்பதை கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். புரோட்டீன் நிறைந்த உணவுகள் உங்களை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கும் மற்றும் பசியை கட்டுப்படுத்த உதவும். தசைகளை உருவாக்கவும் புரதம் தான் பெரிதளவு உதவுகிறது.

அதிக புரதம் கொண்ட உணவுகளும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளும் எடை இழப்பு மற்றும் தசை வளர்ச்சிக்கு மிகமிக உதவும். வேகமாக எடை குறைக்க விரும்பினால் உடற்பயிற்சியுடன் இதை உண்பது கூடுதல் சிறப்பு. சரி, முதலில் என்னென்ன உணவு என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

எடை இழப்புக்கு உதவும் உணவுகள் பட்டியல்

அதிக புரதம், குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளின் பட்டியல் இதோ.

முட்டைகள்

முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாகும். அதிக புரதம் மற்றும் குறைந்த கொழுப்பு உள்ளடக்கத்தை பெற விரும்பினால் உங்கள் எடை இழப்பு முறையில் முட்டையை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். இன்னும் குறைந்த கொழுப்பு வேண்டும் என்றால் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் உட்கொள்ளலாம்.

கிரேக்க தயிர்

தயிர் ஒரு புரோபயாடிக் ஆகும், இது குடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இது புரதத்தின் சிறந்த ஆதாரமாகவும் உள்ளது. நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் வீட்டு தயிரை பயன்படுத்தவும்.

செறிவூட்டப்பட்ட அல்லது வடிகட்டிய தயிர் என்றும் இது அழைக்கப்படுகிறது. மீண்டும் மீண்டும் வடிகட்டுவதன் மூலம் தயாரிக்கப்படும் இந்த தயிரின் அளவு அப்படியே குறைந்து தேவையான தடிமனை மட்டும் கொண்டிருக்கும்.

பீன்ஸ் மற்றும் பருப்பு

பீன்ஸ் மற்றும் பருப்பு போன்ற தாவரங்கள் புரதத்தின் சிறந்த மூலமாகும். இவற்றைப் பயன்படுத்தி சாலட் அல்லது காய்கறி கூட்டில் தயாரிக்கலாம். பீன்ஸ் மற்றும் பருப்புகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு உதவும்.

பச்சை பட்டாணி

புரதம் மட்டுமல்ல, பச்சை பட்டாணியில் நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பச்சைப் பட்டாணியை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை ஆரோக்கியமாக பராமரிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் முடியும்.

மீன் மற்றும் கீரை

மீன் மற்றும் பச்சை கீரை வகைகளில் ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளது. நீங்கள் அசைவ உணவு பிரியராக இருந்தால் மீன்களை தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் பச்சை கீரைகளில் தினசரி உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது பல சத்துக்களைக் கொண்டிருக்கிறது.

Image Source: FreePik

Read Next

Fruit Vs Fruit Juice: சட்டுன்னு உடல் எடையை குறைக்க ஃபுரூட் ஜூஸ் அல்லது பழம் சாப்பிடுவது நல்லதா?

Disclaimer