Masoor Dal Side Effects: இவங்க எல்லாம் மறந்தும் மைசூர் பருப்பை சாப்பிடாதீங்க. அப்றம் பிரச்சனை உங்களுக்குத்தான்

  • SHARE
  • FOLLOW
Masoor Dal Side Effects: இவங்க எல்லாம் மறந்தும் மைசூர் பருப்பை சாப்பிடாதீங்க. அப்றம் பிரச்சனை உங்களுக்குத்தான்


மைசூர் தால் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதிலுள்ள அதிகளவு நார்ச்சத்துக்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், இரத்த சோகையைத் தடுக்கவும் உதவுகிறது. இவ்வாறு பல வகைகளில் நன்மை தரும் மைசூர் பருப்பை அதிகளவு எடுத்துக் கொள்வதும் ஆபத்தில் முடியலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Avocado Benefits: இந்த நன்மைகள் எல்லாம் பெற தினமும் ஒரு அவகேடோ பழம் சாப்பிடுங்க

மைசூர் தால் அதிகம் சாப்பிடுவதன் விளைவுகள்

மைசூர் தால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், இது சில நபர்கள் தவிர்ப்பது நல்லது. இதில் எந்தெந்த நபர் உணவிலிருந்து மசூர் தாலைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்தும், மைசூர் பருப்பு உட்கொள்வதன் சில பக்கவிளைவுகள் குறித்தும் காணலாம்.

சிறுநீரகக் கோளாறு

சிறுநீரகக் கோளாறு உள்ள நோயாளிகள் மைசூர் பருப்பை உட்கொள்வது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதற்கு இதிலுள்ள அதிகளவிலான ஆக்சலேட்டுகளே காரணமாகும். மசூர் பருப்பை உட்கொள்வது சிறுநீரகக் கற்கள், சிறுநீரக பிரச்சனைகள், அல்லது பிற சிறுநீரக நோய்களில் ஆக்சலேட்டை ஏற்படுத்தும்.

சமநிலையற்ற ஊட்டச்சத்துக்கள்

மற்ற உணவுகளின் சீரான உட்கொள்ளல் இல்லாமல், மசூர் பருப்பை உட்கொள்வது ஊட்டச்சத்து ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுக்கலாம்.

அசிடிட்டி பிரச்சனை

மைசூர் பருப்பில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இதனை அதிகளவு உட்கொள்வது சில சமயங்களில் வாயு பிரச்சனையை ஏற்படுத்தலாம். மேலும் அசிடிட்டி பிரச்சனையை அதிகமாக்கலாம். கூடுதலாக இந்த பருப்பில் அதிக புரதங்கள் உள்ளது. இந்த பருப்பை அதிகளவு எடுத்துக் கொள்வது உடல் கொழுப்பை சேர்த்து, உடல் எடையை அதிகரிக்கும் அபாயம் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Curry Leaves Benefits: இந்த நாள்பட்ட நோய்களை எல்லாம் தவிர்க்க தினமும் 5 கறிவேப்பிலை சாப்பிடுங்க

மூட்டு வலி பிரச்சனை

அதிகளவிலான யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் பருப்பு வகைகளை அதிகம் சாப்பிடக் கூடாது. அதிலும் குறிப்பாக மைசூர் பருப்பில் பியூரின் அதிகம் நிறைந்துள்ளது. இந்த பியூரின்கள் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். இதனால் மூட்டு வலி பிரச்சனை அதிகமாகும்.

ஒவ்வாமை எதிர்வினை

இது அரிதான ஒன்றாகும். சில நபர்களில் மசூர் பருப்பு உள்ளிட்ட பருப்புகளில் ஒவ்வாமை இருக்கலாம் அல்லது ஏற்படலாம். இது இரைப்பை குடல் பிரச்சனை, அரிப்பு மற்றும் வீக்கம் போன்ற விளைவுகளை உண்டாக்கலாம்.

மைசூர் பருப்பு அதிகம் சாப்பிடுவதால் இது போன்ற விளைவுகள் ஏற்படலாம். எனவே இந்த பிரச்சனை உள்ளவர்கள் மைசூர் பருப்பு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Masoor Dal For Weight Loss: உடல் எடையை வேகமா குறைக்க மசூர் பருப்பை இப்படி சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

யார் புரோட்டீன் பவுடரை உட்கொள்ளக்கூடாது? இதன் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer