Sneeze Holding Effects: தும்மலை அடக்கி வைப்பீங்களா? இது தெரிஞ்சா இனி அப்படி செய்யவே மாட்டீங்க!

  • SHARE
  • FOLLOW
Sneeze Holding Effects: தும்மலை அடக்கி வைப்பீங்களா? இது தெரிஞ்சா இனி அப்படி செய்யவே மாட்டீங்க!

ஆனால், இந்த முயற்சி ஒருவரின் தொண்டையில் துளையை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். பிரிட்டனில் 34 வயது நபர் ஒருவர் தும்மலை நிறுத்த முயன்றபோது, அவர் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளார். இதில் தும்மலை நிறுத்துவதால் ஒருவர் என்னென்ன விளைவுகளைச் சந்திக்கிறார் என்பதைக் குறித்துக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Bleeding Gums: பல் ஈறுகளில் இரத்தக் கசிவா? அதுக்கு இது தான் காரணம்! எப்படி தவிர்ப்பது?

தும்மலை நிறுத்துவதால் தொண்டையில் துளை

ஊடக ஆதாரங்களில் குறிப்பிட்டுள்ள படி, 34 வயதான பிரிட்டிஷ் நபர் ஒருவர் தனது தும்மலை வலுக்கட்டாயமாக நிறுத்த முயற்சித்துள்ளார். இதனால், அவர் பல்வேறு விளைவுகளை அனுபவிக்க நேர்ந்தது. இதில் அவர் தும்முவதை நிறுத்திய பிறகு சிறிது நேரத்திலேயே, அவரது தொண்டை வீங்கத் தொடங்கியுள்ளது. இதனால், அவருக்கு விழுங்குவதில் சிரமம் ஏற்படுவதுடன், குடல் கூட மாறிவிட்டது. இதற்கு மருத்துவரை நாடிய போது தும்மலை வலுக்கட்டாயமாக நிறுத்தியதால்தான் இந்த பிரச்சனைகளை சந்திக்க நேர்ந்ததாக தெரிய வந்தது.

ஊடக அறிக்கையின்படி, இந்த நபருக்கு வேறு முந்தைய உடல்நலப் பிரச்சனைகளும் இல்லை. அவருக்கு காய்ச்சல் அல்லது சுவாச பிரச்சனை போன்றவையும் இல்லை. ஆனால், அவர் தும்மலை நிறுத்த முயன்றபோது தொண்டை வீங்கி விட்டது. இதனால், தொண்டையில் காணப்படும் மென்மையான திசுக்கள் வெடித்து ஓட்டை ஏற்பட்டதாக எக்ஸ்ரே அறிக்கையில் தெரிய வந்தது. பிறகு, மருத்துவமனையிலிருந்து ஒரு வாரம் சிகிச்சை பெற்றார். மேலும், மருத்துவர்கள் அவருக்கு மீண்டும் தும்முவதை நிறுத்த முயற்சிக்கக்கூடாது என்ற அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.

தும்மலை நிறுத்துவதால் சந்திக்கக் கூடிய பிரச்சனைகள்

எவரொருவர் வலுக்கட்டாயமாக தும்முவதை நிறுத்துகின்றனரோ, அவர்கள் கட்டாயமாக இந்தப் பழக்கத்தைக் கைவிடுவது நல்லது. ஏனெனில், தும்மல் என்பது உடலின் பல உடல் செயல்பாடுகளை பராமரிக்கக் கூடிய உடலின் ஒரு இயற்கையான செயல்முறையாகும். இதில் தும்மலை நிறுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்துக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Dry Eye Symptoms: உங்க கண் வறண்டு இருப்பதற்கான அறிகுறிகள் இது தான்! மருத்துவர் தரும் விளக்கம்

காதுகளில் தொற்று

தும்மலின் மூலம் மூக்கு சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் மூக்கில் இருக்கக் கூடிய அழுக்குத் துகள்களும் தும்மல் மூலம் வெளியேறுகிறது. இந்த சூழ்நிலையில், தும்மல் வருவதை நிறுத்த முயற்சிக்கும் போது, மூக்கில் இருக்கும் அழுக்குகள் மற்றும் பாக்டீரியாக்கள் போன்றவை காற்றின் மூலம் காதுக்குச் செல்லலாம். இதனால் காதுகளில் தொற்று உண்டாவதற்கான அபாயம் ஏற்படலாம்.

செவிப்பறைகள் வெடிப்பது

தும்மலை நிறுத்தும் போது, சுவாச மண்டலத்தில் உற்பத்தி செய்யப்படக்கூடிய காற்று, காதுகளை சென்றடையலாம். இந்த காற்றில் அதிக அழுத்தம் நிறைந்திருக்கும். இதனால் இது காதில் இருக்கக் கூடிய குழாய் வழியாக செல்லலாம். இதன் காரணமாக, செவிப்பறைகள் வெடிப்பதுடன் கடுமையான வலியை ஏற்படுத்தலாம்.

விலா எலும்புகள் உடைதல்

சில சமயங்களில் மிகவும் மோசமாக தும்மல் வரும் போது விலா எலும்புகளில் காயத்தை ஏற்படுத்தலாம். அதே சமயம், தும்மலை நிறுத்த முயன்றாலும், விலா எலும்புகள் உடைந்து விடும் சூழல் ஏற்படலாம். உண்மையில் ஒரு தும்மலை நிறுத்தும் செயல்பாட்டில் ஒரு அழுத்தம் உருவாக்கப்படுகிறது. இந்த அழுத்தம் காரணமாக, காற்று மிக விரைவாக நுரையீரலுக்குள் சென்றடைந்து, விலா எலும்புகளை பாதிக்கிறது.

நரம்புகள் வெடிப்பு

அரிதான நேரங்களில், தும்மலை நிறுத்துவதால் கண்கள், மூக்கு மற்றும் காதுகள் வழியாக செல்லக்கூடிய இரத்த நாளங்கள் வெடிக்கும் அபாயம் ஏற்படலாம்.

எனவே, ஒருவர் தும்மலை நிறுத்துவதால் தொண்டையில் சேதம் ஏற்படுவதுடன் தொண்டையில் இருக்கக் கூடிய திசுக்கள் வெடிக்கும். இது பேசுவதில் சிரமம், கடுமையான வலி மற்றும் இன்னும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: Effects Of Holding Urine: சிறுநீரை ரொம்ப நேரம் வைத்திருப்பவர்களா நீங்க? அப்ப இத கவனிங்க

Image Source: Freepik

Read Next

இரவு உணவை ஸ்கிப் செய்தால் என்ன ஆகும் தெரியுமா.?

Disclaimer

குறிச்சொற்கள்