$
Signs And Symptoms Of Dry Eye Syndrome: உலர் கண் நோய்க்குறி என்பது கண்களில் வறட்சி உண்டாவதைக் குறிக்கும் பொருளாகும். அதாவது கண்கள் போதுமான அளவு கண்ணீரை உற்பத்தி செய்யாதபோது இந்த பிரச்சனை ஏற்படுகிறது. உலர் கண் நோய்க்குறியில் ஒரு நபரால் கண்களில் ஒரு சாதாரண கண்ணீரைக் கூட பராமரிக்க முடியாது. இந்நிலையில், கண்களில் பாக்டீரியா தொற்று அதிகரித்து கண்களின் மேற்பரப்பில் வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது கார்னியாவில் தழும்புகளை உண்டாக்கும். அதிர்ஷ்டவசமாக, உலர் கண் நோய்க்குறியின் நிலை ஒருபோதும் பார்வை இழப்பை ஏற்படுத்தாது.
ஆனால், கண்களில் கண்ணீரின் தரம் குறைந்த கண்ணீரை உற்பத்தி செய்யும் போதோ அல்லது கண்ணீரை உற்பத்தி செய்யத் தவறினாலோ வறண்ட கண் பிரச்சனை ஏற்படலாம். இவ்வாறு வறண்ட கண்கள் பிரச்சனை ஒரு நபரை அசௌகரியமாக உணர வைக்கிறது. மேலும் கண்கள் வறண்டு இருப்பின் கண்களில் கொட்டுதல் மற்றும் எரியும் உணர்வு ஏற்படலாம். இதில் உலர் கண் நோய்க்கான அறிகுறிகள் குறித்து ஹைதராபாத் காமினேனி மருத்துவமனையின் மூத்த கண் மருத்துவரான டாக்டர் ஒய். ஜெயபால் ரெட்டி அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Eye Flu: அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ; காரணங்கள் மற்றும் அறிகுறிகளை அறிவோம் வாருங்கள்
உலர் கண் சின்ட்ரோம் நோய்க்கான அறிகுறிகள்
மருத்துவர் ஜெயபால் ரெட்டி அவர்களின் கூற்றுப்படி, உலர் கண் நோய் இருப்பவர்களுக்கு கண்களில் வலி, சிவத்தல், எரிச்சல் போன்ற பல்வேறு அறிகுறிகள் தோன்றலாம். அதில் சிலவற்றைக் காண்போம்.
கண்களில் வலி
கண்கள் வறண்டு இருக்கும் போது வலி உண்டாகலாம். இது சில நேரங்களில் மிகவும் கடுமையானதாகவும் தாங்க முடியாததாகவும் மாறக்கூடும். மேலும் இது கண்களில் தீராத வலியை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இது உலர் கண் நோயின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
கண்களில் எரிச்சல்
உலர் கண் நோய்க்குறி அல்லது கண்களில் வறட்சி பிரச்சனை இருப்பின், அது கண்களில் எரிச்சலை உண்டாக்கலாம். எனவே கண்களில் எரிச்சல் இருந்தால் அதை சாதாரணமாக நினைத்து புறக்கணிக்கக் கூடாது.

கண்களில் சிவத்தல்
பொதுவாக தூங்காமல் இருக்கும் போது சிலர் கண்கள் சிவத்தலை அனுபவிப்பர். ஆனால், கண்கள் அடிக்கடி சிவந்து போவது, உலர் கண் நோய்க்குறியின் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. எனவே இதை சாதாரண அறிகுறியாக நினைத்து புறக்கணிக்கக் கூடாது. இந்நிலையில், கண்களை மிகக் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கண்களில் கனமாக உணர்வது
கண்கள் எப்போதும் அதிக கனமான இருப்பது போன்ற உணர்வு ஏற்படுவதும் வறண்ட கண் பிரச்சனைக்கான அறிகுறியாகக் கருதப்படுகிறது. இதனுடன், கண்களில் எரியும் உணர்வு மற்றும் சிவப்பு கண்கள் போன்ற அறிகுறிகளும் தோன்றும். இவை உலர் கண் நோய்க்குறியின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Improve Eyesight: கண் பார்வையை மேம்படுத்த எளிய வழிகள்!
கண்களைச் சுற்றி சளி
பொதுவாக, கண்களில் வறட்சி ஏற்படும் சமயத்தில், கண்களில் அழுக்கு சேரும். இந்நிலையில், கண்களில் அல்லது கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் ஒட்டும் சளியின் திரட்சியைப் பார்க்கலாம். இது உலர் கண் நோய்க்குறியின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.
மங்கலான பார்வை
கண் நோய்க்குறியின் மற்றொரு அறிகுறியாக மங்கலான பார்வை ஏற்படுவதாகும். அதாவது உலர் கண் நோய்க்குறி ஏற்பட்டால் பார்வை முழுமையாக இழக்கப்படாது. ஆனால், பார்வை மங்கலாகலாம். இதனை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
கணினியைப் பார்ப்பதில் சிரமம்
நீண்ட நேரம் கணினியில் வேலை செய்வதும் உலர் கண் நோய்க்குறி பிரச்சனை ஏற்படுவதற்கான காரணியாக அமைகிறது. ஏனெனில், கண்கள் நீண்ட நேரம் கணினி வெளிச்சத்தில் இருக்கும் போது கண்கள் வறண்டு போகலாம். இதனால் சாதாரண நேரத்தில் படிக்கும் போது சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.

உலர் கண் சின்ட்ரோமிற்கான தீர்வுகள்
நாம் அன்றாட வாழ்வில் மேற்கொள்ளும் சில பழக்க வழக்கங்களின் உதவியுடன் உலர் கண் நோய்க்குறியைத் தடுக்கலாம். இதில் கண்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும். வறண்ட கண்கள் பிரச்சனைக்கான இந்த அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும். இது தவிர, மருத்துவர் பரிந்துரைக்கும் கண் சொட்டு மருந்துகளையும் அவ்வப்போது பயன்படுத்தலாம். எனவே உலர் கண் நோய்க்குறியின் அறிகுறிகளைக் கண்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சைப் பெறுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: Pink Eye Infection : பிங்க் ஐ தொற்று கேள்விப்பட்டதுண்டா? அறிகுறிகள் எப்படி இருக்கும்? வராமல் தடுப்பது எப்படி?
Image Source: Freepik