சில உணவுகளுடன் சில பழங்களைச் சாப்பிடக்கூடாது என்பது உங்களுக்குத் தெரியுமா? சில பழங்களை இணைப்பது பொருந்தக்கூடிய செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பாதிக்கலாம். எனவே, சில பழங்களை மற்ற உணவுகளுடன் உட்கொள்ளக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உண்மை, நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒன்றாக சாப்பிடுவது மிகவும் ஆரோக்கியமானது. பழங்கள் மற்றும் காய்கறிகள் நிச்சயமாக குழந்தைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும், ஆனால் அவர்கள் சாப்பிடும் பழங்களின் பொருந்தக்கூடிய தன்மை ஒரே மாதிரியாக இருக்காது, அது தேவையில்லாத உடல் நலக்கோளாறுகளைக் கொண்டு வரும். அப்படி என்னென்ன வகையான பழங்களைக் கலந்து ஜூஸ் போட்டு குடிக்கக்கூடாது என பார்க்கலாம்.
பப்பாளி + எலுமிச்சை
பப்பாளியில் உள்ள என்சைம்கள், எலுமிச்சையின் அமிலத்தன்மையுடன் இணையாது. இதனால் வயிற்றில் வீக்கம், மோசமான அமிலத்தன்மை ஏற்படக்கூடும்.
முக்கிய கட்டுரைகள்
கேரட் + ஆரஞ்சு
இந்த இரண்டும் இணையும் போது அதிக பித்தம் உருவாக்கும். இது நெஞ்செரிச்சல் அல்லது செரிமான கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆரஞ்சு + வாழைப்பழம்
சிட்ரஸ் பழமான ஆரஞ்சை வாழைப்பழத்துடன் சேர்ப்பது செரிமான சிக்கல்களை உருவாக்கும். ஆரஞ்சு பழத்தில் உள்ள அமிலத்தன்மை வாழைப்பழத்துடன் கலந்து வயிற்றில் உப்பசம் மற்றும் வலியை உருவாக்கும்.
தர்பூசணி + வாழைப்பழம்
தர்பூசணி அதிக நீர்ச்சத்து கொண்டது, வாழைப்பழத்தில் அடர்த்தியான நார்ச்சத்து உள்ளது. இவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று சரியாக கலக்காவிட்டால், வீக்கம் மற்றும் வாயுத்தொல்லைக்கு வழிவகுக்கும்.
ஆப்பிள் + ஆரஞ்சு
இந்த இரண்டு பழங்களும் செரிமானத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடிய நேரம் வேறு வேறானது. இதனை ஒன்றாக எடுத்துக் கொள்ளும் போது செரிமான அமைப்பில் குழப்பம் ஏற்பட்டு, வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
ஸ்ட்ராபெரி + திராட்சை
இரண்டு பழங்களும் ஊட்டச்சத்து நிறைந்தவை. மேலும் இதிலுள்ள அமிலத்தன்மை மற்றும் சர்க்கரை வயிற்றில் நொதித்தல் செயல்முறையை ஊக்குவிக்கக்கூடும். இது வயிற்றில் வாயுத்தொந்தரவை ஏற்படுத்தும்.
அன்னாசி + மாம்பழம்
அன்னாசி பழத்தில் ப்ரோமெலைன் உள்ளது இது பழத்துடன் வினைபுரிந்து நொதித்தல் செயல்முறைக்கு வழிவகுக்கிறது. இதனால் வயிற்றில் அசெளகரியம் மற்றும் குமட்டல் ஏற்படக்கூடும்.
கொய்யா + வாழைப்பழம்
இந்த இரண்டு பழங்களும் நார்ச்சத்து நிறைந்தவை. ஆனால் ஒன்றுடன் ஒன்று சேராது. இதனால் வயிற்று வலி, அஜீரணம் போன்ற பிரச்சனைஅள் ஏற்படலாம்.
Image Source: Freepik