Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.

  • SHARE
  • FOLLOW
Mental Health Tips: மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இத தினமும் செய்யுங்க.


Ways To Maintain Mental Health: உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும். ஏனெனில் மன ரீதியாக பலவீனமாக இருப்பது உடல் நலத்தையும் பாதிக்கலாம். அதாவது வளர்சிதை மாற்றம் பலவீனமடைதல், சரும பிரச்சனைகள் போன்றவை ஏற்படலாம். எனவே மனதை உறுதியாக வைத்திருப்பது மனரீதியாக எளிதாக வலிமையாக்க உதவும். இந்த சூழ்நிலையில் மன ஆரோக்கியத்தை நன்றாக வைத்திருக்க உடற்பயிற்சி, தியானம் மற்றும் உணவுக்கட்டுப்பாடு போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம். மனரீதியாக வலிமையாக இருக்க கேட்வே ஆஃப் ஹீலிங்கின் இயக்குநர் மற்றும் மனநல மருத்துவரான டாக்டர் சாந்தினி துக்னைட் அவர்கள் எடுத்துரைத்துள்ளார்.

மனரீதியாக வலுவாக இருக்க பின்பற்ற வேண்டியவை

மனதைக் கட்டுப்பாட்டுடன் வைத்திருக்கவும், மன ஆரோக்கியத்திற்காகவும் சில பழக்கங்களைப் பின்பற்ற வேண்டியது அவசியம். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

நேர்மறையாக இருப்பது

எதிர்மறை எப்போதும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஒன்றாகும். எனவே மனரீதியாக வலுவாக இருக்க, நேர்மறையாக இருப்பது மிகவும் அவசியம். எந்த அளவு நேர்மறையாக இருக்கிறோமோ, அந்த அளவு மனதை ஆரோக்கியத்துடன் வைத்திருக்கலாம். நேர்மறையைக் கொண்டு வர, பிடித்தவற்றில் கவனம் செலுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Early Wakeup Benefits: அதிகாலையில் எழுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?

மகிழ்ச்சியாக இருப்பது

மன உறுதியுடன் இருக்க, மகிழ்ச்சி மிக அவசியமான ஒன்றாகும். மகிழ்ச்சியாக இருக்க கற்றுக் கொண்டால், ஒருபோதும் மனரீதியாக பாதிப்பு ஏற்படாது. எனவே கஷ்டமான சூழலிலும் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். மேலும் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களைச் செய்வது, பிடித்தமானவர்களுடன் இருப்பது போன்றவையும் அடங்கும்.

மன அழுத்தத்தைக் குறைப்பது

அடிக்கடி மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஏற்படுவது மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம். இந்த சூழ்நிலையில், மன உறுதியுடன் இருப்பதற்கு மன அழுத்தத்தைக் குறைப்பது அவசியமாகும். மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுவது, அதாவது யோகா, தியானம், ஆழ்ந்த சுவாசம் மற்றும் உடற்பயிற்சி போன்றவற்றைச் செய்யலாம்.

இரவு தூக்கம் பெறுவது

உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க, இரவில் முழு தூக்கத்தைப் பெற வேண்டியது அவசியமாகும். முழு தூக்கத்தைப் பெறும் போது, அது மன அழுத்தத்தை நீக்குவதுடன், மனரீதியாக வலுவாக வைக்கவும் உதவும்.

இந்த பதிவும் உதவலாம்: Best Sleeping Position: தூங்கும் போது எப்படி தூங்க வேண்டும் தெரியுமா?

மக்களிடம் பேசுதல்

மனதளவில் வலுவாக இருக்க, மக்களுடன் இணைந்திருக்க வேண்டியது அவசியம். மக்களுடன் தொடர்பு கொள்ளும் போது, மகிழ்ச்சியான ஹார்மோன்கள் வெளியிடப்படும். இது மனரீதியாக வலுவாக இருப்பதை உறுதி செய்யும். மேலும் இது மன அழுத்தத்தை நீக்குகிறது.

ஆரோக்கியமான உணவு

ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், மன ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடியது. எனவே மன ரீதியாக வலுவாக இருக்க பொட்டாசியம் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

யோகா மற்றும் தியானம்

தினமும் யோகா, தியானம் செய்து வருவது மனதளவில் பலத்தை உண்டாக்கும். இது மனதை அமைதியடையச் செய்கிறது. மேலும், இது பதற்றத்தைக் குறைத்து, நிம்மதியாக இருக்க வழி செய்கிறது. எனவே மன வலிமை பெற தினமும் யோகா, தியானம் செய்வது சிறப்பான ஒன்றாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Oil Bath Benefits: எண்ணெய் குளியல் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Image Source: Freepik

Read Next

Diwali Crackers: பட்டாசு வெடிப்பவர்கள் கவனத்திற்கு.. உடனடி முதலுதவி முறைகள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்