Cricket Tips: உலகில் கால்பந்தாட்டத்திற்கு அடுத்தபடியாக மிகவும் பிரபலமான விளையாட்டு கிரிக்கெட். பில்லியன் பார்வையாளர்களையும், மில்லியன் விளையாட்டு வீரர்களையும் கொண்டிருக்கிறது இந்த இரண்டு விளையாட்டுகளும். குறிப்பாக தமிழ்நாட்டில் கிரிக்கெட் என்பதை மிஞ்சிய விளையாட்டே இல்லை என கூறலாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இளைஞர்களை தூக்கத்தில் எழுப்பி கையில் பேட், பந்தை கொடுத்தாலும் மிரட்டிவிடுவார்கள். அந்தளவிற்கு கிரிக்கெட் நமக்கு பரீட்சியம்.
கிரிக்கெட் பேட்டிங் செய்யும் போது வரும் சிக்கல்
ஆனால் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரு பிரச்சனை. கிரிக்கெட் மீதான அதிக ஆர்வம் இருக்கும் அளவிற்கு நம் விளையாட்டு வெளிப்பாடு இருக்காது. இதை சரிசெய்ய பல வீடியோக்கள், டிப்ஸ்களை பார்த்திருப்போம். இருந்தும் பலருக்கும் இதனால் பலன் இருக்காது. இதற்கான காரணத்தை இப்போது பார்க்கலாம்.
கிரிக்கெட் முழுமையான மனம் மற்றும் மூளை சார்ந்த விளையாட்டு
கிரிக்கெட் என்பது வெறும் உடல் ரீதியான விளையாட்டு இல்லை மனம் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட விளையாட்டு இது என்பது எத்தனை பேருக்கு தெரியும். நாம் தொலைக்காட்சியில் கிரிக்கெட் பார்க்கும் போது கவனத்திருந்தால் தெரியும். பேட்ஸ்மேன் திடீரென ஓடிவரும் பவுளரை நிறுத்தி பின்புறத்தில் கை காட்டுவார். உடனே அந்த இடத்தை சரிசெய்வார்கள். அதற்கு காரணம் என்ன தெரியுமா?
பேட்ஸ்மேன் பவுளரை நிறுத்தவது ஏன்?
பவுளர் ஓடிவரும் பின்புறத்தில் பிளாக் போர்ட் வைக்கப்பட்டிருக்கும், பேட்ஸ்மேனுக்கு பவுளர் வீசும் பந்து மட்டும் தனியாகவும் கவனமாக தெரிய அந்த பிளாக்போர்ட் தான் உதவும். அந்த பிளாக் போர்ட் திசையில் யாரும் நடுவில் வந்தால் உடனே அவர்கள் கவனம் சிதறும் விதமாக இருக்கும், எனவே தான் பவுளரை நிறுத்திவிடுவார்.
பவுளர் மீதும் பந்து மீதும் கவனம் தேவை
பந்து மீது அந்தளவு நுணுக்கமான கவனம் தேவை. இதற்கு மனம் ஒருநிலையாக இருப்பது அவசியம். அதேபோல் பேட்ஸ்மேன் பவுளர் பந்து வீசும்போது தனக்குள் பேசிக் கொள்வார்கள். ஒருசிலர் வெளிப்படையாகவே பேசுவார்கள். சில பேட்ஸ்மேன்கள் பவுளர் பந்துவீச ஓடி வரும்போது Watch the Ball என தனக்குத்தானே கூறுவார்கள். அதாவது தன்னைத்தான தயார் செய்து கொள்வார்கள்.
மைன்ட் ஃப்ரீயாக கிரிக்கெட் விளையாடனும்
மூளை ஃப்ரீயாகவும், மனம் ஒருநிலையாகவும் இருக்க வேண்டியது மிக அவசியம். பண வருமானம் வர வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும் ஆனால் பணம் மொத்தமாக வந்தவுடன் கணக்கில்லாமல் ஆசையை அனைத்தும் தீர்க்க செலவு செய்துவிடுவோம். சிலர் சேமித்து வைக்காமல் செலவு செய்துவிடுவார்கள்.
பேட்டிங் செய்யும்போது தோன்றும் ஆசைகள்
அதுபோல் தான் பேட்டிங் செய்யும் போதும் பல ஆசைகளும் நிதானத் தன்மையும் இருக்கும். ஆனால் பேட் பிடிக்கும் போது அந்த நிதானத்தன்மை மறைந்து சுத்த ஆரம்பித்துவிடுவோம். இந்த நேரத்தில் நமது மனம் அலைபாய ஆரம்பத்துவிட்டது என அர்த்தம். முன்னதாக கூறியதுபோல் மனம் ஒருநிலையில் இருக்க வேண்டியது அவசியம்.
சிறப்பாக பேட்டிங் செய்ய எளிய வழிகள்
மூளை செயல்பாடு குறித்து பார்க்கையில், ஒரு வினாடியில் உங்கள் மூளை செயல்பாடு என்பது அதீதமாக இருக்கும். அதாவது பவுளர் கையை பார்த்து அது எங்கே பிட்ச் ஆகும் என்பதை கணிக்க வேண்டும். பிட்ச் ஆகும் திசையை கணித்து அது எவ்வளவு பவுன்ஸாகும், ஸ்விங் ஆகுமா என்பதை கணிக்க வேண்டும். பின், நாம் முன்னதாக பார்த்து வைத்திருந்த ஃபீல்டர் இல்லாத திசை பார்த்து அந்த பந்தை அடிக்க வேண்டும்.
பேட்டிங் செய்யும்போது மூளை செயல்பாடு முக்கியம்
கிட்டத்தட்ட 500 மில்லிசெகண்டுக்குள் இத்தனையும் நடக்க வேண்டும். அதாவது ஒரு நொடிக்கும் குறைவாக இந்த செயல்பாடுகள் உங்களுக்குள் நடக்க வேண்டும். அதனால்தான் அனைத்தையும் தாண்டி பேட்டிங் செய்யும் போது மனதும், மூளையும் ஒருநிலையாக இருக்க வேண்டியது அவசியம். அதோடு நல்ல பயிற்சியும் முக்கியம்.
சிறப்பாக பவுளிங் செய்வது எப்படி?
மேலே குறிப்பிட்டுள்ள அதேநிலை தான் பவுளிங் போடுவதற்கும். முன்னதாக பந்து எந்த இடத்தில் பிட்ச் ஆக வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். மூளை சொல்வதை உடல் கேட்க வேண்டும்.
சிறப்பாக ஃபீல்டிங் செய்வது எப்படி?
ஃபீல்டிங் இதேநிலை தான் பேட்ஸ்மேன் கால்களை கவனித்து அவர் எந்த திசையில் அடிக்கப்போகிறார் என்பதை முன்னதாகவே கணித்து அவரது பேட்டை உண்ணிப்பாக கணிக்க வேண்டும். ஒரு பந்து பறந்துவரும் போது அதன் வேகத்தை கணித்து நம்மால் அதன் அருகில் செல்ல முடியுமா? இல்லை நின்ற இடத்தில் இருந்தே பிடிக்கலாமா, டைவ் அடிக்கலாமா என்பதை தீர்மானிக்க வேண்டும். இவை அனைத்தும் நொடியில் நடக்க வேண்டும்.
பேட்டிங், ஃபீல்டிங், பவுளிங் என அனைத்திற்கும் மனது ஒருநிலையாகவும், மூளை வேகமாகவும் செயல்பட வேண்டியது அவசியம். அதனுடன் நல்ல பயிற்சியும் தேவை என்பதை கவனித்தில் கொள்ளுங்கள்.