நிறைவு மற்றும் அர்த்தமுள்ள உறவுகளில், உணர்வுபூர்வமான நெருக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் இது சாத்தியமற்றதாக உள்ளது. திருமணமான தம்பதியர்களோ அல்லது காதலர்களோ, தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது குறைவே.
வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருக்கும் போது, ஆண் பெண் இருபாலர்களும், தங்கள் துணையுடன் நேரம் செலவிடுவது குறைவு. இதனால் தம்பதியினர் இடையே சில சலசலசுப்புகள் ஏற்படுகிறது. உணர்ச்சிபூர்வமான நெருக்கம், செழிப்பான உறவுக்கு வழிவகுக்கும்.
முக்கிய கட்டுரைகள்

ஆரோக்கியமான, திருப்திகரமான உறவுகளை நிறுவுவதற்கும், அவற்றை அர்த்தமுள்ளதாகவும் ஆதரவாகவும் வைத்திருப்பதற்கும் உணர்ச்சிபூர்வமான நெருக்கம் இன்றியமையாததாகும். ஒரு நபருடன் உணர்வுபூர்வமாக இணைந்திருப்பது நல்ல நேரங்கள் மற்றும் கடினமான காலங்களில் ஒருவருக்கொருவர் இருக்க வேண்டும். இந்த இணைப்பு ஒரு உறவில் நம்பிக்கையை உருவாக்குகிறது. அதை வலுவாகவும் அர்த்தமுள்ளதாகவும் ஆக்குகிறது.
உணர்வுப்பூர்வ நெருக்கம் என்பது மன ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் நன்மை பயக்கும். மேலும் இது பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்குகிறது. உங்கள் உறவில் உணர்வுப்பூர்வ நெருக்கத்தை அதிகரிக்க சில குறிப்புகளை நாங்கள் உங்களுக்கு செல்கிறோம்.
இதையும் படிங்க: சரியான வாழ்க்கை துணையை எப்படி தேர்வு செய்வது?
உறவில் எப்படி நெருக்கத்தை அதிகரிப்பது?
நம்பிக்கை உணர்வு
எந்தவொரு அர்த்தமுள்ள உறவிலும் நம்பிக்கையே அடிப்படை. இது ஒரு வலுவான உணர்ச்சி இணைப்பின் முதல் அறிகுறியாகும். உங்கள் துணையிடம் உணமையாக இருக்க வேண்டும். எது நடந்தாலும், உண்மையை மறைக்காமல் அப்படியே கூற வேண்டும். எந்த பிரச்னைக்கும் இது உடனடி தீர்வாக இருக்கும்.
தொட்டு பேசுதல்
நாம் ஒருவரை தொட்டு பேசும் போது, அவர்களிடம் உணர்வுப்பூர்வ நெருக்கம் உருவாகும். தம்பதியர்கள் தங்கள் துணையின் கைகளை பிடுத்து பேசுவதோ, தோலில் சாய்ந்து கொள்வதோ, நல்ல நெருக்கத்திற்கு வழிவகுக்கும். இது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உருவாக்கும்.
பயணம் செல்தல்
வாரம் ஒரு முறை எங்காவது வெளியே சென்று ஒன்றாக நேரம் செலவிடவும். இது தம்பதியினர் இடையே நல்ல நெருக்கத்தை உருவாக்கும். மேலும் இது மன நிம்மதியை மேம்படுத்தும். வாரத்திற்கு ஒருமுறை முடியவில்லை என்றால் மாதம் ஒருமுறையாவது, வெளியே செல்லவும். இது இருவரிடையே புரிதல் உணர்வை அதிகரிக்கும்.
நேரம் கழித்தல்
ஒன்றாக புத்தகம் படிப்பது, சமையல் செய்வது, படம் பார்ப்பது, வீட்டை சுத்தம் செய்வது என விடுமுறை நாட்களில் ஒன்றாக நேரத்தை செலவிடவும். இது உங்களுக்குள் நல்ல நெருக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக மாலை நேரங்களில் வெளியே ஒரு வாள்க் செல்லவும்.