பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிச்சா நீரிழிவு நோய் வருமா? ஆய்வு கூறும் கருத்து என்ன?

  • SHARE
  • FOLLOW
பிளாஸ்டிக் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிச்சா நீரிழிவு நோய் வருமா? ஆய்வு கூறும் கருத்து என்ன?

இந்த ஆய்வானது பிளாஸ்டிக் வெளிப்பாடு மற்றும் பல்வேறு நோய்களுக்கு இடையே உள்ள தொடர்புகளைச் சுட்டிக் காட்டுகிறது. ஆனால் இதற்கான நேரடி காரணங்கள் கண்டறியப்படவில்லை. உணவு மற்றும் பான பேக்கேஜிங்கில் பிஸ்பெனால் ஏ (BPA) என்ற வேதிப்பொருள் நிறைந்திருக்கும். இந்த வேதிப் பொருளானது மனித ஆரோக்கியத்தில் ஏற்படும் தாக்கம் பற்றிய உறுதியான ஆதாரங்களை சமீபத்திய ஆராய்ச்சி வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளது. இதில் BPA-ன் தாக்கம் எவ்வாறு இன்சுலின் உணர்திறனைப் பாதிக்கிறது என்பதைக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Mango Peel Tea: மாம்பழ தோல் டீ குடித்தால் சர்க்கரை அளவு ஏறுமா? குறையுமா?

இன்சுலின் உணர்திறனில் BPA-ன் தாக்கம்

இன்சுலின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஹார்மோன் ஆகும். ஆய்வு ஒன்றில், இந்த இன்சுலினுக்குப் பதிலளிக்கும் உடலின் திறனை BPA கணிசமாகக் குறைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது இன்சுலினுக்கான உணர்திறன் குறைவது, இன்சுலின் எதிர்ப்பு மற்றும் தொடர்ந்து உயர் இரத்த சர்க்கரை அளவு உயர்த்தல் போன்றவை வகை 2 நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணியாக அமைகிறது. இந்த புதிய ஆராய்ச்சியானது அமெரிக்க நீரிழிவு சங்கத்தின் 2024 அறிவியல் அமர்வுகளில் வழங்கப்பட்டதாகும்.

கலிபோர்னியா பாலிடெக்னிக் ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆராய்ச்சியாளர்கள், 40 ஆரோக்கியமான பெரியவர்களை உள்ளடக்கி ஆய்வு ஒன்றை நடத்தினர். இந்த பங்கேற்பாளர்கள் தோராயமாக மருந்துப்போலி பெற்ற மற்றும் BPA இன் சிறிய தினசரி டோஸ் வழங்கப்பட்ட என இரண்டு குழுக்களாக ஒதுக்கப்பட்டனர். நான்கு நாட்களுக்குப் பிறகு, BPA இன் சிறிய தினசரி டோஸ் வழங்கப்பட்ட குழு இன்சுலின் உணர்திறனில் குறிப்பிடத்தக்க குறைவை வெளிப்படுத்தியது. அதே சமயம், மருந்துப்போலி குழுக்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. ஆய்வில் நிர்வகிக்கப்படும் டோஸ், ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 50 மைக்ரோகிராம், தற்போது EPA ஆல் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. எனினும், ஆய்வின் மூத்த எழுத்தாளரான டோட் ஹகோபியன் இந்த தரநிலையை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். ஏனெனில், இந்த வெளித்தோற்றத்தில் குறைந்த அளவு கூட தீங்கு விளைவிக்கலாம் என பரிந்துரைத்துள்ளார்.

மறுமதிப்பீடு செய்தல்

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் ஆனது உணவுக் கொள்கலன்களில் ஒரு நாளைக்கு ஒரு கிலோ உடல் எடையில் 5 மில்லிகிராம் BPA வரை அனுமதிக்கிறது. இது சமீபத்திய ஆய்வில் ஆபத்தானதாகக் கண்டறியப்பட்ட அளவை விட, கணிசமாக அதிகமாகலாம். எனினும் இந்த முரண்பாடு ஆனது, FDA-ன் விதிமுறைகளின் தன்மை மற்றும் பொது சுகாதாரத்தைச் சிறப்பாக பாதுகாக்க, புதுப்பிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

இதற்கு நேர்மாறாக, உலகின் பிற பகுதிகளில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகள் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஆணையமானது, BPA வேதிப்பொருள் உள்ள உணவு அல்லது பானங்களுடன் தொடர்பு கொள்ளும் பொருள்களை தடைவிதிப்பதாக அறிவித்துள்ளது. இது இந்த 2024 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைக்கு வர உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jamun Juice For Diabetes: எகிறும் சுகர் லெவலை அசால்ட்டாகக் குறைக்கும் மந்திர பானம்!

பொது சுகாதார கவலைகள் மற்றும் தாக்கம்

சமீபத்திய ஆய்வுகளில், மனித உயிரணுக்களுக்குள் ஊடுருவக்கூடிய மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல்களை ஏற்படுத்தக் கூடிய சிறிய துகள்களுடன் தொடர்புடைய அபாயங்களை எடுத்துரைக்கிறது. உடலின் பல்வேறு பகுதிகளில் அதாவது நுரையீரல் மற்றும் இனப்பெருக்க உறுப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் இந்த துகள்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பொருள்களின் நீண்டகால உடல் பாதிப்புகள் குறித்த ஆராய்ச்சி அவசியம் என்பதை எடுத்துக் காட்டுகிறது.

எனவே BPA வேதிப்பொருளின் சாத்தியமான உடல்நல அபாயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், டைப் 2 நீரிழிவு போன்ற நாட்பட்ட நிலைமைகளின் அபாயத்தைத் தணிக்க உதவும் குறிப்புகளைத் தெரிந்து கொள்வதும் முக்கியமானதாகும். ஆய்வின் கண்டுபிடிப்பில் பிபிஏ வெளிப்பாட்டைக் குறைப்பது அதாவது கண்ணாடி கொள்கலன்கள் அல்லது துருப்பிடிக்காத எஃகு கொள்கலன்களைப் பயன்படுத்துவது போன்றவை நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

குறிப்பு

உணவு மற்றும் பானங்கள் பேக்கேஜிங்கிற்கு உதவும் BPA ஒரு வசதியான பொருளாக இருப்பினும், இதன் சாத்தியமான உடல்நல அபாயங்களைப் புறக்கணிக்க முடியாது. மேலும் இதிலிருந்து BPA மற்றும் பிற தொழில்துறை இரசாயனங்களின் ஆபத்துகள் குறித்து ஆராய்ச்சி தேவைப்படுவதை உணர்த்துகிறது. இந்த ஆய்வுகள் பாதிப்பு ஏற்படுத்தும் வெளிப்பாட்டைக் குறைக்கவும், நீண்ட கால ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Flax Seeds For Diabetes: சர்க்கரை அளவு குறைய இந்த ஒரு விதையை எடுத்துக்கோங்க போதும்

Image Source: Freepik

Read Next

Milk Tea Vs Black Tea: சுகர் பேஷண்ட் எந்த டீ குடிக்கலாம்.? பால் டீ.? அல்லது பிளாக் டீ.?

Disclaimer