இயற்கையான முறையில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

  • SHARE
  • FOLLOW
இயற்கையான முறையில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கும் வழிகள்

அன்றாட வாழ்வில் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க சில இயற்கையான வழிகளை மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: காற்று மாசுபாட்டால் இதய ஆரோக்கியம் பாதிக்கப்படுமா? மருத்துவர் கூறும் கருத்து என்ன?

சோடியம் உட்கொள்ளலைக் குறைப்பது

பொதுவாக அதிகப்படியான சோடியம் உட்கொள்ளலின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாகலாம். நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 2,300 மில்லிகிராம் அளவுக்குக் குறைவான மில்லிகிராம் சோடியத்தை உட்கொள்ள வேண்டும். மேலும் உப்பு நிறைந்த தின்பண்டங்கள், பதிவு செய்யப்பட்ட சூப்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதில் அதிகளவிலான சோடியம் நிறைந்திருக்கும். உப்பு இல்லாத மூலிகைகள், மசாலாப் பொருள்களை எடுத்துக் கொள்ளலாம்.

இதய ஆரோக்கியத்திற்கான உணவுகள்

உணவில் அதிகளவிலான பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் குறிப்பாக DASH டயட் என்பது உயர் இரத்த அழுத்தத்தை நிறுத்த உதவும் உணவுமுறையாகும். இந்த உணவுமுறையைக் கையாள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

உடல் செயல்பாடுகளை மேம்படுத்துதல்

இன்று பெரும்பாலான பிரச்சனைகள் உடல் செயல்பாடுகள் இல்லாத காரணத்தினால் ஏற்படுகிறது. இதில் உயர் இரத்த அழுத்தமும் அடங்கும். வழக்கமாக உடற்பயிற்சி செய்வதை பழக்கப்படுத்துவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை குறைந்த முயற்சியில் இரத்தத்தை பம்ப் செய்ய உதவுகிறது. எனவே வாரத்தில் பெரும்பாலான நாட்களில் சைக்கிள் ஓட்டுதல், நடைபயிற்சி அல்லது நீச்சல் போன்ற மிதமான தீவிரமான செயல்களில் குறைந்தது 30 நிமிடங்களில் ஈடுபட வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: பிளாஸ்டிக் வாட்டர் பாட்டில் தண்ணீர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்குமா?

ஆரோக்கியமான உடல் எடை

அதிக உடல் எடையுடன் இருப்பது, இதயத்தின் அழுத்தத்தை அதிகரிக்கலாம். அதன்படி, சிறிதளவு உடல் எடையை குறைப்பது கூட இரத்த அழுத்தத்தைக் கணிசமாகக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. எனவே ஆரோக்கியமான உடல் எடையை அடையவும், பராமரிக்கவும் சீரான உணவு மற்றும் வழக்கமான உடல் செயல்பாடுகளில் கவனம் செலுத்த வேண்டும்.

பொட்டாசியம் உட்கொள்ளலை அதிகரிப்பது

உடலில் செல்களில் உள்ள சோடியத்தின் அளவை சமப்படுத்த பொட்டாசியம் உதவுகிறது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே பொட்டாசியம் நிறைந்த உணவுகளான வாழைப்பழம், ஆரஞ்சு, கீரை மற்றும் இனிப்பு உருளைக்கிழங்கு போன்றவற்றை உட்கொள்ளலாம். உணவில் போதுமான பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் உட்கொள்ளலை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும், சிறுநீரக பிரச்சனைகள் இருப்பின் மருத்துவரை அணுகுவது நல்லது.

மன அழுத்தத்தை நிர்வகிப்பது

நாள்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக உயர் இரத்த அழுத்தம் அதிகமாகலாம். எனவே மன அழுத்தத்தை நிர்வகிக்க ஆழ்ந்த சுவாசம், தியானம் அல்லது யோகா போன்ற செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும். இது போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளின் உதவியுடன் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்க முடியும்.

இவ்வாறு தினசரி பழக்க வழக்கங்களின் அடிப்படையில் வீட்டிலேயே இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Keto Diet Causes: கீட்டோ டயட் இருப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?

Image Source: Freepik

Read Next

Keto Diet Causes: கீட்டோ டயட் இருப்பது கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்குமா?

Disclaimer