சமீப காலமாக நுரையீரல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. முறையற்ற வாழ்க்கை முறை மற்றும் மன அழுத்தம் காரணமாக நுரையீரல் பலவீனமடைகிறது. ஆனால் நுரையீரலை ஆரோக்கியமாகவும் வலுவாகவும் மாற்ற சில வழிமுறைகள் உள்ளன.
மூச்சு இருக்கும் வரை மனிதன் உயிருடன் இருக்கிறான். ஆனால் நாம் எடுக்கும் மூச்சு சரியானதா என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். பரபரப்பான வாழ்க்கை முறையால் நுரையீரல் சேதமடைகிறது. இது பல நோய்களை உண்டாக்குகிறது.

ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், மாசுபாடு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறை ஆகியவை நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால் சில சுவாச நுட்பங்களைப் பின்பற்றுவதன் மூலம், நுரையீரலை ஆரோக்கியமாக மாற்றலாம்.
ஆழ்ந்த சுவாசம்
ஆழ்ந்த சுவாசம் ஒரு அற்புதமான, சக்திவாய்ந்த உடற்பயிற்சி. நேராக உட்கார்ந்து உங்கள் தோள்களை ரிலாஸ்காக வைத்துக்கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சை மெதுவாக உள்ளிழுக்க வேண்டும். வயிறு உயரும் வகையில் மூச்சை எடுத்து சில நொடிகள் மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். சுவாசத்தை மெதுவாக உள்ளிழுத்து, வெளியே விடவும். இதை ஒரு நாளைக்கு 5-10 முறை செய்யவும்.
அடிவயிற்று சுவாசம்:
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுத்து பின்னர் மெதுவாக வெளியே விடவும். அதிக நேரம் சுவாசிக்க வேண்டும். சில விநாடிகள் மூச்சை உள்ளே இழுக்கலாம். இந்த மூச்சுப்பயிற்சி பயம், பதற்றம், கவலைகளை விரட்ட உதவுகிறது. இதை நீங்கள் படுக்கையில் படுத்துக்கொண்டோ அல்லது நாற்காலியில் அமர்ந்தபடியோ செய்யலாம்.
கையை உங்கள் மார்பில் வைத்து, மற்றொரு கையை உங்கள் தொப்புளுக்கு மேல் வைக்கவும். இப்போது மூக்கு வழியாக சுவாசத்தை உள்ளிழுக்க வேண்டும். உங்கள் வாய் வழியாக சுவாசத்தை வெளிவிட வேண்டும்.
பிராணயாமா:
மற்றொரு நடைமுறை பிராணயாமா ஏறுவரிசை மற்றும் இறங்கு முறையில் செய்யப்படுகிறது. இரு நாசி வழியாக மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளிவிடவும். வலது நாசியை நடுவிரலால் மூடி, இரண்டாவது நாசியின் வழியாக ஆழ்ந்த மூச்சை எடுக்கவும். பின்னர் இடது பக்கத்தை மூடி வலது நாசி வழியாக மூச்சை உள்ளிழுக்கவும். இதை ஒரு நாளைக்கு 5-10 முறை செய்யவும்.
பஃபிங் பயிற்சி:
மற்றொரு முறை பஃபிங் ஆகும். கன்னங்களில் காற்றை நிரப்பவும். வசதியாக உட்கார்ந்து, உங்கள் வாயை மூடிக்கொண்டு, உங்கள் மூக்கு வழியாக ஆழமாக சுவாசிக்கவும். மிகவும் மெதுவாக, வாயில் காற்றை நிரப்ப வேண்டும். இந்த செயல்முறை ஒரு நாளைக்கு 5-10 முறை செய்யப்பட வேண்டும்.
Image Source: Freepik