What are the best habits for lung health: உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் மிக முக்கிய செயல்பாடுகளைச் செய்து வருகிறது. அந்த வகையில், நாம் சுவாசிக்க உதவும் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் இது நமது உடலில் இருந்து ஆபத்தான கார்பன் டை ஆக்சைடை அகற்றி, உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஆனால் புகைபிடித்தல், மோசமான வாழ்க்கை முறை மற்றும் அதிகரித்து வரும் மாசுபாடு போன்றவற்றால் சுவாசக் கோளாறுகள் அதிகளவில் ஏற்படுகிறது.
நாளடைவில் இதற்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், நிமோனியா, ஆஸ்துமா மற்றும் நாள்பட்ட அடைப்புக்குரிய நுரையீரல் நோய் போன்றவை ஏற்படலாம். எனினும், இந்த சிக்கல்களிலிருந்து விடுபட அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்களைச் செய்யலாம். சிறந்த வாழ்க்கை முறை தேர்வுகளை மேற்கொள்வதன் மூலமும், சுற்றுப்புறங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும், நீண்டகாலம் வரை நுரையீரலை பலப்படுத்தி பாதுகாத்துக்கொள்ள முடியும். இதில் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வாழ்க்கை முறை மாற்றங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Lungs: உங்கள் நுரையீரல் சரியாக இயங்குகிறது என்பதை அறிய எளிய வழிகள்!
நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அன்றாட பழக்க வழக்கங்கள்
பொது ஆரோக்கியத்தைப் பராமரிப்பது
ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பராமரிப்பது நுரையீரலைப் பாதுகாப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். இதில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்கள், காய்கறிகள் உட்கொள்ளல், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உள்ளிட்டவை அடங்கும். மேலும், சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளை உட்கொள்வது உடல் பருமனை ஏற்படுத்துகிறது. இது சுவாச பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. ஏனெனில், உடல் பருமன் நுரையீரல் திறனைக் குறைத்து, உதரவிதானத்தில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக நுரையீரல் பிரச்சனைகளின் அபாயம் எழலாம்.
கனமான இரவு உணவைத் தவிர்ப்பது
பொதுவாக மாலை நேரத்தில் அதிகளவு உணவு உட்கொள்வது உதரவிதானத்தை சுருக்கி, தூங்கும் போது, நுரையீரல் சரியாக விரிவடைவதை கடினமாக்குகிறது. இதைத் தவிர்க்க, மாலையில் எடுத்துக் கொள்ளும் உணவு இலகுவாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். கூடுதலாக, ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது, சிறிய மற்றும் அடிக்கடி உணவு உட்கொள்வது வீக்கத்தைக் குறைத்து, நுரையீரல் அசௌகரியத்தைக் குறைக்கிறது.
மூச்சுப்பயிற்சி
அடிக்கடி சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது நுரையீரல் திறனை மேம்படுத்தி உதரவிதானத்தை வலுப்படுத்துகிறது. இதற்கு பிராணயாமா எனப்படும் ஒரு வகையான யோக சுவாசம் குறிப்பாக உதவுகிறது. ஏனெனில், இது நுரையீரலை முழுமையாக விரிவுபடுத்த அனுமதிக்கும் ஆழமான, அமைதியான சுவாசத்தை ஊக்குவிக்கிறது. மேலும் சில சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்வது நீண்ட கால சுவாசக் கோளாறுகள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலைக் குறைக்கவும், சுவாச திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே, நாள்தோறும் சில நிமிடங்கள் மூச்சுப் பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தினை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Lung Cancer: நுரையீரல் புற்றுநோயை அடையாளம் காண்பது எப்படி? என்னென்ன அறிகுறிகள் வரும்?
சீரான உணவு
உயர்தர புரத உணவு உட்கொள்ளலின் மூலம் நுரையீரல் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த சுவாச ஆரோக்கியத்தையும் ஊக்குவிக்கலாம். அதே சமயம் உடலில் திரவ உட்கொள்ளலை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. ஏனெனில், இது அதிகப்படியான வீக்கத்தை ஏற்படுத்தலாம். இது உதரவிதானத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி, சுவாசத்தை கடினமாக்கலாம். எனவே சீரான உணவு மற்றும் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்வதன் மூலம் உடல் மற்றும் நுரையீரல் சிறப்பாக செயல்படும்.
உட்புற மாசுபாட்டைத் தவிர்ப்பது
சுவாசக் கோளாறு பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள், வெளிப்புற காற்று மாசுபாடு போலவே உட்புற மாசுபாட்டையும் தவிர்க்க வேண்டும். எனவே உட்புற காற்றின் தரத்தை உயர்வாக வைக்க, வீட்டில் கொசுவர்த்தி சுருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இவை சுவாச ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் புகை மற்றும் இரசாயனங்களை வெளியிடுகிறது. மேலும், நுரையீரலை எரிச்சலடையச் செய்யும் காற்றில் துகள்களை வெளியிடுதலைத் தவிர்க்க வேண்டும். மேலும், ஒவ்வாமை அல்லது சுவாசப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் செல்லப்பிராணிகளை வளர்ப்பதிலிருந்தும், பறவைகளை வளர்ப்பதிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.
இவ்வாறு ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பு நிறைந்த அன்றாட நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!
Image Source: Freepik