Chia Seeds Health Risk: நன்மைக்காக நீங்கள் சியா விதைகளை சாப்பிட்டால், சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். இல்லையெனில் அது ஆரோக்கியத்திற்கே ஆபத்தாகும்.
சியா விதைகளின் நன்மைகள்:
முக்கிய கட்டுரைகள்
சியா விதைகள் ஊட்டச்சத்து நிறைந்தவை. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். ஆக்ஸிஜனேற்றிகள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதால், பலர் தங்கள் உணவில் சியா விதைகளை சேர்த்துக் கொள்கிறார்கள். குறிப்பாக எடை குறைப்பு, இதய ஆரோக்கியம் மற்றும் மலச்சிக்கலை போக்க உதவுகிறது.

மேலும் செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. ஆனால் சியா விதைகளை சாப்பிடும் போது மக்கள் அடிக்கடி இந்த தவறுகளை மீண்டும் செய்கிறார்கள். இதனால் உடலுக்கு முழு பலன் கிடைப்பதில்லை. அந்த தவறுகள் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்
சியா விதைகளை ஊறவைக்காமல் சாப்பிடலாமா?
சியா விதைகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சியா விதைகளை அரைத்து அல்லது முழுவதுமாக உண்ணலாம். ஆனால் சாப்பிடும் முன் ஊறவைக்க வேண்டியது அவசியம்.
இதையும் படிங்க: Garlic for weight loss: சரசரவென உடல் எடையைக் குறைக்க… பூண்டை இப்படி பயன்படுத்துங்க!
இதன் காரணமாக, சியாவின் சத்துக்கள் உடலில் வேகமாக உறிஞ்சப்படுகிறது. உலர்ந்த சியா விதைகள் அல்லது அதன் தூள் சாப்பிடுவது மூச்சுத்திணறல் அபாயத்தை அதிகரிக்கிறது.
நீரேற்றமாக இருக்க வேண்டும்:
சியா விதைகள் உடலில் திரவத்தை விரைவாக உறிஞ்சும். இதை சாப்பிட்ட பிறகு போதுமான அளவு தண்ணீர் குடித்தால்
குடிக்கவில்லை என்றால், நீரிழப்பு ஏற்படலாம். குறிப்பாக இந்த சியா விதைகளை அதிக அளவில் உட்கொள்ளும் போது கட்டாயம் அதிக அளவில் தண்ணீர் பருக வேண்டும்.
ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாதீர்கள்:
சில அறிக்கைகளின்படி, சியா விதைகள் அவற்றின் எடையை விட 30 மடங்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுகின்றன. நீங்கள் ஒரே நேரத்தில் அதிக சியா விதைகளை சாப்பிடும்போது, அது வீக்கம், வாயு, மலச்சிக்கல் மற்றும் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
இந்த உணவுகளோடு கட்டாயம் சாப்பிடக்கூடாது:
சியா விதைகளை ஸ்மூத்தி மற்றும் தயிர் போன்றவற்றில் சேர்த்து சாப்பிடுவது வழக்கம். ஆனால் ஆரோக்கியமற்ற சர்க்கரை பானங்களில் சேர்த்து அதை உட்கொண்டால், அது நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய ஆபத்துக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
ஒழுங்காக சேமிக்கவும்:
சியா விதைகள் சரியாக சேமிக்கப்படாவிட்டால், ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும். மேலும் ஈரப்பதம் கொண்ட சியா விதைகளில் பாக்டீரியாவும் வளரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சியா விதைகளை ஈரப்பதத்திலிருந்து பாதுகாக்க வேண்டும் மற்றும் காற்று புகாத கொள்கலனில் சேமித்து வைக்க வேண்டும்.
Image Source: freepik