Fri Sep 11, 2026 | 11:44 PM IST

Doctor Verified

முடி உதிர்வை குறைக்க வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலிகை எண்ணெய்.! மருத்துவர் நித்யா வழங்கும் முழு செய்முறை..

முடி உதிர்வை கட்டுப்படுத்தும், நரை குறைக்கும், பொடுகை நீக்கும், அடர்த்தியான முடி வளர்க்கும் சக்திவாய்ந்த வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மூலிகை ஹேர் ஆயிலை மருத்துவர் நித்யா பரிந்துரைக்கிறார். செய்முறை மற்றும் பயன்கள் முழுமையாக!

தலைமுடி உதிர்வு, நரை மற்றும் அடர்த்தியின்மை போன்ற பிரச்சனைகளால் பலர் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், சித்த மருத்துவத்தில் பல பயனுள்ள தீர்வுகள் உள்ளன என மருத்துவர் நித்யா தொடர்ந்து விளக்கிவருகிறார். சமீபத்தில் வெளியான அவரது யூடியூப் வீடியோவில், வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சக்திவாய்ந்த மூலிகை ஹேர் ஆயில் குறித்த விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இந்த எண்ணெயின் தனிச்சிறப்பு – முழுவதும் இயற்கை மூலிகைகள், பக்க விளைவுகள் இல்லை, ஒருமுறை தயாரித்தால் 8 மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என அவர் தெரிவிக்கிறார்.

இந்த எண்ணெயில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலிகைகள்

1. பிஞ்சு கடுக்காய், மகிழம்பூ

உடல் உஷ்ணத்தை குறைத்து, கூந்தல் வளர்ச்சியை ஊக்குவிக்கும். பித்தத்தை சமநிலைப்படுத்தும் தன்மை பெற்றவை.

2. கருப்பு எள் (முளைக்கட்டியது)

கூந்தல் வேர்களுக்கு தேவையான தாதுச் சத்துகளை வழங்கி, முடி வலுவடைவதை உதவுகிறது.

3. சூரியகாந்தி விதைகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலம், ஹைலூரானிக் அமிலம், வைட்டமின் E உள்ளிட்ட பல சத்துகள் நிறைந்தது. தலைதோலுக்கு மிகச் சிறந்த ஊட்டச்சத்தை தருகிறது.

4. கற்றாழை ஜெல்

முடியை ஈரப்பதமூட்டும், மென்மையாக்கும், வளர்ச்சியைத் தூண்டும்.

5. எலுமிச்சை

முழுவதையும் தோலோடு அரைத்து பயன்படுத்தப்படுகிறது. முடியை சுத்தப்படுத்தி, பளபளப்பை அதிகரிக்கிறது.

6. ஆலம் விழுது

வலுவான இயற்கை மருத்துவப் பயன்கள் கொண்டது.

7. வெட்டிவேர்

குளிர்ச்சியும் நறுமணமும் தரும். தலைமுடிக்கு சாந்தம் வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: முடி வேர் ஸ்ட்ராங்கா இருக்க உதவும் ஐந்து டிப்ஸ் இதோ.. மருத்துவர் தரும் விளக்கம்

எண்ணெய் தயாரிக்கும் செய்முறை

  • பிஞ்சு கடுக்காய், மகிழம்பூ – பொடி செய்யவும்
  • முளைக்கட்டிய கருப்பு எள், சூரியகாந்தி விதைகள் – அரைத்து பேஸ்ட் ஆக்கவும்
  •  கற்றாழை ஜெல் – தனியாக எடுக்கவும்
  • எலுமிச்சை – தோலோடு அரைக்கவும்
  • ஆலம் விழுது, வெட்டிவேர் – சிறு துண்டுகளாக வெட்டவும்
  • அனைத்தையும் இரும்பு பாத்திரத்தில் சேர்த்து, தேவையான அளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி 3–4 மணி நேரம் மிதமான தீயில் காய்ச்ச வேண்டும்.
  • ஒரு நாள் முழுவதும் ஊறவைத்து, மறுநாள் வடிகட்ட வேண்டும்.
  • சுமார் 2 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்.

யார் பயன்படுத்தலாம்?

  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும்
  • வாதம், பித்தம், கபம் மூன்று தோஷங்களையும் சமப்படுத்தும்
  • உடல் சூடு அதிகமுள்ளவருக்கும் பயன்படுத்தலாம்

இந்த மூலிகை எண்ணெயின் முக்கிய நன்மைகள்

  • பொடுகை அகற்றும்
  • பலவீனமான வேர்களை வலுப்படுத்தும்
  • முடி உதிர்வை குறைக்கும்
  • நரைமுடி பிரச்சனையை கட்டுப்படுத்தும்
  • தலைக்கு குளிர்ச்சி தரும்
  • மனஅழுத்தம், மூட் ஸ்விங்ஸ் குறையும்
  • தலை தோலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்
  • கூந்தல் அடர்த்தியாக வளரும்

இதையும் படிங்க: கொட்டும் முடி உதிர்வை நிறுத்த வீட்டில் தயாரித்த இந்த எண்ணெயை 10 நாள் யூஸ் பண்ணி பாருங்க.. முடி மீண்டும் வளரும்

எப்படி பயன்படுத்துவது?

  • எண்ணெயை லேசாக சூடாக்கி
  • உச்சந்தலையில் நன்றாக மசாஜ் செய்யவும்
  • அரை மணி நேரம் கழித்து
  • மூலிகை ஷாம்பூ/இயற்கை ஷாம்பூ பயன்படுத்தி அலசவும்

கெமிக்கல் ஷாம்பூ பயன்படுத்த வேண்டாம் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். அதோடு, உடல் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை குறைக்கவும் கரிசாலை லேகியம் / கற்பம் போன்ற சித்த மருந்துகள் மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்தால், முடி உதிர்வு பிரச்சனை விரைவாகக் கட்டுப்படும் என அவர் கூறுகிறார்.

இறுதியாக..

முடி உதிர்வு, பொடுகு, நரை போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான, பாதுகாப்பான, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய சிறந்த சித்த மருத்துவ தீர்வு இந்த மூலிகை எண்ணெயாகும். தொடர்ந்து பயன்படுத்தினால் தலைமுடியின் வலிமை, அடர்த்தி மற்றும் ஆரோக்கியம் கணிசமாக அதிகரிக்கும்.

Disclaimer: இந்த கட்டுரை பொதுத் தளங்கள் மற்றும் நிபுணர்களின் தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

Read Next

பல முடி பிரச்சனைகளுக்கு ஒரே தீர்வு.. வெங்காயச் சாற்றை தலைக்கு இப்படி தடவி பாருங்க! எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 03, 2025 16:23 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content