ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி?
நெயில் பாலிஷ் ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றும் சில எளிய வழிகளைப் இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
முக்கிய கட்டுரைகள்
உங்கள் நெயில் பாலிஷ் ரிமூவர் தீர்ந்துவிட்டால் என்ன செய்வது? கவலை வேண்டாம். உங்கள் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்றுவதற்கான சில எளிய வழிகளை நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம்.
1. டூத் பேஸ்ட்
நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்க டூத் பேஸ்ட்டை பயன்படுத்தலாம். ஒரு பிரஷின் உதவியுடன் உங்கள் நகங்களின் மேல் டூத் பேஸ்ட்டை மென்மையாகத் தேய்க்கவும். டூத் பேஸ்ட்டில் சிறிதளவு பேக்கிங் சோடாவை கலந்து நெயில் பாலிஷை நீக்கினால், இன்னும் சுலபமாக நீக்கிவிடலாம்.
2. வெந்நீர்
நகங்களை வெந்நீரில் சிறுது நேரம் வைக்கவும். நகங்களைத் வெந்நீரில் வைத்திருக்கும்போது நெயில் பாலிஷை அகற்ற முயற்சிக்கவும். நகங்களைக் குறைந்தது 25 முதல் 30 நிமிடங்கள் வரை வெந்நீரில் வைத்திருக்க வேண்டும். உங்கள் நகங்களை இப்படி வெந்நீரில் வைப்பதன் மூலம் நெயில் பாலிஷை எளிதாக நீக்கிவிடலாம்.
3. எலுமிச்சை
நெயில் பாலிஷை நீக்க எலுமிச்சையை பயன்படுத்தலாம். பாதியாக வெட்டிய எலுமிச்சையை நகங்களில் தேய்க்கவும். எலுமிச்சை சாறு நகத்தில் உள்ள நெயில் பாலிஷை நீக்கும். பிறகு வெந்நீரில் எலுமிச்சை சாற்றைச் கலந்து, அந்தக் கலவையில் உங்கள் கைகளை வைக்கலாம். இது நெயில் பாலிஷை முற்றிலுமாக நீக்கிவிடும்.
4. ஹைட்ரஜன் பெராக்சைடு
நகங்களிலிருந்து நெயில் பாலிஷை அகற்ற ஹைட்ரஜன் பெராக்சைடைப் பயன்படுத்தலாம். சூடான நீரில் ஹைட்ரஜன் பெராக்சைடு சேர்க்கவும். இந்த நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை உங்கள் கைகளை வைக்கவும். பின்னர் நெயில் கட்டரில் இருக்கும் நக சீரமைக்கும் இணைப்புகளின் உதவியுடன் நெயில் பாலிஷை எளிதாக அகற்றி விடலாம்.
5. வினிகர்
வினிகர் நெயில் பாலிஷை அகற்ற உதவுகிறது. வினிகர் மற்றும் எலுமிச்சை சாறை சூடான நீரில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தக் கலவையைக் கைகளில் தடவி 10 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பிறகு உங்கள் நகங்களில் உள்ள நெயில் பாலிஷை அகற்ற முயற்சி செய்யலாம். இந்த குறிப்புகள் மூலம் நெயில் பாலிஷை எளிதில் அகற்றலாம்.
நெயில் பாலிஷை அகற்ற மெலிவூட்டி(Thinner) அல்லது அசிட்டோனைப் சருமத்திற்கு வேண்டாம். இந்த இரசாயனங்கள் உங்கள் நகம் மற்றும் சருமத்திற்குப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
All Images Credit: freepik