
ஆயுர்வேத மருத்துவர் மற்றும் உணவு நிபுணர் டாக்டர் மைதிலி தனது YouTube சேனலில் வஞ்சிரம் மீனின் அற்புதமான ஆரோக்கிய நன்மைகள் குறித்து விரிவாக விளக்கமளித்துள்ளார். அவரது கூற்றுப்படி, வஞ்சிரம் மீனில் நிறைந்துள்ள ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் E, வைட்டமின் A, புரதச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் மற்றும் வைட்டமின் B12 போன்ற சத்துக்கள் உடலின் பல்வேறு அமைப்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.
Video Link: https://youtu.be/mTVP_c5IBi4
வஞ்சிரம் மீன் சாப்பிடுவதன் நன்மைகள்
மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு உதவும்
ஒமேகா–3 கொழுப்பு அமிலங்கள் மூளைக்குத் தேவையான இரத்த ஓட்டத்தை சீராக்கி, நினைவாற்றலை அதிகரிக்கின்றன. வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் இதுவே முக்கியம். இதயத்திலுள்ள கொழுப்பு படிதலைக் குறைத்து, மாரடைப்பு அபாயத்தைக் கட்டுப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் சக்தி கொண்டது என்றும் டாக்டர் மைதிலி கூறுகிறார்.
சருமத்தைப் பாதுகாக்கும் அழகு மீன்
வஞ்சிரம் மீனில் உள்ள வைட்டமின் E மற்றும் ஒமேகா–3 சேர்ந்து சருமத்தின் ஈரப்பதத்தைக் காக்கின்றன. இது சரும வறட்சியைத் தடுக்கிறது, கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது, பளபளப்பான தோலை வழங்குகிறது.
கண் பார்வை தெளிவாகும்
வைட்டமின் A சத்து கண் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. மாலைக்கண் நோய், கிளௌகோமா (Glaucoma), கேட்டராக்ட் (Cataract) போன்ற பிரச்சனைகள் உருவாகும் வாய்ப்பைக் குறைக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
செலினியம் மற்றும் வைட்டமின் B12 சத்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. இதனால் வைரஸ் மற்றும் பாக்டீரியா தாக்கத்திலிருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
தைராய்டு மற்றும் மன அழுத்த நிவாரணம்
வஞ்சிரம் மீனை தைராய்டு பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் ஹைப்போதைராய்டு அறிகுறிகள் குறையும். மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கும் இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது.
தசை மற்றும் எலும்பு வளர்ச்சி
புரதச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்திருப்பதால் தசைகள் மற்றும் திசுக்கள் வலுப்பெறுகின்றன. எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, ஆர்த்ரைடிஸ் (Arthritis) மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் (Osteoporosis) போன்ற நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.
கர்ப்பிணிப் பெண்களுக்கு எச்சரிக்கை
வஞ்சிரம் மீனில் மெர்குரி (பாதரசம்) அளவு அதிகம் உள்ளதால், கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் இதனை 10 நாட்களுக்கு ஒருமுறை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று டாக்டர் மைதிலி எச்சரிக்கிறார். மற்றவர்கள் வாரத்திற்கு ஒருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
இறுதியாக..
வஞ்சிரம் மீன் ஒரு சுவையான கடல் உணவு மட்டுமல்ல, உடலின் அனைத்து முக்கிய அமைப்புகளுக்கும் வலிமை தரும் இயற்கை மருந்து போன்றது. ஆனால், எப்போதும் அளவோடு, சமைத்த நிலையில் உட்கொள்வது மட்டுமே பாதுகாப்பானது என நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான ஆரோக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை உட்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம். தனிநபர் உடல்நிலை, வயது மற்றும் மருத்துவ பின்னணியைப் பொறுத்து விளைவுகள் மாறுபடலாம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 17, 2025 12:00 IST
Published By : Ishvarya Gurumurthy