Fri Sep 11, 2026 | 11:10 PM IST

Doctor Verified

இதய நோயிலிருந்து புற்றுநோய் வரை.. சப்பாத்திக்கள்ளி பழம் தரும் நன்மைகள் – மருத்துவர் மைதிலி விளக்கம்.!

சப்பாத்திக்கள்ளி பழம் (Prickly Pear) பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்டது. இதய நோய், மலட்டுத்தன்மை, புற்றுநோய், சருமம் மற்றும் கண் பிரச்சனைகள் வரை பல நோய்களை தடுக்கும் சக்தி கொண்டது என்கிறார் மருத்துவர் மைதிலி. இதன் அற்புத நன்மைகளை அறிந்து கொள்ளுங்கள்.

இயற்கை நமக்கு அளித்த அதிசயமான உணவுகளில் ஒன்று சப்பாத்திக்கள்ளி பழம். வெளிப்புறத்தில் முட்கள் நிறைந்ததாக இருந்தாலும், அதன் உள்ளே நிறைந்திருக்கும் சத்துக்கள் நம் உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை அளிக்கின்றன. இதய நோயிலிருந்து சருமப் பிரச்சனை வரை பல பிரச்சனைகளுக்கு இது ஒரு இயற்கை மருந்தாக கருதப்படுகிறது என்கிறார் மருத்துவர் மைதிலி.

சப்பாத்திக்கள்ளி பழம் தரும் நன்மைகள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

சப்பாத்திக்கள்ளி பழத்தை அடிக்கடி உண்பது இதயத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, சீரான இதயத் துடிப்பை பராமரிக்க உதவுகிறது. மேலும், இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தை குறைத்து இதய நோய் அபாயத்தை தடுக்கிறது.

artical  - 2025-10-13T130249.220

கருவுறுதலை மேம்படுத்தும்

மலட்டுத்தன்மை பிரச்சனைக்கு இது ஒரு இயற்கை மருந்தாக கருதப்படுகிறது. “ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கவும், பெண்களில் மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தவும் சப்பாத்திக்கள்ளி பழம் உதவுகிறது. இதனால் கருவுறுதல் வாய்ப்பு உயரும்” மருத்துவர் மைதிலி கூறுகிறார். மேலும், ஆண்களின் விந்தணுக்களின் தரம் மற்றும் எண்ணிக்கையையும் இது மேம்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Video Link: https://youtu.be/jsp4KyQVURM

புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்

இந்த பழத்தில் உள்ள பிளேவனாய்ட்கள் மற்றும் பாலிபினால்கள் போன்ற ஆன்டிஆக்சிடன்ட்கள், புற்றுநோயை ஏற்படுத்தும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகின்றன. முக்கியமாக, மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தை குறைக்க இது உதவுகிறது.

சருமத்தை இளமையாக்கும்

சப்பாத்திக்கள்ளி பழத்தில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் சரும செல்களை புதுப்பித்து, சுருக்கங்கள் உருவாகுவதை தாமதப்படுத்துகின்றன. இதனால் சருமம் பளபளப்பாகவும் இளமையாகவும் தெரியும். தொடர்ந்து இதனை உணவில் சேர்த்தால், சருமம் இயற்கையாக பிரகாசிக்கும்.

கண் பார்வையை பாதுகாக்கும்

வயது முதிர்வால் ஏற்படும் மாகுலர் டெஜெனரேஷன் மற்றும் கண்புரை போன்ற பிரச்சனைகளை தாமதப்படுத்த சப்பாத்திக்கள்ளி பழம் உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் A மற்றும் கரோட்டினாய்ட்கள் கண்பார்வையை கூர்மையாக்குகின்றன.

உடல் எடையைக் கட்டுப்படுத்தும்

சப்பாத்திக்கள்ளி பழம் நார்ச்சத்துகளில் மிகச் செறிந்தது. இதனை சாப்பிடுவதால் செரிமானம் சீராகி, நீண்ட நேரம் பசியில்லாமல் இருக்க உதவுகிறது. இதனால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும், இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை பிரச்சனைகளையும் குறைக்கிறது.

உடல் வீக்கத்தை குறைக்கும்

சப்பாத்திக்கள்ளி பழம் இயற்கையான ஆண்டி-இன்ஃபிளமட்டரி பண்புகளை உடையது. உடலில் உள்ள வீக்கங்களை குறைக்க இது உதவும். இதனை உட்கொள்வதோடு, வெளிப்புறமாக தடவுவதாலும் வீக்கம் குறையலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒன்றல்ல.. இந்த இரண்டு நன்மைகளையும் அள்ளித்தரும் சோம்பு நீர்.. மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

சப்பாத்திக்கள்ளி பழம் எப்படிச் சாப்பிடலாம்?

* பச்சையாக வெட்டிச் சாப்பிடலாம்.

* உலர்த்தி ஜாம் அல்லது ஸ்மூத்தியாக தயாரிக்கலாம்.

* குழந்தைகளுக்கு கொடுக்கும் முன் தோலை நன்றாக நீக்கி, விதைகளை எடுத்துவிடுவது அவசியம்.

சப்பாத்திக்கள்ளி பழம் வெறும் முட்கள் நிறைந்த கனி மட்டுமல்ல, பல்வேறு சத்துக்களால் நிறைந்த ஒரு அற்புதமான இயற்கை உணவு. இதனை உணவில் சேர்த்தால், நம்மை பல நோய்களில் இருந்து பாதுகாக்கும்.

artical  - 2025-10-13T130521.598

இறுதியாக..

சப்பாத்திக்கள்ளி பழம் நம் உடலுக்குப் பல்வேறு திசைகளில் நன்மை தருகிறது. இதயத்திலிருந்து சருமம் வரை. தொடர்ந்து இதனை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை அனுபவிக்கலாம். இயற்கையின் இந்த அற்புதப் பரிசை நம் உணவில் ஒரு பகுதியாக்குவோம்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. சப்பாத்திக்கள்ளி பழத்தை மருத்துவ நோக்கத்திற்காக உட்கொள்வதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியம். ஒவ்வாமை அல்லது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்கள் தவிர்க்கவும்.

Read Next

ஒன்றல்ல.. இந்த இரண்டு நன்மைகளையும் அள்ளித்தரும் சோம்பு நீர்.. மருத்துவர் ஹன்சாஜி விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 13, 2025 13:11 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content