Is aloe vera and coconut oil good for dandruff: யாருக்குத்தான் கருமையான நீளமான பளபளப்பான கூந்தல் பிடிக்காது. ஆரோக்கியமான கூந்தலை பெற நாம் தலை முடியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். நம்மில் பலர் கூந்தலை பராமரிக்க சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் கூந்தலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், இவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, பொடுகு, முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : கொத்து, கொத்தாய் முடி கொட்டுதா?… இந்த மோசமான நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!
தயிர் மற்றும் தேன் ஹேர் மாஸ்க்

உங்கள் தலைமுடி வறண்டு போயிருந்தால், தயிர் மற்றும் தேனில் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தலாம். ஏனெனில், தயிரில் புரோட்டீன் மற்றும் லாக்டிக் அமிலம் இருப்பதால் இது முடிக்கு ஊட்டமளிக்கிறது. தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் மாய்ஸ்சரைசிங் பண்புகள் இருப்பதால் முடியை பட்டுப் போல் ஆக்குகிறது.
எப்படி பயன்படுத்துவது?
- இதற்கு முதலில் உங்கள் தலைமுடியை சிக்கு இல்லாமல் சீவவும்.
- ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் தயிர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து கொள்ளவும்.
- பின், இந்த கலவையை நன்கு கலக்க வேண்டும்.
- இப்போது இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி நன்றாக மசாஜ் செய்ய வேண்டும்.
- பின்னர் அதை தலைமுடியில் 30 நிமிடங்கள் அப்படியே வைத்திருக்க வேண்டும்.
- இதற்குப் பிறகு, ஷாம்பூவுடன் முடியை சுத்தம் செய்யவும்.
- இது உங்கள் தலைமுடிக்கு ஊட்டச்சத்தை அளிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Growth Secret: முடி நீளமாக வளர வல்லுநர்கள் கூறும் சீக்ரெட் டிப்ஸ் இதோ!
அலோ வேரா ஜெல் மற்றும் தயிர் ஹேர் மாஸ்க்

அலோ வேரா ஜெல் முடிக்கு மிகவும் நல்லது. ஏனெனில், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை முடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கும். இந்த ஹேர் மாஸ்க் பொடுகை நீக்கவும் உதவுகிறது.
எப்படி பயன்படுத்துவது?
- இதற்கு முதலில் கற்றாழை ஜெல்லை ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
- பிறகு அதனுடன் தயிர் சேர்க்கவும்.
- அதன் பிறகு, இந்த கலவையை நன்கு கலந்து, தலைமுடியில் தடவவும்.
- இப்போது அதை 30 நிமிடங்கள் அப்படியே விடவும்.
- பின்னர், ஷாம்பு கொண்டு முடியை சுத்தம் செய்யவும்.
இந்த பதிவும் உதவலாம் : Hair Loss Diabetes: சர்க்கரை நோயினால் முடி உதிர்வு பிரச்சனையா? இதோ உங்களுக்கான டிப்ஸ்
இது உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், மென்மையாகவும், பட்டுப் போலவும் மாற்றும்.
Pic Courtesy: Freepik