Colored Hair Care: ஹேர் கலரிங் செஞ்சியிருக்கீங்களா?… இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

  • SHARE
  • FOLLOW
Colored Hair Care: ஹேர் கலரிங் செஞ்சியிருக்கீங்களா?…  இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

சாதாரணமாக இருக்கும் போது கூந்தலுக்கு எந்த அக்கறையும் எடுக்க வேண்டியதில்லை,ஆனால் முடிக்கு வண்ணம் பூசும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் முடியின் நிலை மோசமாகிவிடும். ஆனால் உங்கள் தலைமுடிக்கு சாயம் பூசும்போது ஏன் கவனமாக இருக்க வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

பலர் மாற்றத்திற்காகவோ அல்லது ஸ்டைலுக்காகவோ தலைமுடியில் கலரிங் செய்து கொள்கிறார்கள். ஆசை ஆசையாய் ஹேர் கலரிங் செய்த பிறகு, முடியை முறையாக பராமரிக்கவில்லை என்றால் நிறமாற்றம் மட்டுமல்ல ஒட்டுமொத்த முடியையும் கூட இழக்க நேரிடலாம். எனவே இதுபோன்ற நேரத்தில் கூந்தலுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா கேர் கொடுக்க வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

என்னென்ன பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு?

ஹேர் கலரிங் செய்த பிறகு உச்சந்தலையில் வறட்சி, அரிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே ஹேர் கலரிங் செய்த பிறகும் பட்டு போன்ற பளபளப்பான கூந்தலை பெற விரும்பினார், ஹேர் வாஷ் செய்யும் போது உங்கள் தலைமுடியை மிகவும் மென்மையான ஷாம்பு கொண்டு ஹேர் வாஷ் செய்ய வேண்டும்.

குறிப்பாக அதிக அளவில் வியர்க்கும் பிரச்சனை உள்ளவர்கள், அடிக்கடி ஷாம்பு போட்டு ஹேர் வாஷ் செய்ய வேண்டும். அதேபோல் ஒவ்வொருமுறை தலைக்கு குளித்த பிறகும், உச்சந்தலையை நன்றாக உலர்த்த வேண்டும். அப்போது தான் பொடுகு போன்ற தொற்றுகளிலிருந்து தப்ப முடியும். எனவே கோடை காலத்தில் வியர்வை, ஈரம் என உணரும் போது குளிக்கவும்.

ஷாம்புகளின் தேர்வு:

உச்சந்தலைக்கு பாதுகாப்பாகவும், ஹேர் கலரை பாதிக்காத வகையிலும் ஒரு நல்லகலர் ஃபிக்சிங் ஷாம்பு மற்றும் கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக மைல்ட் லெவல் ரசாயனங்களைக் கொண்ட ஷாம்புவை பயன்படுத்த மறக்காதீர்கள்.

ஏனெனில் அவை உச்சந்தலையில் pH அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். நல்ல ஊட்டச்சத்தை அளிப்பதோடு, மயிர் கால்களை வலுவாக்கும்.

ஹேர் மாஸ்க்:

கலர் ஃபிக்சேஷன் ஹேர் மாஸ்க்குகள் முடிக்கு மிகவும் நல்லது. இந்த ஹேர் மாஸ்கள் முடிக்கு பளபளப்பைக் கொடுப்பது மட்டுமல்லாமல், முக்கிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.

முடியின் கலரிங்கை பராமரிக்க வாரத்திற்கு இரண்டு முறையாவது இவற்றைப் பயன்படுத்துங்கள். தலைமுடிக்கு சாயம் பூசாதவர்கள் கூட அடிக்கடி ஹேர் மாஸ்க் போட்டால் முடிக்கு நல்ல சத்துக்கள் கிடைக்கும்.

மருதாணியின் நன்மைகள்:

உங்கள் தலைமுடிக்கு சாயம் பூச விரும்பினால், ரசாயனங்களுக்கு பதிலாக மருதாணி பயன்படுத்தலாம். சந்தையில் கிடைக்கும் கெமிக்கல் ஹேர் கலர்களுக்கு இயற்கையான மருதாணி பேஸ்ட் ஒரு நல்ல மாற்றாகும்.

ஆனால் மருதாணியைத் தேர்ந்தெடுக்கும்போது, ​​அதில் TEA, DEA, சல்பேட்ஸ், PPD, resorcinol, ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற கலவைகள் இல்லாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

மருதாணியுடன் பல்வேறு நிறங்களை விரும்புபவர்கள் பிரேசிலிய மூலிகைகள், பீட்ரூட், மாதுளை போன்றவற்றை முயற்சி செய்யலாம். இது நரை முடியை மறைப்பது மட்டுமின்றி முடி மற்றும் உச்சந்தலைக்கு நல்ல ஊட்டச்சத்தையும் அளிக்கிறது.

இவற்றிடம் இருந்து விலகி இருங்க:

  • அம்மோனியா மற்றும் தொடர்புடைய பொருட்களை தவிர்க்கவும். ஏனெனில் இவை தற்காலிகமான பலன்களை அளித்தாலும், நீண்ட காலத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • அம்மோனியாவில் எத்தனோலமைன், டயத்தனோலமைன் மற்றும் ட்ரைத்தனோலமைன் ஆகிய உப தயாரிப்புகள் உள்ளன. இவை ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும்.
  • புற்றுநோயை உண்டாக்கும் பாராபென்கள் மற்றும் சல்பேட்டுகள் இல்லாத பொருட்களைத் தேர்வு செய்யவும்.
  • சிலர் குளித்த உடனேயே டவலால் முடியை உலர்த்தி விடுவார்கள். இது நல்லதல்ல. இது முடியை கடினமாக்குகிறது. ஒரு டவலால் முடியை கடினமாக தேய்ப்பது முடி உதிர்வு அபாயத்தை அதிகரிக்கிறது.
  • தலையில் உள்ள அதிகப்படியான தண்ணீரை மென்மையான துண்டுடன் அகற்றலாம். இல்லையெனில் காற்றில் உலர விடவும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் நிற முடியைப் பாதுகாக்கலாம்.

Image Source:Freepik

Read Next

Epsom Salt: முடி உதிர்வை தடுக்கும் எப்சம் உப்பு… எப்படி பயன்படுத்துவது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்