$
Hair Straightening Vs Hair Smoothening: இன்றைய ஃபேஷன் உலகில், பெண்கள் அழகாக இருக்க நிறைய முயற்சிகள் செய்கிறார்கள். இந்த நோக்கத்திற்காக பல்வேறு வகையான அழகுசாதன பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. சருமத்தின் அழகு மட்டுமின்றி, அவர்கள் அழகு நிலையத்திற்குச் சென்று, தலைமுடியை அழகாக்குவதற்கு, ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றும் ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.
இருந்தாலும், இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் பலருக்குத் தெரியாது. எந்த வகையான முடி உள்ளவர்களுக்கு எந்த சிகிச்சை பொருத்தமானது என்பதை அறிய பதிவை மேலும் படிக்கவும்.
ஹேர் ஸ்ட்ரெய்டனிங்
ஹேர் ஸ்ட்ரெய்டனிங் என்பது முதன்முறையாக ஆப்பிரிக்காவில் செய்யப்பட்டது. முடி உதிர்வால் அவதிப்படுபவர்கள், முடி உதிர்தலைக் குறைக்க ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்து கொள்கின்றனர். பொதுவாக இதில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று தற்காலிக ஹேர் ஸ்ட்ரெய்டனிங் மற்றொன்று நிறந்தர ஹேர் ஸ்ட்ரெய்டனிங்.

தற்காலிக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், பிறகு முடி மீண்டும் சிக்கலாகிவிடும். நீங்கள் அதே நிரந்தர ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்தால், முடி 3-6 மாதங்களுக்கு நேராக இருக்கும். ஆனால்.. இந்த சிகிச்சையில் சில வகையான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஹேர் ஸ்மூத்திங்
ஹேர் ஸ்மூத்திங் சிகிச்சையானது பிரேசிலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஹேர் ஸ்மூத்திங் ட்ரீட்மென்ட் முடியை தற்காலிகமாக அழகாக்குகிறது. இந்த சிகிச்சையில், உங்கள் தலைமுடி முதலில் ஃபார்மால்டிஹைட் கரைசலில் ஊறவைக்கப்பட்டு பின்னர் உலர்த்தப்படுகிறது. அதன் பிறகு இயந்திரங்களின் உதவியுடன் நேராக்கப்படுகிறது.
எனினும், இங்கு ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். அதாவது ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்கில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்களை விட இந்த ஹேர் ஸ்மூட்டிங் ட்ரீட்மென்ட்டில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்கள் குறைவான பக்கவிளைவுகளையே ஏற்படுத்துகின்றன.
இதையும் படிங்க: Hair Growth Secret: முடி நீளமாக வளர வல்லுநர்கள் கூறும் சீக்ரெட் டிப்ஸ் இதோ!
யாருக்கு எது சிறந்த விருப்பம்?
* அலை அலையான முடி உள்ளவர்கள் முடியை நேராக்க வேண்டும்.
* உங்கள் தலைமுடியின் நிலையைப் பொறுத்து ஒவ்வொரு 8-12 வாரங்களுக்கும் இதைச் செய்வது நல்லது.
* நேராக்குவதற்கு முன் முடிக்கு வெப்பப் பாதுகாப்பு தெளிப்பைப் பயன்படுத்துங்கள்.
* கூந்தல் சிக்கலாக இருப்பவர்களுக்கு கூந்தல் மென்மையாக்குவது சிறந்தது.

ஹேர் ஸ்ட்ரெய்டனிங் பக்க விளைவுகள்
* ஹேர் ஸ்ட்ரெய்டனிங் உச்சந்தலையில் பயன்படுத்தக்கூடாது.
* ஏனெனில் தோல் எரியும் அபாயம் உள்ளது.
* ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் சரியாக செய்யாவிட்டால், பொடுகு, முடி உதிர்தல், நரை, முடி பிளவு முனைகள் ஏற்படும்.
ஹேர் ஸ்மூத்திங் பக்க விளைவுகள்
ஹேர் ஸ்மூத்திங் செய்தால் முடி உதிர்தல், உச்சந்தலையில் எரிச்சல், சிலருக்கு ரசாயனங்களால் ஒவ்வாமை ஏற்படலாம்.
Image Source: Freepik