$
Home Remedies For Neck Pain: அதிகளவிலான போன் பயன்பாடு மற்றும் மடிக்கணினி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் கழுத்து வலி என்பது இன்று அனைவரும் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்றாகும். ஆனால் இது ஒரே இரவில் தொடங்குவதில்லை. இந்த அன்றாட நடவடிக்கைகள் கழுத்து வலியைப் படிப்படியாக அதிகரிக்கலாம். குறிப்பாக, தூக்கமின்மை, அறியாமை, மோசமான தோரணை போன்றவை மூட்டு வலியை அதிகரிக்கலாம். இந்த சாத்தியமான உடல்நலப் பிரச்சனைகளைத் தடுப்பதன் மூலம் கழுத்து வலியிலிருந்து விடுபடலாம்.
கழுத்து வலியைக் குறைப்பது எப்படி
கழுத்து வலியிலிருந்து குணமாக உதவும் சில வீட்டுக் குறிப்புகளைக் காணலாம்.
நிலைகளை மாற்றிக் கொண்டே இருப்பது
கழுத்தில் ஏற்படும் வலியைத் தடுக்க மற்றும் நிர்ணயிக்க தோரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதாவது அதிக நேர ஒரே நிலையில் இருப்பது கழுத்து வலியைத் தூண்டலாம். இதில் தோரணை மோசமாகி விட்டால், கழுத்து வலி ஏற்படலாம். எனவே நல்ல தோரணையை பயிற்சி செய்வது முக்கியமான ஒன்றாகும். மேலும் எப்போதும் உட்காரும் போதும், நடக்கும் போதும் முதுகெலும்பை நேராக வைத்து நடக்க வேண்டும். அதிக நேரம் கீழே பார்ப்பது, போனைப் பயன்படுத்துவது பிரச்சனையை ஏற்படுத்தலாம். எனவே, கழுத்தை நிமிர்ந்த நிலையில் வைத்திருக்க, எழுந்து அடிக்கடி நடக்க வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: PMS Home Remedies : மாதவிடாய் வழியில் இருந்து நிவாரணம் பெற வீட்டு வைத்தியம்!
நன்கு உறங்குதல்
தூங்காமல் இருக்கும் போது கழுத்து வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். போதிய தூக்கமின்மையால், சோம்பல், பகல்நேர தூக்கம், எரிச்சல், மனநிலை மாற்றங்கள், உடல் வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இதனுடன், கழுத்து வலியை அனுபவிக்கிறீர்கள் எனில் போதுமான ஓய்வு மற்றும் நல்ல தூக்கத்தைப் பெறுவதன் மூலம் குறைக்கலாம்.

கனமான பொருள்களைத் தூக்கக் கூடாது
கழுத்து அல்லது முதுகுவலியால் பாதிக்கப்பட்டிருப்பின், அதிக எடை மிகுந்த பொருள்கள் தூக்குவதைத் தவிர்க்கவும். ஏனெனில் இது மேலும் வலியை ஏற்படுத்துவதாக அமைந்து, சிக்கல்களை மோசமாக்கும். எனவே வலியை அனுபவிக்கும் போது கூடுதல் அழுத்தத்தைத் தவிர்ப்பது நல்லது.
பணிச் சூழலை சரி செய்வது
அதிக நேரம் உட்கார்ந்து பணி செய்வது மற்றும் சில பணிச் சூழல்கள் கழுத்து வலியை அதிகரிக்கும். இதில் கழுத்தை ஆரோக்கியமற்ற நிலையில் வைப்பதைத் தவிர்க்க, சில மாற்றங்களைச் செய்வது அவசியம்.
- லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பயன்படுத்துபவர்கள், அதன் ஸ்கிரீன் உங்கள் கண் மட்டத்திற்கு நேராக வைக்கவும். இது கழுத்தை நேராக வைத்திருக்க உதவும்.
- வயர்டு ஹெட்ஃபோன்கள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. தலையை அடிக்கடி கீழே சாய்வதைத் தடுக்க ஹேண்ட்ஸ் ஃப்ரீ அல்லது ப்ளூடூத் இயர்பிளக்குகளைப் பயன்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Honey for kids cough : குழந்தையின் இருமல் ஒரே இரவில் குணமாக தேனை இப்படி கொடுங்க!
கூடுதல் தலையணைகள் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது
கழுத்து வலிக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று கூடுதல் தலையணையைப் பயன்படுத்துவதாகும். இவ்வாறு அதிக தலையணைகளின் மீது கழுத்தை வைத்துப் படுத்திருப்பது, மிக ஆபத்தான நடைமுறையாகும். ஏனெனில் இது கழுத்து வலி மட்டுமல்ல, நீண்ட காலத்திற்கு முதுகெலும்பு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். இதனால் கழுத்து கடினமாகி வலியை ஏற்படுத்தலாம்.

பொதுவாக கழுத்து வலி என்பது ஒரே நாளில் ஏற்படுவது அல்ல. இது தொடர்ந்து நாளுக்கு நாள் அதிகரித்தால், மேலே கூறப்பட்ட குறிப்புகளைப் பின்பற்றலாம். தசைக்கூட்டு பிரச்சனைகள் உட்பட பிற தொடர்புடைய ஆபத்துகளைத் தடுக்க, கழுத்து வலி நிர்வகிக்கப்பட வேண்டும். தினமும் தூங்கும் முன், கழுத்தை மசாஜ் செய்து தசை பதற்றத்தை நீக்கி நரம்புகளை அமைதிப்படுத்துவதன் மூலம் வலியைக் குறைத்து வலியற்ற நிலையைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Sore Throat Remedies : மழைக்காலத்தில் ஏற்படும் தொண்டை வலியை நீக்க வீட்டு வைத்தியம்!
Image Source: Freepik