Doctor Verified

நீங்கள் புறக்கணிக்கும் குடல் சேதத்தின் அறிகுறிகளும், அதை சரி செய்யும் முறைகளும்! டாக்டர் பால் பரிந்துரை

மோசமான குடல் ஆரோக்கியத்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் தோன்றலாம். இது பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது. இதில் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது ஏற்படும் அறிகுறிகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நீங்கள் புறக்கணிக்கும் குடல் சேதத்தின் அறிகுறிகளும், அதை சரி செய்யும் முறைகளும்! டாக்டர் பால் பரிந்துரை


இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் குடல் சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகிறது. குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. குடல் ஆரோக்கியத்தின் மூலம் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது ஆற்றல், பசி மற்றும் மனநிலையை பாதிப்பதன் மூலம் நீரிழிவு, ஆட்டோ இம்யூன் கோளாறுகள் மற்றும் ADHD போன்ற நோய்களுக்கு வழிவகுக்கலாம்.

எனவே குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கு அதில் ஏற்படும் பிரச்சனைகளைக் குணப்படுத்த வேண்டும். அவ்வாறு, குடல் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய, குடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சில அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இதில் குடல் சேதமடைவதற்கான அறிகுறிகள் குறித்து கலிபோர்னியாவின் தடுப்பு இரைப்பை குடல் இயக்குனர், டாக்டர் பால் மாணிக்கம் அவர்கள் தனது யூடியூப் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, குடல் பாதிப்பு அறிகுறிகள் தாமதமாகும் வரை பெரும்பாலான மக்களுக்கு அவர்களின் குடல் சேதமடைந்துள்ளது என்பது தெரியாது.

இந்த பதிவும் உதவலாம்: சாப்பிட்ட உடனே மலம் கழிக்கிறீர்களா.? அது சாதாரணமல்ல.! காலை காபி பழக்கத்தை கைவிடுங்கள்..

குடல் பாக்டீரியாக்களின் வகைகள்

குடல் பாக்டீரியாக்களைப் பொறுத்த வரை, இரண்டு வகைகள் உள்ளன. அவை நல்ல மற்றும் கெட்ட பாக்டீரியாக்கள் ஆகும். நல்ல பாக்டீரியாக்கள் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இவை வைட்டமின்களை உற்பத்தி செய்கின்றன. மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருக்கவும் உதவுகின்றன. மேலும் கெட்ட பாக்டீரியாக்கள் வீக்கத்தை ஏற்படுத்தகூடும். மேலும், செரிமானத்தை பலவீனப்படுத்தலாம். மேலும் இது மூளையை கூட கையாளும் கெட்ட பாக்டீரியாக்கள் ஆகும்.

கெட்ட குடல் பாக்டீரியாக்கள் உண்மையில் பசியைக் கையாளக்கூடும். மேலும் இது மூளையை அதிக சர்க்கரை மற்றும் குப்பை உணவை சாப்பிடத் தூண்டுகிறது. இதனால், கெட்ட பாக்டீரியாக்களை மேலும் அதிகரித்து மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை அதிகரிக்கலாம். குடல் மற்றும் மூளை குடல்-மூளை அச்சு என்று அழைக்கப்படும் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இணைப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதன் அறிகுறிகள்

எப்போதாவது வீக்கம், குறைந்த ஆற்றல், நிலையான பசி அல்லது மூளை மூடுபனியால் போராடியிருந்தால், உங்கள் குடல் சிக்கலில் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர் கூறுகிறார். குடல் டிரில்லியன் கணக்கான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்களின் தாயகமாகும். இது குடல் நுண்ணுயிரி என்றழைக்கப்படுகிறது.

குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது எண்ணங்கள், ஏக்கங்கள் மற்றும் உணர்ச்சிகளை பாதிக்கலாம். உண்மையில், விஞ்ஞானிகள் குடல் தொடர்ந்து மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. குடல் ஆரோக்கியம் வயிற்றை பாதிப்பதுடன், மனநிலையை பாதிக்கலாம்.

மேலும், மனநிலையை ஒழுங்குபடுத்தும் ஒரு நரம்பியக்கடத்தியான செரோடோனின் 90% அளவில் குடலில் உற்பத்தி செய்யப்படுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் டோபமைன் அளவை பாதிக்கக்கூடும். இது உந்துதல் மற்றும் கவனத்தைக் கட்டுப்படுத்துகிறது. 2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், குடல் ஆரோக்கியம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்துடன் நேரடியாக தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, குடல் சமநிலையற்றதாக இருந்தால், பாதிக்கப்படுவது வயிறு மட்டுமல்ல, மனமும் பாதிக்கப்படலாம். எனவே, ஊக்கமில்லாமல் மூடுபனியாக அல்லது சோர்வாக உணர்ந்தால், அது தலையில் மட்டுமல்ல. குடல் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இது தவிர, கெட்ட குடல் பாக்டீரியா நாள்பட்ட நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

உடல் பருமன் - சில பாக்டீரியாக்கள் உடலை அதிக கொழுப்பைச் சேமிக்க செய்கிறது

நீரிழிவு நோய் - சேதமடைந்த குடல் இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துகிறது

இதய நோய் - கெட்ட குடல் பாக்டீரியாக்கள் உடலில் வீக்கம் மற்றும் கொழுப்பை அதிகரிக்கிறது.

நினைவாற்றல் இழப்பு - குடல் பாக்டீரியாவிற்கும், நினைவாற்றல் இழப்புக்கும் இடையே நேரடி தொடர்பு உண்டாகலாம். குடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் போது, நினைவாற்றல் இழப்பு பிரச்சனை ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அதிகப்படியான மன அழுத்தத்தைத் தவிர்க்க வீட்டில் இருக்கும் இந்த ஸ்நாக்ஸ் சாப்பிடுங்க..

தன்னுடல் தாக்க நோய்கள் - ஒரு ஆய்வில், குடல் ஆரோக்கியம் குறைவாக உள்ளவர்களுக்கு மூட்டுவலி மற்றும் மல்டிபிள் ஸ்களீரோசிஸ் போன்ற தன்னுடல் தாக்க நோய்கள் உருவாகும் ஆபத்து அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

லீக்கி குட் சிண்ட்ரோம் - குடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, அது நச்சுகள், வைரஸ்கள் மற்றும் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுகிறது. ஆனால் அது சேதமடைந்தால், நச்சுகள் உங்கள் இரத்த ஓட்டத்தில் கசிந்து, வீக்கம் மற்றும் நோயைத் தூண்டுகிறது. இது லீக்கி குட் சிண்ட்ரோம் எனப்படுகிறது.

குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கான குறிப்புகள்

  • நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிப்பது - அதிக காய்கறிகள், பழங்கள், நட்ஸ் மற்றும் முழு தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். எனவே நல்ல பாக்டீரியாக்கள் உயிர்வாழ ஒரு நாளைக்கு குறைந்தது 25 கிராம் நார்ச்சத்து தேவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
  • தயிர், கிம்ச்சி, சார்க்ராட், அரிசி கஞ்சி போன்ற புளித்த உணவுகளை சாப்பிடுவதால் குடலில் ஆரோக்கியமான பாக்டீரியாக்கள் உருவாகின்றன.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் சர்க்கரையைத் தவிர்க்க வேண்டும். இதன் மூலம் கெட்ட பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு, நல்ல பாக்டீரியாக்களை செழிக்க அனுமதிக்கிறது.
  • நான்காவதாக, நீரேற்றமாக இருக்க வேண்டும். நீர் அருந்துவது குடல் புறணியை வலுவாக வைத்திருக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது.
  • மன அழுத்தத்தை நிர்வகிக்க தியானம். ஆழ்ந்த சுவாசம் மற்றும் உடற்பயிற்சி செய்யலாம். இவை குடல் பாக்டீரியாவை சமநிலைப்படுத்த உதவுகிறது.
  • பூண்டு, வெங்காயம், வாழைப்பழங்கள் மற்றும் அஸ்பாரகஸ் போன்ற ப்ரீபயாடிக் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை அனைத்தும் குடல் பாக்டீரியாவை மேம்படுத்துகின்றன.
  • இடைவிடாத உண்ணாவிரதத்தை முயற்சிக்கலாம். குறிப்பாக இரவில் தாமதமாக சாப்பிடாமல் நேரக் கட்டுப்பாடுடன் உணவைக் கையாள வேண்டும்.

இவை அனைத்தையும் பின்பற்றுவதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பாக வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: காலையிலே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாத 3 உணவுகள் – மருத்துவர் எச்சரிக்கை.!

Image Source: Freepik

Read Next

YouTube சொல்வதை நம்பி Vinegar குடித்தால்.. Reflux மோசமடையும்.. மருத்துவர் எச்சரிக்கை.!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 29, 2025 14:18 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

குறிச்சொற்கள்