சர்க்கரை அளவு திடீர்னு உயர்ந்து இருக்கா? என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க

  • SHARE
  • FOLLOW
சர்க்கரை அளவு திடீர்னு உயர்ந்து இருக்கா? என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க

தற்போது பதப்படுத்தப்பட்ட உணவுகளிலும் கலக்கப்படும் உணவு சேர்க்கை மூலக்கூறுகள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதாவது ட்ரைபொட்டாசியம் பாஸ்பேட், கால்சியம் உப்பு, மோனோ மற்றும் டிக்ளிசரைடுகள், கொழுப்பு வகைகள், சோடியம் சிட்ரேட், கடற்பாசி, பல ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸ், குவார் கம், சாந்தன் கம், கம் அரபு போன்றவை சேர்க்கப்பட்டதாகும். இந்த பொருள்கள் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் குடல் பாக்டீரியா செயல்பாட்டில் தலையிடுகிறது. இந்த பொருள்கள் நிறைந்த உணவை உட்கொள்ளும் போது நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணிகள் 15% வரை அதிகரிப்பதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Diabetics Drinks: கோடையில் சர்க்கரை நோயாளிகள் குடிக்க வேண்டிய முக்கிய ட்ரிங்க்ஸ்!

எமல்சிஃபையர் என்றால் என்ன?

எமல்சிஃபையர்ஸ் என்பது உணவு சேர்க்கை மூலக்கூறுகள் எனப்படுகிறது. இதற்கான சில பொதுவான எடுத்துக்காட்டுகள் லெசித்தின் (E322), மோனோ- மற்றும் டைக்ளிசரைடுகள் (E471), கராஜீனன் (E407), கார்பாக்சிமெதில்செல்லுலோஸ் (E466) மற்றும் பாலிசார்பேட்ஸ் (E433-436) போன்றவை ஆகும். இவை ஐஸ்கிரீம்கள், சாக்லேட்டுகள், சுடப்பட்ட பொருட்கள் மற்றும் பல்வேறு முன் பேக்கேஜ் செய்யப்பட்ட வசதியான உணவுகள் போன்றவற்றில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் சில இறைச்சிகள், பால் பொருள்கள், சாஸ் போன்றவற்றிலும் எமல்சிஃபையர்ஸ் காணப்படுகிறது.

எமல்சிஃபையர் வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை எவ்வாறு அதிகரிக்கிறது?

பொதுவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சுவை மற்றும் அமைப்பை மேம்படுத்த எமல்சிஃபையர் அதாவது உணவு சேர்க்கை மூலக்கூறுகள் பயன்படுத்தப்படுகிறது. இந்த உணவு சேர்க்கை மூலக்கூறுகள் குடலில் உள்ள பாதுகாப்பு சளி அடுக்கை சேதப்படுத்துகிறது. மேலும் பாக்டீரியா மற்றும் உணவுத் துகள்கள் குடல் சுவருடன் மிகவும் நெருக்கமாக தொடர்பு கொள்ள அனுமதிக்கிறது. இவை குறைந்த தர வீக்கத்தைத் தூண்டுகிறது. மேலும் குடல் பாக்டீரியாவின் கலவையை மாற்றுகிறது. இந்த குடல் நுண்ணுயிரிகளின் ஏற்றத்தாழ்வு இன்சுலின் எதிர்ப்பு, எடை அதிகரிப்பு மற்றும் வகை 2 நீரிழிவு நோய் அபாயத்தை ஏற்படுத்தலாம்.

எமல்சிஃபையர்ஸை எவ்வாறு தவிர்ப்பது?

பொதுவாக நாம் வாங்கும் பொருள்களின் லேபிள்களைக் கவனமாகப் படிக்க வேண்டும். அதில் கராஜீனன், பாலிசார்பேட்ஸ் மற்றும் கார்பாக்சிமெதில்செல்லுலோஸ் போன்ற எமல்சிஃபையர் இல்லாத தயாரிப்புகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பெரும்பாலும் உணவருந்தும் போது சாஸ்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாத எளிமையான உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக, பதப்படுத்தப்பட்ட மற்றும் தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes Risk: எந்த வயதினருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்?

மாற்று வழிகள்?

புதிதாக சமைத்தல்

புதிய உணவைத் தயாரிப்பது அல்லது முழு பொருள்களைப் பயன்படுத்தும் போது சரியாக தேர்வு செய்ய வேண்டும்.

பதப்படுத்த பொருள்களைத் தவிர்பது

வீட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். குறைந்த எமல்சிஃபையர் அல்லது எமல்சிஃபையர் இல்லாத பேக்கரிகளை எடுத்துக் கொள்ளலாம்.

மாற்று பால் பொருள்களைத் தேர்ந்தெடுப்பது

இனிக்காத மற்றும் வெற்று பால் பொருள்களைத் தேர்வு செய்ய வேண்டும் அல்லது எமல்சிஃபையர்களைப் பயன்படுத்தாத பிராண்டுகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

மாற்று மசாலாக்கள்

வினிகர், எண்ணெய் மற்றும் மசாலாப் பொருட்கள் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி வீட்டிலேயே எளிதாக தயார் செய்யப்பட்ட உணவுகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த வகை மாற்று வழிகளைத் தேர்வு செய்வதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் இன்னும் சில உடல் அபாயங்களைத் தவிர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Vegetables For Diabetics: சர்க்கரை நோயாளிகள் கோடை காலத்தில் கட்டாயம் சாப்பிட வேண்டிய காய்கறிகள்!

Image Source: Freepik

Read Next

Diabetes Risk: எந்த வயதினருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பும் அதிகம்?

Disclaimer