$
Tips To Take Care Of Mental Health: உடல் ஆரோக்கியத்தைப் போல, மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இன்றைய நவீன காலகட்டத்தில் பலரும் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர். மன ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் மன அழுத்தத்தை எப்படி உணர்வது, சிந்திப்பது, நடந்து கொள்வது, மற்றும் எவ்வாறு சமாளிப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும்.
மனநலப் பிரச்சனைகளுக்கு திறம்பட சிகிச்சையளிக்க முடியும். அதே சமயம், பலர் முழுமையாக குணமடையலாம். எனினும் மனநோய்க்கான களங்கம் மற்றும் சரியான கவனிப்புக்கான அணுகல் போன்றவை மனநலப் பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு குறிப்பிடத்தக்க தடையாக அமையலாம். இதில் மனநல விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான வழிகளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கால்களுக்கு இடையே தலையணை வைத்து தூங்குவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?
மனநல விழிப்புணர்வு (Mental Health Awareness)
ஆண்டுதோறும், மே மாதம் மனநல விழிப்புணர்வுக்கான வாரமாகக் கருதப்படுகிறது. அதே போல, மனநல விழிப்புணர்வு வாரம் ஆனது மே 13 முதல் 19 ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் மனநலம் பற்றி மக்கள் சிந்திக்க வேண்டிய நேரமாகும். மனநல விழிப்புணர்வு வாரத்திற்கான இந்த வருடத்தின் தீம், “இயக்கம்: நமது மன ஆரோக்கியத்திற்காக மேலும் நகர்வது” என்பதாகும்.

மன ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்வது எப்படி?
தியானம் செய்வது
நிபுணர்களின் கூற்றுப்படி, தினமும் 20 நிமிடம் தியானம் மேற்கொள்வது மன ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. தனிநபர்கள் சுய விழிப்புணர்வை வளர்த்துக் கொள்ளவும், நேர்மறையான மனநிலையை வளர்க்கவும் தியானம் உதவுகிறது. இது மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, மனநல சவால்களை சமாளிக்க தியானம் சிறந்த தேர்வாகும். தியானம் செய்வது மன ஆரோக்கியத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வின் முக்கிய அம்சமாகும்.
முடியும் என்ற நம்பிக்கை
மன ஆரோக்கியத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்தி, கட்டுப்படுத்த வேண்டும். மனதிற்கு நம்பிக்கையை விளைப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. மனதை ஒருநிலைப்படுத்தி முடியும் என்ற நம்பிக்கையை மனதில் வைத்துக் கொள்வது மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Prolonged Sitting Effects: நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பவர்களா நீங்க? இந்த பிரச்சனையை சந்திக்க தயாராகிக்கோங்க
உடற்பயிற்சி செய்வது
மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க உடற்பயிற்சி செய்வது அவசியமானதாகும். உடற்பயிற்சி செய்யும் போது உடலில் நல்ல என்டோர்பின்கள் வெளியிடப்படுகிறது. அதாவது உடல் செயல்பாடு செய்வது டோபமைன், செரோடோனின் மற்றும் நோர்பைன்ப்ரைன் போன்ற எண்டோர்பின்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது. இந்த இரசாயனங்கள் மன அழுத்த மேலாண்மை, மனநிலை கட்டுப்பாடு, மற்றும் ஒட்டுமொத்த மனநலம் போன்றவற்றிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

மொபைல் பயன்பாட்டைத் தவிர்ப்பது
மனநல பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் அதிக நேரம் மொபைல் பயன்படுத்துபர்களும் இருப்பர். மன ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் சுய பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும். குறிப்பாக இரவு தூங்கும் போதும், காலையில் எழும் போதும் மொபைல் பயன்படுத்துவது மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே மொபைல் பயன்பாட்டைத் தவிர்க்க வேண்டும்.
இந்த வகை நடைமுறைகளை மேற்கொள்வது மன ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mental Health During Summer: கோடை வெயிலில் மன அழுத்தமா? எப்படி தப்பிப்பது?
Image Source: Freepik
Read Next
Walking After Dinner: நைட் சாப்பிட்ட பிறகு வாக்கிங் போனா இந்த நன்மைகள் எல்லாம் கிடைக்குமாம்!
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version