World Mental Health Day: உங்கள் உடல் ஆரோக்கியம் நேரடியாக மன ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. நீங்கள் வருத்தமாகவும், கவலையாகவும் இருக்கும்போது உடல் ரீதியாகவும் பலவீனமாக இருப்பதை உணர்ந்திருக்கலாம். அதே சமயம், உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பிரச்சனைகள் இருந்தால், எதிலும் கவனம் செலுத்துவது கடினமாக இருக்கும்.
அதிகப்படியான சிந்தனை அல்லது மன அழுத்தம் காரணமாக ஹார்மோன்களும் சமநிலையற்றதாகி விடுகிறது. இதன் காரணமாக, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது மற்றும் இதய துடிப்பும் அதிகரிக்கவோ குறையவோ தொடங்குகிறது. எனவே, உடல் ஆரோக்கியத்தைப் போலவே, மனநலத்திலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உங்கள் மனநலம் நன்றாக இருந்தால், ஒவ்வொரு நொடியும் சுதந்திரமாக வாழ முடியும். உங்கள் ஒவ்வொரு உணர்ச்சியையும் நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும். மன ஆரோக்கியத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து பார்க்கலாம்.
மன ஆரோக்கியத்தை மேம்படுத்த இதை செய்யவும்

சுவாச நுட்பங்களை பின்பற்றவும்
சுவாச நுட்பங்கள் உங்களை மனரீதியாக நிம்மதியாக வைத்திருக்க உதவும். இதனால் மூளையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் நிம்மதியாக உணருவீர்கள். எனவே, ஆழ்ந்த மூச்சுடன் உங்கள் தினத்தைத் தொடங்கலாம். இது உங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது.
உங்கள் நோக்கத்தை முடிவு செய்யுங்கள்
உங்கள் நாளைத் தொடங்குவதற்கு முன் உங்கள் நோக்கத்தைத் தீர்மானியுங்கள். அதாவது இன்று நீங்கள் எதை அடைய விரும்புகிறீர்கள், என்ன செய்யப்போகிறீர்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்கள் எவை? இன்றைய நாளை எப்படிக் கடக்க விரும்புகிறீர்கள் என்பதை தீர்மானியுங்கள்.
இதன் மூலம் உங்களது வேலை மற்றும் பணிகளை நன்கு திட்டமிட முடியும். கூடுதலாக, நீங்கள் மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றிலிருந்து விலகி இருக்கலாம்.
உங்கள் உணர்ச்சிகளில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்
பகலில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் உங்கள் உணர்ச்சிகளுக்கு கவனம் செலுத்துங்கள். நீங்கள் எப்படி உணர்கிறீர்கள் அல்லது அழுத்தமாக உணர்கிறீர்களா என்பதை கண்டறியுங்கள்.
சில காரணங்களால் நீங்கள் மன அழுத்தத்திற்கு ஆளானால், அதற்கான காரணத்தைக் கண்டறிய முயற்சிக்கவும். மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலை குறைக்க இது சிறந்த விஷயமாகும்.
தினசரி எழுதவும்
இரவில் தூங்குவதற்கு முன், உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் விஷயங்களுக்கு நன்றித் தெரிவிக்கும் விதமாக எழுதவும். அன்று முழுவதும் என்ன நல்லது நடந்ததோ. பெரிய விஷயங்களை மட்டும் எழுத வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் முகத்தில் புன்னகையை வரவழைத்த ஒவ்வொரு சிறிய மகிழ்ச்சியையும் எழுதுங்கள். இது உங்களுக்கு மன நிம்மதியை அளிக்கும்.
பழக்கம் முக்கியம்
நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், உங்களைச் சுற்றி எப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பது முக்கியம். இது உங்கள் மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
உங்களைச் சுற்றி அடிக்கடி எதிர்மறையான விஷயங்களை, சிந்தனைகளையும் பகிரும் நபர்கள் இருந்தால், அவர்கள் உங்கள் மீதும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இதனால் எதிர்மறையான விஷயங்களில் நீங்கள் எளிதில் ஈர்க்கப்படுவீர்கள். எனவே இந்த விஷயத்தில் கவனம் மிக முக்கியம்.
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்கவும்
இன்றைய காலக்கட்டத்தில், வேலை அழுத்தம் அதிகரித்துள்ளதால், மக்கள் உடற்பயிற்சி செய்ய நேரத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதேசமயம் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது மிகவும் முக்கியம். உடற்பயிற்சி செய்வது மனதுக்கும் மூளைக்கும் நன்றாக இருக்கும்.
இது உங்களில் நேர்மறையையும் அதிகரிக்கிறது. சில காரணங்களால் உடற்பயிற்சியை உங்கள் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற முடியவில்லை என்றால், ரன்னிங், வாக்கிங் போன்றவற்றை செய்வது நல்லது.
பொழுதுபோக்குகளுக்கு நேரம் ஒதுக்குங்கள்
உங்கள் பொழுதுபோக்குகளுக்கு நேரத்தை ஒதுக்குவது மிகவும் முக்கியம். உங்களின் பொழுதுபோக்கிற்காக நேரம் ஒதுக்கும்போது, உங்களுக்காக ஏதாவது சிறப்பாகச் செய்ததைப் போல் உணர்கிறீர்கள். தனக்கென ஒன்றைச் செய்வதில் உள்ள மகிழ்ச்சி வேறு எதிலும் இருக்காது.
இது உங்களுக்குள் நிறைய ஆற்றலை வழங்குகிறது. வாழ்க்கையைப் பற்றிய உங்கள் கண்ணோட்டமும் சிறப்பாக இருக்கும்.
Image Source: FreePik