Healthy Fiber Foods List: ஆரோக்கியமான உணவு வகைகளில் ஒன்றாகவே நார்ச்சத்து மிகுந்த உணவுகளும் அமைகிறது. உடல் எடையைக் கட்டுப்படுத்துவதில் நார்ச்சத்துகள் மிகுந்த பங்காற்றுகின்றன. நார்ச்சத்து மிகுந்த உணவு வகைகளை எடுத்துக் கொள்வது உடலில் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிறு மற்றும் குடல் பகுதியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இவை இரத்த குளுக்கோஸ் அளவை சரியான அளவில் வைத்திருக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
ஏன் நார்ச்சத்துகள்
நார்ச்சத்துக்கள் இரவும் வகைகளில் கிடைக்கிறது. அவை கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் ஆகும். இவற்றில் கரையாத நார்ச்சத்துகள் செரிமானத்தை எளிதாக்குகிறது. கரையக்கூடிய நார்ச்சத்துகள் வயிற்றில் ஜெல்லாக மாறி, குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளைச் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

நார்ச்சத்து மிகுந்த உணவுகள்
ஆப்பிள்
கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் அதிகம் மிகுந்த உணவுகளில் ஒன்றாக ஆப்பிள் உள்ளது. 100 கிராம் ஆப்பிளில் 2.5 கிராம் அளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: Platelet Count Increase Food: இரத்த பிளேட்லெட் எண்ணிக்கையை இயற்கையாக எப்படி அதிகரிப்பது?
வாழைப்பழம்
நார்ச்சத்து மிகுந்த பழங்களில் வாழைப்பழமும் ஒன்று. 100 கிராம் வாழைப்பழத்தில் 2.6 கிராம் அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் சத்துகள் உடலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
சியா விதைகள்
கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவாக சியா விதைகள் உள்ளது. ஒரு தேக்கரண்டி சியா விதைகளில் 4 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை தவிர, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்: குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
குயினோவா
குயினோவாவில் புரதம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. மேலும், இதில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றை வாரம் 2 நாள்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பருப்பு வகைகள்
பருப்பு வகைகள் நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். அதாவது புரதத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும், பீன்ஸ், பட்டாணிகளும் நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகளாகும்.
கிழங்கு வகைகள்
தோலுடன் கூடிய ஒரு சிறிய உருளைக்கிழங்கில், சுமார் 3 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
அவகேடோ
வெண்ணெய் பழம் என அழைக்கப்படும் அவகேடோ அதிக நார்ச்சத்து நிறைந்த பழமாகும். இதில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், மக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளது. தினமும் 3 அவகேடோ பழங்களைச் சாப்பிடுவதன் மூலம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்துகளை பெறலாம்.
ஓட்ஸ் வகைகள்
ஓட்ஸில் கரையக்கூடிய சக்தி வாய்ந்த நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் ஓட் பீட்டா-குளுக்கன் உள்ளது. இவை உடல் எடை குறைய பெரிதும் உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
ப்ரோக்கோலி
ப்ரோக்கோலி வைட்டமின் சி, கே, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்தவையாகும். இவை குடல் பாக்டீரியாவை ஆரோக்கியமாகவும், சமநிலையாகவும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin A Deficiency: இதனால் ஏற்படும் பார்வை குறைபாட்டை எப்படி தடுப்பது?
Image Source: Freepik