$
What are the benefits of eating chickpeas: கொண்டைக்கடலை என அழைக்கப்படும் சுண்டல் மிகவும் ஆரோக்கியமான உணவுகளில் ஒன்று. உடல் எடையை குறைக்க அல்லது டயட்டில் இருப்பவர்கள் காலை உணவாக சாலட் சாப்பிடுவது வழக்கம். ஆனால், பழம் அல்லது காய்கறி சாலடை விட கொண்டைக்கடலை சாலட் (chickpea salad) சாப்பிடுவது பல மடங்கு ஆரோக்கியமானது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், இதில் புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம், துத்தநாகம், இரும்பு, பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது.
இது தவிர, சுண்டலில் ஆரோக்கியமான கொழுப்பு, கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் உள்ளன. இந்நிலையில், காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் பூர்த்தி செய்யப்படும். காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளை குறித்து ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முதேர்ஜா கூறியது இங்கே-
இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
வயிறு நிறைவாக இருக்கும்

காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிட்டால், நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்கும். இதில் அதிக அளவு புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், இவை செரிமானத்தை மெதுவாக்குகிறது. இதனால், பசியெடுப்பது குறையும். எனவே, உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கும்

சர்க்கரை நோயாளிகளுக்கு சுண்டல் சாலட் சாப்பிடுவது மிகவும் நல்லது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், உங்கள் காலை உணவில் சுண்டல் சாலட்டை சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால், இதில் கிளைசெமிக் குறியீடு மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வைக்கப்படும். இதிலுள்ள நார்ச்சத்து மற்றும் புரதம் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
செரிமானம் மேம்படும்

ஆரோக்கியமான உணவுகளை காலை உணவாக உட்கொண்டால், செரிமான அமைப்பு எப்போதும் வலுவாக இருக்கும். சரியான செரிமானத்தை பராமரிக்க, நீங்கள் காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிடலாம். இதில் இருக்கும் நார்ச்சத்து செரிமானத்தை வலுப்படுத்த உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது. கூடுதலாக, கெட்ட பாக்டீரியாவை தடுக்க உதவுகிறது.
மூளை ஆரோக்கியம் மேம்படும்

மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த, காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிடலாம். சுண்டல் கோலினின் சிறந்த மூலமாகும், இது மூளையின் செயல்பாட்டுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. காலை உணவாக சுண்டல் சாலட் சாப்பிடுவது நரம்பியக்கடத்திகளை உருவாக்குகிறது. கொண்டைக்கடலையில் மெக்னீசியம் உள்ளது, இது நரம்பு செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு கனிமமாகும். இதில் உள்ள துத்தநாகம் மற்றும் செலினியம் மனச்சோர்வு மற்றும் பதட்டத்திலிருந்து உங்களை பாதுகாக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
இரும்புச்சத்து குறைபாடு நீங்கும்

இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள், காலை உணவாக சுண்டல் சாப்பிடலாம். ஏனென்றால், இதில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. அதே போல இரத்த சோகை பிரச்சினையையும் நீக்கும். தினமும் காலை உணவாக சுண்டல் சாலட்டை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் சோர்வு, பலவீனம் மற்றும் மன அழுத்தம் போன்ற இரத்த சோகை அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம் : தினையின் வகை மற்றும் ஆரோக்கிய நன்மைகளை ஆராய்வோம்?
சுண்டல் சாலட் செய்வது எப்படி?

- இதற்கு முதலில் சுண்டலை முதல் நாள் இரவே ஊற வைக்கவும்.
- இதையடுத்து, காலையில் அதை குக்கரில் போட்டு 3 விசில் வைத்து இறக்கவும்.
- இப்போது ஒரு பாத்திரத்தில் சுண்டலை மட்டும் தனியே எடுக்கவும்.
- அதில் கருப்பு உப்பு மற்றும் பச்சை மிளகாய் சேர்க்கவும்.
- பொன்னர், வெங்காயம், தக்காளி, சோளம் சேர்க்கவும்.
- கடைசியாக அந்த கலவையில் எலுமிச்சை சாற்றை பிழியவும்.
- இப்போது ஆரோக்கியமான சுண்டல் சாலட் தயார்.
Pic Courtesy: unsplash