Best vitamin k rich foods you should eat daily: அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நம் உடலுக்குத் தேவையான அத்திவாசிய ஊட்டச்சத்துக்களைப் பொறுத்த வரை ஏராளமானவை உள்ளன. அதில் ஒன்றாகவே, உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வைட்டமின் கே ஊட்டச்சத்துக்களும் அடங்கும். ஆம். உண்மையில், வைட்டமின் கே உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான நன்மைகளைத் தருகிறது.
இதில் நம் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய வைட்டமின் கே நிறைந்த உணவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்ற இங்குக் காண்போம். அதற்கு முன்பாக, வைட்டமின் கே ஊட்டச்சத்துக்கள் நம் உடலுக்கு ஏன் முக்கியம் என்பதற்கான காரணங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: உட்காரும் போது, எழும் போது முழங்கால் வெடிப்பு சத்தம் கேட்குதா? அப்ப இத நீங்க கட்டாயம் செய்யணும்
வைட்டமின் கே ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவம்
வைட்டமின் கே என்பது இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கால்சியம் அளவை ஒழுங்குபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்து ஆகும். இது வைட்டமின்களின் குழுவைக் குறிக்கிறது. வைட்டமின் கே ஊட்டச்சத்துக்கள் எலும்பு, அறிவாற்றல் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஆதரிப்பதற்கு உதவுகின்றன. அதாவது இரத்த உறைவு மற்றும் எலும்பு வளர்சிதை மாற்றத்தில் முக்கியமான புரதம் மற்றும் உறைதல் காரணியாக விளங்கும் புரோத்ராம்பினை உற்பத்தி செய்வதற்கு உடலுக்கு வைட்டமின் கே தேவைப்படுகிறது.
அதே சமயம், இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் மருத்துவர் அனுமதி பெறாமல் கூடுதல் வைட்டமின் கே உட்கொள்ளத் தொடங்கக்கூடாது. வைட்டமின் கே குறைபாடு அரிதானதாகும். ஆனால், கடுமையான சந்தர்ப்பங்களில், இது உறைதல் நேரத்தை அதிகரிக்கலாம். இதனால், இரத்தப்போக்கு மற்றும் அதிகப்படியான இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.
நிபுணரின் கருத்து
நிபுணரின் கூற்றுப்படி, “ஆரோக்கியமான இரத்த உறைவு, வலுவான எலும்புகள் மற்றும் இதய பாதுகாப்புக்கு வைட்டமின் கே அவசியம். இது எலும்புகளுடன் கால்சியம் ஊட்டச்சத்துக்களை பிணைக்க உதவுகிறது மற்றும் தமனிகளில் தீங்கு விளைவிக்கும் கால்சியம் படிவதைத் தடுக்கிறது” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
வைட்டமின் கே நிறைந்த முக்கிய உணவு ஆதாரங்கள்
கீரை
நிபுணரின் கூற்றுப்படி, “பச்சையாக ஒரு கப் கீரையில், 145 µg வைட்டமின் கே உள்ளது“. இது தவிர, கீரையில் இன்னும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
காலே
1 கப் பச்சையாக காலே உட்கொள்வதன் மூலம் 113 µg வைட்டமின் கே ஊட்டச்சத்துக்களைப் பெறலாம் என நிபுணர் பகிர்ந்துரைக்கிறார்.
ப்ரோக்கோலி
ஒரு கப் அளவிலான வேகவைத்த ப்ரோக்கோலியில் 220 µg வைட்டமின் கே உள்ளது. இவை உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: Vitamin K குறைவாக இருந்தால் ஆபத்து.! உணவு மூலம் இப்போதே சரி பண்ணுங்க!
காலார்ட் கீரைகள்
ஒரு கப் அளவு வேகவைத்த காலார்ட் கீரைகளில் 1060 µg வைட்டமின் கே இருப்பதாக நிபுணர் பகிர்ந்துள்ளார்.
சோயாபீன்ஸ் (வறுத்த, 1 கப்) → 86 µg
ஒரு கப் வறுத்த சோயாபீன்ஸ் ஆனது 86 µg வைட்டமின் கே ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருப்பதாக நிபுணர் கூறுகிறார்.
View this post on Instagram
இதனைத் தொடர்ந்து, வலுவான எலும்புகள், ஆரோக்கியமான தமனிகள் மற்றும் ஒட்டுமொத்த சிறந்த சுழற்சிக்கு இந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும் என்று பகிர்ந்துள்ளார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: 30 நாட்களில் எலும்பு இரும்பு போல் ஸ்ட்ராங்க் ஆகனுமா? - இந்த உணவுகள கட்டாயம் சாப்பிடுங்க...!
Image Source: Freepik