
உடல்நலத்திற்கு நல்லது என்று பலர் நினைத்து வாங்கும் சில உணவுப் பொருட்கள், உண்மையில் குடலுக்கும் (Gut) உடலுக்கும் கேடு விளைவிக்கக் கூடும் என்று குடல்நோய் நிபுணர் டாக்டர் பால் எச்சரித்துள்ளார்.
அவரின் சமீபத்திய பதிவில், சூப்பர்மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் சில பொருட்களைத் தவிர்க்க வேண்டும் என்றும், அவற்றுக்குப் பதிலாக ஆரோக்கியமான இயற்கை உணவுகளை தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
Video: https://youtube.com/shorts/crR-OaOg0NA?si=PKTepdRMdx2FMa2j
சுவையூட்டிய தயிர் (Flavored Yogurt)
பலரும் குடலுக்கு நல்லது என்று நினைத்து Flavored Yogurt வாங்குகின்றனர். ஆனால், இதில் அதிக அளவு சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகள் கலந்து இருக்கும். குடலுக்கு உண்மையான நன்மை வேண்டும் என்றால், சுத்தமான தயிர் அல்லது குறைந்த சர்க்கரை கொண்ட தயிரில் பழங்களை சேர்த்து சாப்பிடுவது சிறந்தது என டாக்டர் பால் கூறுகிறார்.
பேக் செய்யப்பட்ட பழச்சாறு (Packed Fruit Juices)
“100% Fruit Juice” என்று எழுதப்பட்டாலும், உண்மையில் இவை அதிகப்படியான சர்க்கரை கொண்ட நீராகவே இருக்கும். மேலும், பழத்தில் உள்ள நார்ச்சத்து (fiber) முழுவதுமாக நீக்கப்பட்டிருக்கும். எனவே பழச்சாறு குடிப்பதற்குப் பதிலாக, பழத்தை நேரடியாக சாப்பிடுவது குடலுக்கும், உடலுக்கும் சிறந்தது.
இந்த பதிவும் உதவலாம்: Gut Health + Liver Care: ஹார்வர்ட் டாக்டர் பகிரும் 10 இரவு உணவுகள்..
Probiotic Supplements (ப்ரோபயாட்டிக் மாத்திரைகள்)
சிலருக்கு மட்டுமே Probiotic Supplements வேலை செய்கின்றன. பெரும்பாலான ப்ரோபயாட்டிக்குகள், வயிற்றில் உள்ள அமிலத்தில் அழிந்துவிடுகின்றன. அதற்குப் பதிலாக, புளித்த உணவுகள் (idli, dosa, porridge) போன்றவற்றிலிருந்தே இயற்கையான ப்ரோபயாட்டிக்குகளைப் பெறலாம் என்று மருத்துவர் பரிந்துரைக்கிறார்.
டயட் பிஸ்கட் / சர்க்கரை இல்லா பிஸ்கட் (Diet / Sugar-free Biscuits)
“Diabetic Friendly” என்று விற்பனை செய்யப்படும் இவ்வகை பிஸ்கட்டுகளில், செயற்கை இனிப்பு மற்றும் குடலை பாதிக்கும் ரசாயனங்கள் நிறைந்திருக்கும். இவை இரத்தச் சக்கரத்தையும் (Blood Sugar) குடல் கிருமிகளையும் பாதிக்கும். எனவே இவற்றை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
சீரியல் (Cereals)
அருகில் கிடைக்கும் “Healthy Cereal” என்று விளம்பரம் செய்யப்படும் உணவுகளில் சர்க்கரை, எண்ணெய், மற்றும் குறைவான நார்ச்சத்து இருக்கும். இது இரத்தச் சக்கரத்தை திடீரென அதிகரிக்கச் செய்யும். அதற்குப் பதிலாக வீட்டில் செய்யப்படும் அவல் (Poha), உப்புமா (Upma) போன்ற உணவுகள் குடலுக்கும் உடலுக்கும் ஆரோக்கியமாக இருக்கும்.
இறுதியாக..
குடல்நலம் காக்க, அதிகமாக Processed Food வாங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே இயற்கையான உணவுகளை தயாரித்து உண்ணும் பழக்கம் வேண்டும் என்று டாக்டர் பால் வலியுறுத்துகிறார்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான ஆரோக்கிய விழிப்புணர்வு மற்றும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இது மருத்துவரின் ஆலோசனைக்கு மாற்றாக கருதப்படக்கூடாது. உங்களின் உடல்நிலை, மருந்துகள் அல்லது உணவு பழக்கத்தில் மாற்றம் செய்யும் முன், தகுதியான மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை அணுகுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version