Sat Sep 12, 2026 | 01:43 AM IST

Weight Gain Cause: TV & ஃபோன் பார்த்தபடி உணவு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமாம்!!

Does Too Much Screen Time Affect Your Weight: பெரும்பாலான மக்கள் சாப்பிடும் போது மொபைல் போன், லேப்டாப் அல்லது டிவியில் தங்களுக்குப் பிடித்த வெப் சீரிஸைப் பார்த்தபடி சாப்பிட விரும்புவோம். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் உணவு உண்ணும் போது திரைப்படம் அல்லது வெப்சீரிஸ் பார்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால், உங்களின் இந்த பழக்கம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சரியாகத்தான் படித்தீர்கள்.

ஸ்கிரீன் டைமில் சாப்பிடுவது போன்ற பழக்கவழக்கங்களால் எடை அதிகரிப்பு பிரச்சனை மக்களிடையே வேகமாக அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து நிபுணர் அபூர்வா அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ஸ்கிரீன் டைமில் செய்யப்படும் 4 தவறுகள் பற்றி அவர் விவரித்துள்ளார். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Lose Tips: எளிதில் எடை குறைய வேண்டுமா.? இதை ஃபாளோ பண்ணுங்க.!

ஸ்கிரீன் டைம் எப்படி எடையை அதிகரிக்கும்?

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவோம்

நீங்கள் டிவி பார்க்கும் போது, ​​உங்கள் மனம் மிகவும் திசைதிருப்பப்படும். எனவே, நீங்கள் எவ்வளவு, என்ன சாப்பிடுகிறீர்கள் என்பதை மறந்து விடுவீர்கள். அதுமட்டுமல்லாமல், டி.வி., மொபைலை பார்த்தபடி ஏதாவது சாப்பிடும்போது, ​​நாம் அதில் பிஸியாக இருப்பதால், வயிறு நிறைந்ததா இல்லையா என்பது கூட தெரியாது.

அதிகப்படியான ஜங்க் ஃபுட்

சாப்பிடும் போது, ​​டிவி அல்லது மொபைல் ஃபோனைப் பயன்படுத்தினால் நாம் அதிகமாக ​​ஆரோக்கியமான உணவுகளுக்குப் பதிலாக ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவோம். இது மட்டுமின்றி, ஸ்கிரீன் டைமில், தரத்தை விட அதிக அளவில் சாப்பிட விரும்புகிறீர்கள், இதன் காரணமாக அதிக கலோரிகளை உட்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Weight Loss Drinks: உடல் எடை குறைய ஆப்பிள் சீடர் வினிகர் பயனற்றதாம்.. உண்மை இங்கே!

உடல் எடை அதிகரிக்கும் அபாயம்

டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது உடல் பருமன் அபாயத்தை அதிகரிக்கிறது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சிறு குழந்தைகளுக்கு. திரை நேரத்தில் உணவுகளை உட்கொள்வது உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை குறைப்பது மட்டுமல்லாமல், உடல் பருமனை அதிகரிக்கும்

வயிறு நிரம்பியதை உணர மாட்டீர்கள்

டி.வி-யின் முன் அமர்ந்து சாப்பிடும் போது, ​​உங்கள் மனம் முழுக்க டிவி பார்ப்பதில் மும்முரமாக இருக்கும். இதைச் செய்வதன் மூலம், அதிக உணவு உட்கொண்டாலும் உங்களுக்கு திருப்தி ஏற்படாது. மேலும், பசியாக உணர்வீர்கள்.

இந்த பதிவும் உதவலாம் : Pulses For Weight Loss: உடல் எடையை குறைக்க உதவும் 4 பருப்பு வகைகள் ஏவை? எப்படி சாப்பிடணும்?

அதிகரித்து வரும் எடையைக் குறைக்க அல்லது கட்டுப்படுத்த, சாப்பிடும் போது டிவியை அணைத்துவிட்டு உங்கள் மொபைல் போனை ஒதுக்கி வைக்கவும். இதனுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை ஊக்குவிக்கவும்.

Pic Courtesy: Freepik

Read Next

குளிர்காலத்தில் எவ்ளோ ஓவரான வெயிட்டையும் அசால்டாக குறைக்கும் கடுகு கீரை.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content