Natural home remedies to lose weight: அன்றாட வாழ்வில் மக்கள் பலரும் சந்திக்கக்கூடிய பொதுவான பிரச்சனைகளில் ஒன்று உடல் எடை அதிகரிப்பு ஆகும். அவ்வாறு உடல் எடையைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய ஜிம்மிற்குச் செல்வது, வீட்டில் உடல் செயல்பாட்டில் ஈடுபடுவது, உணவுமுறையைக் கையாள்வது உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளைக் கையாள்கின்றனர். எனினும், இயற்கையாகவே வீட்டிலேயே உடல் எடையை இழக்க விரும்புபவர்கள் சரியான உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ளலாம்.
இவ்வாறு வழக்கத்தில் சில மென்மையான மற்றும் மற்றும் பயனுள்ள வீட்டு எடை இழப்பு வைத்தியங்களைச் சேர்ப்பது, வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைப்பது போன்றவற்றின் மூலம் ஆரோக்கியமான இலக்குகளை அடையலாம். அவ்வாறு ஆரோக்கியமான இலக்குகளை நோக்கிய உடல் எடையை விரைவுபடுத்தலாம். அவ்வாறு, உடலில் காணப்படும் கூடுதல் எடையைக் குறைக்க நாம் பின்பற்ற வேண்டிய சில ஆரோக்கியமான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மடமடனு வெய்ட்டு கம்மியாகனுமா.? இந்த பழங்கள சாப்பிடுங்க..
எடையைக் குறைக்க உதவும் சிறந்த உணவுகள் மற்றும் பானங்கள்
ஹெல்த்சைட் தளத்தில் குறிப்பிட்ட படி, எடை இழப்பு பயணத்தை ஆதரிக்க, சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் இணைக்க உதவும் சில வீட்டு வைத்தியங்களைக் காணலாம்.
எலுமிச்சையுடன் தேன் தண்ணீர்
எலுமிச்சை மற்றும் தேன் இரண்டையும் ஒன்றாக இணைப்பது கொழுப்பை எரிப்பதை அதிகரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்ததாகும். இதன் அமிலத்தன்மை செரிமான நொதிகளைத் தூண்டுகிறது. அதே சமயம், இதில் சேர்க்கப்படும் தேன் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் ஒரு ப்ரீபயாடிக் ஆக செயல்படுகிறது.
இதற்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன் ஒரு தேக்கரண்டி தேனை கலக்க வேண்டும். இந்த வெதுவெதுப்பான எலுமிச்சை நீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது.
செலரி நீர்
இது ஒரு சிறந்த குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். இது உடலில் கலோரிகளை எரிப்பதை எளிதாக்கவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுவதாக ஆய்வில் கூறப்படுகிறது. இந்நிலையில், எடை இழப்பு முயற்சிகளை அதிகரிக்க தினமும் காலையில் வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கலாம். சில செலரி தண்டுகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து , பின்னர் கலவையை வடிகட்டி குடிக்க வேண்டும்.
முட்டைக்கோஸ்
இதில் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். எனவே இது எடை இழப்புக்கு ஒரு சிறந்த உணவாக அமைகிறது. இதற்கு இரவு உணவில் முட்டைக்கோஸைச் சேர்த்துக்கொள்ளலாம் அல்லது லேசான முட்டைக்கோஸ் சூப்பை அனுபவிக்கலாம். இது நம்மை முழுதாகவும் திருப்தியாகவும் வைத்திருக்க உதவுகிறது. அதே சமயம், இது கொழுப்பு இழப்பை ஊக்குவிக்கிறது.
உலர்ந்த அத்திப்பழங்கள்
இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இவை பசியை திறம்பட கட்டுப்படுத்த உதவுகிறது. இதற்கு ஆப்பிள் சீடர் வினிகரில் 5 முதல் 6 உலர்ந்த அத்திப்பழங்களை இரவு முழுவதும் ஊற வைத்து சாப்பிடலாம். காலையில், இவற்றை மென்று சாப்பிடுவது பசியை அடக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: இரவில் இவற்றை சாப்பிட ஆரம்பித்தால் தொங்கும் தொப்பை மறைந்துவிடும்.!
வெள்ளரிகள்
இது அதிக நீர்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறியாகும். இவை நம்பமுடியாத அளவிற்கு நீரேற்றத்தைத் தருகிறது. மேலும் இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால், அதிகப்படியான கலோரிகளை உட்கொள்ளாமல் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதை தனியாக சாப்பிடலாம் அல்லது சாலட் மூலப்பொருளாகவோ அல்லது வெள்ளரி சூப் போன்ற ரெசிபிகளை முயற்சிக்கலாம்.
இதற்கு வெள்ளரிக்காயை தோல் நீக்கி அரைத்து, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் கருப்பு உப்பு சேர்த்து கலக்க வேண்டும். உகந்த முடிவுகளுக்கு இந்த புத்துணர்ச்சியூட்டும் சூப்பை தினமும் காலையில் குடிக்கலாம்.
கற்றாழை
ஆய்வு ஒன்றில், கற்றாழையில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ ஆகியவை இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் திறன் உள்ளிட்ட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. கற்றாழை கூழை அரைத்து, அதில் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். குறிப்பிடத்தக்க நன்மைகளைப் பெற இதை தினமும் ஒரு மாதத்திற்கு உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம்: எடையை மடமடவென குறைக்க இரவில் நீங்க சாப்பிட சூப்பர் உணவுகள்
Image Source: Freepik