ஸ்ட்ரெஸ் இருந்த பீரியட்ஸ் பெயின் அதிகமா இருக்குமா.? நிபுணர் கருத்து இங்கே..

மன அழுத்தம் மாதவிடாய் வலியை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.? இதன் உண்மைதன்மை குறித்து டாக்டர். ரம்யா ஜெயராமன், இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் கூறியதை முழுமையாக அறிய பதிவை முழுமையாக படிக்கவும். 
  • SHARE
  • FOLLOW
ஸ்ட்ரெஸ் இருந்த பீரியட்ஸ் பெயின் அதிகமா இருக்குமா.? நிபுணர் கருத்து இங்கே..

மன அழுத்தம் என்பது உங்கள் சூழலில் ஏற்படும் மாற்றங்களுக்கான உளவியல் மற்றும் உடலியல் எதிர்வினையாகும். இது உணர்ச்சி, உடல், சமூக அல்லது கலாச்சாரம் காரணமாக ஏற்படலாம். மன அழுத்தம் கடுமையான அல்லது நாள்பட்டதாக இருக்கலாம். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கலாம்.

பெண்களை பொறுத்தவரை மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுடன் நாள்பட்ட மன அழுத்தம் தொடர்புடையதாக இருக்கலாம். தீவிர அல்லது அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளில் இருந்து வரும் மன அழுத்தம் மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ஆனால் மன அழுத்தம் மாதவிடாய் காலத்தில் வலியை அதிகரிக்குமா என்ற கேள்வி, பலரிடம் நிலவி வருகிறது. சிலர் இதை நம்புகிறார்கள். இதன் உண்மைதன்மை குறித்து கருவுறுதல் நிபுணரும், லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணருமான, டாக்டர். ரம்யா ஜெயராமன், இணைய தளத்தில் பகிர்ந்துள்ளார். இவர் கூறியதை முழுமையாக அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.

artical  - 2024-12-24T115050.701

மன அழுத்தம் மாதவிடாய் வலியை அதிகரிக்குமா? (Can stress make your period more painful)

மன அழுத்தம் மாதவிடாய் வலியை அதிகரிக்கும் என்பது உண்மையல்ல. இதற்கு பல காரணங்கள் உள்ளதாக டாக்டர். ரம்யா விளக்கியுள்ளார். அதாவது வலிமிகுந்த மாதவிடாய், கருப்பை சுறுக்கத்தாலும், இரத்த வெளியேற்றத்தின் போதும் ஏற்படுவதாக அவர் கூறினார்.

ஆனால் மாதவிடாய் வலி அதிகமாக இருக்கும் போதும், மருந்துகள் எடுத்துக்கொண்ட பின்னும் வலி தொடர்கிறது என்ற நிலையில், கண்டிப்பாக மகப்பேறு மருத்துவரை அணுக வேண்டும் என்று டாக்டர். ரம்யா அறிவுறுத்தினார்.

மேலும் படிக்க: Short Period: உங்களுக்கு மாதவிடாயின் போது 3 நாட்கள் மட்டுமே இரத்தப்போக்கு உள்ளதா? காரணம் என்ன?

எதனால் வலிமிகுந்த மாதவிடாய் ஏற்படுகிறது? (What causes painful periods)

வலிமிகுந்த மாதவிடாய் ஏற்படுவதற்கு ஃபைப்ராய்டு மற்றும் எண்டோமெட்ரியோசிஸ் காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் கூறினார். மேலும் அடினோமயோசிஸ் அல்லது மிகவும் பெல்விஸ் தொற்று இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளர்.

ஆனால், உங்கள் சுழற்சியின் போது நீங்கள் அதிகரித்த வலியால் அவதுயுற்றாலோ, OTC எடுத்தபோதிலும் வலி குறையவில்லை என்றாலோ, உங்கள் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதிக்க வேண்டும் என்று டாக்டர். ரம்யா அறிவுறுத்தினார்.

artical  - 2024-12-24T115123.802

மாதவிடாய் வலி குறைய டிப்ஸ் (Tips to reduce Periods Pain)

மாதவிடாய் வலியைக் குறைக்க உதவும் 7 குறிப்புகளை டாக்டர். ரம்யா இங்கே பகிர்ந்துள்ளார். அவை..

* உங்கள் இடுப்பு பகுதி அல்லது பின்புறத்தில் வெப்பமூட்டும் பேட் பயன்படுத்தவும்.

* உங்கள் வயிற்றை லேசாக மசாஜ் செய்யவும்.

* சூடான குளியல் எடுக்கவும்.

* வழக்கமான உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.

* லேசான, ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்ணுங்கள்.

* மூலிகை தேநீரை அனுபவிக்கவும்.

* அதிக நீரேற்றத்துடன் இருங்கள்.

{இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram}

Image Source: Freepik

Read Next

Period Cravings: மாதவிடாய்க்கு முன் ஏன் சிப்ஸ் மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிடக்கூடாது? காரணம் இதோ!

Disclaimer