Doctor Verified

இந்த 4 உணவுகள் உங்க நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. இத கட்டாயம் தவிர்க்கணும்

Worst foods for nerve health you should avoid: சில ஆரோக்கியமற்ற உணவுகள் நரம்பு ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். இதில் நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உணவுகள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இந்த 4 உணவுகள் உங்க நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.. இத கட்டாயம் தவிர்க்கணும்


Foods that can damage your nerves and nervous system: நம் உடலில் காணப்படும் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக நரம்புகள் அமைகின்றன. இவை மின்-வேதியியல் சிக்னல்களை உடலின் பாகங்களுக்கு கடத்தும் நரம்பு செல்களின் நீட்சிகளாகும். இது நரம்பு மண்டலத்தின் முக்கிய பகுதியாக செயல்பட்டு, தகவல்களை மூளை, தண்டுவடம் மற்றும் உடலின் பிற பகுதிகளுக்கு இடையே கடத்துகிறது. இது போன்ற முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிக்கும் நரம்புகளை நாம் ஆரோக்கியமாக பாதுகாப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆனால், இத்தகைய நரம்புகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில், நம் அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் சில உணவுகள் அமைகின்றன. இதில் எந்தெந்த உணவுகள் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது என்பது குறித்து மருத்துவர் பிள்ளை அவர்கள் Ask Doctor Pillai Tamil யூடியூப் சேனலில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

அவரின் கூற்றுப்படி, “நரம்புகளை சேதப்படுத்தும் உணவுகளை நீங்கள் அறிந்திருந்திருக்கலாம். அதை முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், குறைந்தபட்சம் அதைக் குறைக்கவும். மேலும், இவ்வாறு குறைக்கும்போது, உங்கள் நரம்பு மண்டலம் பாதிக்கப்படாது” என்று கூறியுள்ளார். நரம்பு மண்டலம் ஏன் முக்கியமானது என்றால் நாம் முன்னரே பார்த்தது போல், நரம்புகள் தான் நம் மூளையை நம் உடலுடன் இணைக்கின்றன. இந்நிலையில், நரம்பு பிரச்சனை ஏற்பட்டால், அது சிறிய வலியிலிருந்து பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் கடுமையான பிரச்சனைகள் வரை நமக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

இந்த பதிவும் உதவலாம்: நரம்புகளை வலுவாக்க வேண்டுமா.? இதை சாப்பிடவும்…

நரம்புகளை சேதப்படுத்தும் நான்கு உணவுகள்

வறுத்த உணவுகள்

இன்றைய காலத்தில் பலரும் சாதாரண உருளைக்கிழங்கு சிப்ஸ் முதல் பெரிய மீன், ஆட்டிறைச்சி வரை எதையும் வறுத்து சாப்பிடுவதையே பழக்கமாகக் கொண்டுள்ளனர். நாம் வீட்டிலேயே உணவுகளை வறுத்து சாப்பிடுகிறோம். பெரும்பாலான நேரங்களில் வறுத்த உணவுகளை ஆர்டர் செய்து கடைகளில் வாங்கி சாப்பிடுகிறோம். குறிப்பாக, வறுத்த உணவுகளைச் சாப்பிடுவது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் மருத்துவர் கூறுகிறார்.

எனவே இந்த வறுத்த உணவுகளை உடலில் மீண்டும் மீண்டும் சேர்ப்பது அவை நேரடியாக நரம்புகளில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும், நரம்பு செல்களைப் பார்த்தால், அவை நம் தசைகளைப் போல அல்ல. இது மிகவும் உணர்திறன் வாய்ந்ததாகும். இதை சரிசெய்வது மிகவும் கடினமாகும்.

இந்நிலையில், நரம்புகளில் வீக்கம் அதிகரிக்கும் போது, நம் உடலில் இருந்து இரத்த ஓட்டம் அனைத்து பகுதிகளையும் அடையும் போது மட்டுமே அனைத்தும் சரியாக வேலை செய்யும். ஆனால், நரம்புக்கு செல்லும் இரத்த ஓட்டம் பலவீனமடையலாம். இவை வீக்கத்தை அதிகரிக்கிறது. இதனால்தான் ஒரு நரம்பு பாதிக்கப்படும்போது, நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும், தசைகளும் தானாகவே பாதிக்கப்படுகிறது. பொதுவாக, நமக்கு பிடித்த உணவுகளை நாம் சாப்பிட்டு விட்டாலும், அதனால் நமக்கு எதுவும் நடக்காது. ஆனால், எல்லாம் ஒரே நாளில் நடக்காது. ஏனெனில் அதிகப்படியான அமுதமும் விஷமாகலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

நாம் பெரும்பாலான நேரங்களில், குப்பை உணவை ஆர்டர் செய்து, அந்த தீங்கு விளைவிக்கும் உணவுகளை சாப்பிடுகிறோம். ஆனால், இது நரம்பு மண்டலத்தை அழிக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலுமாகத் தவிர்க்கச் சொல்வது முற்றிலும் சாத்தியமற்றது. எனினும், வீட்டிலேயே செய்த ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய் உட்பட அனைத்து வகையான எண்ணெயையும் பயன்படுத்தி வீட்டில் வறுத்த உணவைச் சாப்பிடுவோம். நரம்பு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளில் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உள்ளது. நாம் வீட்டிலேயே மீன், ஆட்டிறைச்சி, கோழி அல்லது காய்கறிகளை சமைத்து சாப்பிடும் வரை எந்த பிரச்சனையும் இல்லை.

நாம் ஏற்கனவே பார்த்தது போல, நரம்பு மிகவும் உணர்திறன் வாய்ந்து. இதனால், அனைத்து செல்களையும் பார்த்தால், அவை மிகவும் உணர்திறன் கொண்டதாகும். இந்த வகையான நேரடி தொடர்பு ஏற்படும் போது, அது நரம்பில் வீக்கம், உணர்திறன் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இது ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கலாம். இது மூட்டுவலி வரையிலான பிரச்சனைகளை எதிர்கொள்கிறோம். எனவே பதப்படுத்தப்பட்ட உணவை முழுமையாக சமைப்பது நல்லது. முடிந்தவரை, இது சிறிது சிறிதாக குறைக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Nervous System: நரம்பு மண்டலத்தை மேம்படுத்த உங்கள் உணவில் இந்த 5 முக்கிய மாற்றங்களை செய்யுங்க! 

காபி அருந்துவது

நரம்புகளுக்கு மட்டுமல்லாமல் மூளைக்கு தீங்கு விளைவிப்பதாக காபி குடிப்பது அடங்குகிறது. பலரும் காபி குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். இதை சுவைக்காகவோ, மன அழுத்தத்திற்காகவோ குடிக்கின்றனர். பதட்டம் இருப்பவர்கள், மன அழுத்தம் கொண்டிருப்பவர்கள் காபி குடிப்பதன் மூலம் புத்துணர்ச்சியைத் தருவதாக உணர்கின்றனர்.

மன அழுத்தத்தைக் குறைக்க போதுமான அளவு காபி குடிக்கலாம். ஆனால் சிலர் ஐந்து அல்லது ஆறு முறை காபி குடிக்கின்றனர். குறிப்பாக ஃபில்டர் காபி என்றால் அதிகளவு குடிப்பதை விரும்புகின்றனர். அதிகளவு காபி குடிக்கும் போது, நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தசை பிடிப்பு மற்றும் சேதத்திற்கு வழிவகுக்கும் என கூறுகிறார். அதிகபட்சமாக, ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை குடிக்கலாம்.

மீன் சாப்பிடுவது

நரம்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் உணவுகளில் மீன்களும் அடங்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? பொதுவாக மீன் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். புரத உணவுகளில் மீன் மிக முக்கியமான மெலிந்த புரதம் ஆகும். இதில் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆனால், மீனில் அதிகளவிலான பாதரசம் உள்ளது. சில மீன்களின் தோல் பார்ப்பதற்கு வெள்ளி போல மின்னுவது மட்டுமல்லாமல், அழகான வெள்ளை நிறத்தில் பிரகாசிக்கும். அதற்கு காரணம், அதில் உள்ள பாதரசம் ஆகும்.

அதிக பாதரச உள்ளடக்கம் உள்ள மீன்களின் தோலை நீக்கி சாப்பிடுவதால் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில நேரங்களில் நாம் தோலை அகற்றாமல் சாப்பிடுகிறோம். ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்படும் இந்த பாதரசம் ஒரு இரசாயனமாகக் கருதப்படுகிறது. இது நரம்புகளின் செயல்பாடுகளைப் பாதிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: நரம்பு பிரச்சனை சரியாக மாதுளை மட்டுமே போதும்!

Image Source: Freepik

Read Next

உடலை உள்ளிருந்து பாதுகாக்க உதவும் சிறந்த காய்கறிகள் இதோ! மருத்துவர் பரிந்துரைத்தது

Disclaimer

குறிச்சொற்கள்