Karuvadu Benefits: கருவாடு என்றவுடன் முகம் சுளிக்கும் பலர் இருக்கிறார்கள். ஆரோக்கியமான சுவை முறை முற்றிலும் மாறியதே இதற்கு காரணமாகும். அனைவரும் ஜங்க் ஃபுட் பிரியராக மாறிவிட்டார்கள்.
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிந்தும் சற்றும் சிந்திக்காமல் பலர் ஜங்க் ஃபுட்டை விரும்பி சாப்பிடுகிறார்கள். இதனால் ஆரோக்கியமான உணவுகள் பலவற்றின் முக்கியத்துவம் குறைந்துக் கொண்டே வருகிறது. இதில் கருவாடு பிரதான ஒன்று.
கருவாடு ஆரோக்கிய நன்மைகள்
மீனை விரும்பி சாப்பிடும் பலரும் கருவாட்டை விரும்பி சாப்பிடுவதில்லை. காரணம் அதன் வாசனை மற்றும் சுவை உள்ளிட்டவை இருக்கலாம். கருவாட்டை தொடர்ந்து சாப்பிட்டு அதன் சுவையை பழக்கிக் கொண்டால், அதை மிஞ்சிய சூப்பர் ஃபுட் ஏதுமில்லை என்றால் நம்ப முடிகிறதா?
கருவாட்டில் நிறைந்துள்ள மருத்துவ குணங்கள்
கருவாட்டில் ஏணைய மருத்துவ குணங்கள் உள்ளது. நமது பெற்றோரில் பலரும் கருவாட்டை விரும்பி சாப்பிடுவார்கள். குறிப்பாக பழைய சோற்றில் உப்பு போதுமான அளவு சேர்த்து கலந்துக் கொள்ளவும். கருவாட்டை வெங்காயம், தக்காளி போட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். பழைய சோற்றுக்கு கருவாட்டை சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும்.
அதேபோல் சுடச்சுட சோறு போட்டு அதில் கருவாடு குழம்பு ஊற்றி சாப்பிட்டால் அதன் சுவையே வேறு. பலரும் இதை ஒவ்வாத உணவாகவே பார்க்கிறார்கள். ஒருநிமிடம் இந்த கருவாட்டின் நன்மைகளை படியுங்கள். பிறகு விஷயம் என்னவென்று தெரியும்?
சிறந்த புரத உணவு
கருவாட்டில் மருத்துவ நன்மைகள் ஏராளமாக உள்ளது. அதேபோல் குறிப்பிட்ட ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும் என்றால் இதில் கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. 80 முதல் 85 சதவீதம் வரை வெறும் புரதம் மட்டுமே இதில் உள்ளது. புரதம் உடல் ஆரோக்கியத்திற்கு இன்றிமையாத ஒன்று.
கருவாட்டை தொடர்ந்து சாப்பிட்டால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மையும் உள்ளது. அதேபோல் இருமல் மற்றும் சளி உள்ளவர்களுக்கு கருவாட்டு குழம்பு அதீத மருந்தாகும். உடல் நல பாதிப்புக்கும் கருவாடு சிறந்த தீர்வாகும்.
பெண்களுக்கு கருவாடு மிக முக்கியம்
வாத கப நோய்களை கட்டுப்படுத்துவதோடு மாதவிலக்கு பிரச்சனைகளையும் சரிசெய்ய கருவாடு உதவும் என்றால் நம்ப முடிகிறதா? கருவாட்டில் பல வகை உள்ளது. ஒவ்வொரு வகை கருவாடும் ஒவ்வொரு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.
நீர்ப்பை, கருப்பை பிரச்சனையை சரிசெய்ய கருவாடு பெருமளவு உதவுகிறது. அதுமட்டுமின்றி இரத்த ஓட்டத்தை சரிசெய்யவும் கருவாடு பெருமளவு உதவுகிறது. பலவகை மீன்களை விட அதை கருவாடாக சாப்பிடவதில் தான் அதிக நன்மை உள்ளது.
சிறந்த ஆற்றல் உணவு
உடலுக்கு போதிய ஆற்றலை கருவாடு முழுமையாக வழங்குகிறது. குறிப்பாக கொடுவா மீன் கருவாடு, நெத்திலி கருவாடு, நெய்மீன் கருவாடு ஆகியவை அதீத பலன்களை உடலுக்கு வழங்கும். மேலும் சொல்ல வேண்டும் என்றால் நண்பர்கள் என்றாலே நல்லவர்கள் கெட்ட நண்பர்கள் நல்ல நண்பர்கள் எல்லாம் ஏதுமில்லை என கூறுவது போல். கருவாடு என்றாலே நல்லதுதான். அனைத்து வகை கருவாடுகளும் உடலுக்கு நன்மை பயக்கும்.
கருவாடு முக்கிய குறிப்புகள்
கருவாடு சாப்பிடும்போது சில குறிப்புகளை பின்பற்றுவது அவசியம். கருவாடு சாப்பிட்ட பின் எக்காரணம் கொண்டும் மோர், தயிர், கீரை வகைகளை முற்றிலும் தவிர்க்கவும். அதேபோல் இதய நோய், சிறுநீரக நோய், தோல் பிரச்சனை, செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. தேவைப்பட்டால் மருத்துவர் ஆலோசனை பெற்ற பின்னரே இதை சாப்பிடவும்.