Sugarcane: பொங்கல் பண்டிகை வந்தாச்சு, அனைவருக்கும் இனிய பொங்கல் தின வாழ்த்துக்கள். இந்த தினத்தில் பொங்கலும், கரும்பும் தவிர்க்க முடியாத உணவாகும். இவை இரண்டும் ஆரோக்கியமான ஒன்று. அதேசமயத்தில் கரும்பு சாப்பிடும் போது சில குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். கரும்பு சாப்பிடும் சில விஷயங்களை கவனத்தில் கொள்ளவில்லை என்றால் இதன் பக்கவிளைவுகள் கடுமையாக இருக்கும்.
கரும்பு என்பது பொங்கல் பண்டிகையன்று உண்ணக் கூடியது என்றாலும் அனைத்து காலக்கட்டத்திலும் ஜூஸ் ஆக கிடைக்கக் கூடிய பானமாகும். கரும்பு போயேசியா (Poaceae) குடும்பத்தைச் சேர்ந்த, எப்போதும் விளையக்கூடிய ஒரு புல் வகை தாவரமாகும். அதேபோல் கரும்பானது பொதுவாக தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பயிரிடப்படுகிறது. கரும்பு நமக்கு வழங்கும் ஊட்டச்சத்து நன்மைகளின் காரணமாகவே அது பிரதான தாவரமாக விளைவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஹீல்ஸ் போட்டு நடக்கனும்.. ஆனா வலிக்கக்கூடாதா.? இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..
கரும்பு சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது
சில உணவுகளை சாப்பிட்ட உடனே தண்ணீர் தவறியும் குடிக்கக் கூடாது. இதில் பிரதான ஒன்றுதான் கரும்பு. கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாய்களில் புண் ஏற்படக் கூடும். இது சூட்டுப் புண் என கூறுவதுண்டு. எனவே தவறியும் கரும்பு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் கூடாது.
கரும்பு சாப்பிட்ட பின் எப்போது தண்ணீர் குடிக்கலாம்?
கரும்பு சாப்பிட்டப் பின் குறைந்தது 30 நிமிடங்களுக்கு பின்பு தான் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கரும்பில் கால்சியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதன்காரணமாக இதை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடித்தால் எதிர்வினை புரிந்து வயிற்று வலி, வயிற்று புண், வாயில் புண்களை ஏற்படுத்தும்.
ஏன் கரும்பு சாப்பிடக்கூடாது?
அனைத்து வகையான சர்க்கரைகளைப் போலவே, கரும்பும் சர்க்கரை நிறைந்தது. இதுவும் எடை அதிகரிப்புக்கு வழிவகுக்கக் கூடும். ஆசையாக இருக்கும்பட்சத்தில் அதை கட்டப்படுத்த வேண்டாம், அளவாக கரும்பு சாப்பிட்டு மகிழுங்கள்.
கரும்பு பக்க விளைவுகள்
அதிகப்படியான உட்கொள்ளல் எடை அதிகரிப்பு, இரத்த சர்க்கரை அளவு அல்லது பல் சிதைவுக்கு வழிவகுக்கும். கரும்பில் உள்ள பாலிகோகேனல் என்ற மூலப்பொருள் சிலருக்கு தூக்கமின்மை, வயிற்று வலி, தலைச்சுற்றல், தலைவலி மற்றும் எடை இழப்பை ஏற்படுத்தும்.
கரும்பு ஆரோக்கிய நன்மைகள்
சரி, கரும்பு முற்றிலும் பிரச்சனையா என்ற கேள்வி வரலாம். கரும்பு மூலம் ஏற்படும் பிரச்சனையை விட அதன்மூலம் கிடைக்கும் பலன்கள் மிக அதிகம். கரும்பு என்பது வயதான செயல்முறையை மெதுவாக்க உதவியாக இருக்கிறது. சமயத்தில் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்த உதவுகிறது. மேலும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் உதவும்.
அதேபோல் சிறுநீரக கற்களை எதிர்த்து போராடுவதோடு, பல் ஆரோக்கியத்தை பல மடங்கு மேம்படுத்துகிறது. அதேபோல் கரும்பு சாறு கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பெருமளவு உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.
piccourtesy: freepik